உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கோங்குரா டால் ப்ரை

 


தேவையானப் பொருட்கள்

  • புளிச்ச கீரை - ஒரு கட்டு
  • சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
  • தக்காளி - இரண்டு
  • ப. மிளகாய் - மூன்று
  • து. பருப்பு - நூறு கிராம்
  • எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - கால் டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - இரண்டு கொத்து
  • உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
  • சாம்பார் பொடி - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

  • து. பருப்பில் இருநூறு மிலி தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
  • கீரையில் உள்ள நரம்பை நீக்கி நறுக்கி ஒரு டீ ஸ்பூன் எண்ணையில் நன்கு வதக்கி வைக்கவும்.
  • வெங்காயம் தக்காளியை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை இரண்டாக வாய் பிளந்தும் வைக்கவும்.
  • பருப்பு நன்கு வெந்ததும் தக்காளி, வெங்காயம், ப. மிளகாய், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • பின் கீரையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறுக மூடவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஐந்து நபர்களுக்கு பத்து நிமிடங்கள் இருபத்தைந்து நிமிடங்கள்
random food image


comments