வத்தல் குழம்பு

தேதி: September 5, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுண்டைக்காய் வற்றல் - இருபது கிராம்
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்
வதக்கி அரைக்க:
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன்


 

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றலைப் பொரித்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அப்படியே முழுதாக வைக்கவும்.
தக்காளி, பெரிய வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி, பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
புளியை ஊறவைத்து நானூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு, வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி பின் புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்