www.arusuvai.com
ரவா புளி உப்புமா
தேவையானப் பொருட்கள்
- ரவை - அரை கிலோ
- வர மிளகாய் - மூன்று
- கடுகு & உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- புளி - ஒரு சிறிய எலுமிச்சயளவு
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- உப்பு - ஒரு டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
- வறுத்து பொடிக்க:
- வெந்தயம் - கால் டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை
- வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
- வெந்தயம், பெருங்காயத்தை வாசனை வர வறுத்து நன்றாக பொடித்து வைக்கவும்.
- புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி முக்கால் லிட்டர் கரைசலாக கரைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- புளி கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, கடலைப் பருப்பு, கிள்ளிய வர மிளகாய் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து, ரவையை போட்டு நன்றாக வதக்கவும்.
- ரவை நன்றாக வதங்கி வாசனை வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கொதிக்கும் புளிக்கரசலை எடுத்து ஊற்றவும்.
- கட்டி தட்டாமல் நன்றாக கிளறி ரவை வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
ஐந்து நிமிடங்கள் |
இருபது நிமிடங்கள் |