கோதுமைரவை வடை

தேதி: September 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

சம்பா கோதுமைரவை - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
சோயா உருண்டைகள் - 10
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துருவல் - அரை கப்
ஜவ்வரிசி - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டியில் பாதியளவு
சர்க்கரை - ஒரு பின்ச்
ப்ரெட் தூள் - அரை கப்
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்


 

மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சம்பா கோதுமைரவை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவை 10 நிமிடம் வேக வைத்து குளிர்ந்த தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கோதுமையில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு போடவும். அதனுடன் வேக வைத்துள்ள சோயா, ஜவ்வரிசி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், வெங்காயம், சர்க்கரை இவற்றை ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, கரம் மசாலாத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் ப்ரெட் தூள் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கையால் எடுத்து உருட்டும் பதத்திற்கு கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவை சிறிய எலுமிச்சையளவு எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சத்தான, சுவையான சோயா கோதுமைரவை வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர். இந்த மாதிரி ரவை கூட பயன்படுத்தி வடை செய்வதை இப்ப தான் பார்க்கிறேன். கலக்கல். செய்துருவோம் சீக்கிரம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான வடையா இருக்கே செண்பகா. செய்து பாக்குறேன் லிஸ்ட்ல சேர்த்துருக்கேன்.

வடை வித்தியாசமா,சூப்பராயிருக்கு,.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு ரொம்பவும் பிடித்த சோயா மற்றும் கோதுமை இரண்டும் சேர்த்து வடை. அருமை. வித்தியாசமான குறிப்பு. இந்த வாரயிறுதி ஸ்நாக் இது தான். வாழ்த்துக்கள். குறிப்புக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செண்பகா,

சத்தான வடை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாவ்... கோதுமை ரவையில் வடைக்கூட செய்யலாமா? நல்ல ஐடியாவா இருக்கே! கூடவே சோயாவும் சேர்த்து,.... சூப்பர்ங்க செண்பகா! :)
கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். வித்தியாசமானதொரு ஹெல்தி குறிப்புக்கு பாராட்டுக்கள், பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ