பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

எல்லாத்துலேயும் நல்லதும் உண்டு கேட்டதும் உண்டுதாங்க ஆனா கெட்டதுக்கு தானே அதிக சதவீதம் பயன்படுத்துறாங்க...

அன்புடன்
சந்திரகலா

"Silence is the best answer for all stupid questions.." "Smiling is the best reaction in all critical situations..."

god is love

எல்லாத்துலேயும் நல்லதும் உண்டு கேட்டதும் உண்டுதாங்க ஆனா கெட்டதுக்கு தானே அதிக சதவீதம் பயன்படுத்துறாங்க...

அன்புடன்
சந்திரகலா

"Silence is the best answer for all stupid questions.." "Smiling is the best reaction in all critical situations..."

god is love

நடுவர் அவர்களுக்கு வணக்கம்.... 75 வது பட்டிக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.. பள்ளி மானவர்களுக்கு செல்போன் அவசியம் என்று அணியில் வாதாட இருக்கிறேன்...
மிக மிக அவசியமான ஒன்று இப்ப செல்போன் இல்லைனா ஏதோ ஒன்ன நம்ம இலந்துட்ட மாதிரி feeling என்னமோ பள்ளி/கல்லூரி புள்ளைங்க
செல்போன் ஆனல மட்டும் கெட்டுப் போற மாதிரி பேசக்கூடாது எதிர் அணியினர்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

75 வது பட்டிமன்றம் என்ற சிறப்புமிக்க இந்த பட்டி ம்ன்றத்தை நடத்தும் நடுவருக்கு வாழ்த்துக்கள்...

மானவர்களுக்கு கைபேசி தேவை இல்லை என்பதே என் வாதம்..

// கைபேசி என்று இல்லை எந்த கருவி என்ற போதும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதை பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது.// நாங்களும் அதை தான் சொல்கிறோம் நடுவரே நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு ஆனால் நம் மக்கள் கெட்டத மட்டும் தான் எடுத்துக்கிறாங்க. அது தான் எல்லாருக்கு ஈஸியா ரீச் ஆகுது.நல்லதுக்காக செல்போன பயன் படுத்துற மாண்வர்கள் 100ல் 1% சதவீதம் தான்.மீதி இருக்குற 99% பேர் கெட்டு தான் போறாங்க.

செல்போனான நல்லது தான் நடக்குதுனா ஏன் பள்ளி/கல்லூரி நிர்வாகம் பள்ளி/கல்லூரிக்குள் செல்போன் பயன்படுத்த ஏன் தடை விதிக்கனும்? மாணவர்கள் எதிர் காலம் வீணாகிடக்கூடாதுனு தான? இதுல இருந்தே தெரியலயா நடுவரே மாணவ்ர்களுக்கு செல்போன் தேவையே இல்லைனு.

இன்னிக்கி இருக்கிற மாணவ்ர்கள் படிக்கிற வயசுல படிக்காம காதல்னா என்னனே தெரியாம காதலிச்சி வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறதுக்கு முக்கிய காரணமே செல்போன் அப்படிங்கிறத யாராலயாவது மறுக்க முடியுமா?

இப்போ இருக்குற பசங்கனாளும் சரி பொண்ணுங்கனாளும் சரி தூங்குற நேரம் தவிர மத்த நேரம் கைல போன வச்சி நோண்டிக்கிட்டே தான் இருக்காங்க. கேட்டா மெசேஜ் அனுப்புறாங்களாம்...எப்ப பார்த்தாலும் அதையே பாத்துட்டு இருந்தா எப்போ தான் படிக்கிறது சொல்லுங்க?அதையும் மீறி படிக்க உக்காந்தா டொய்னு ஒரு சவுண்டு என்ன சவுண்டுனு பாக்குறீங்களா? மெசேஜ் வர சவுண்டு ... உடனே மெசேஜ் எடுத்து பாப்பாங்க அதுக்கு ரிப்ளை.... இந்த ரிப்ளைக்கு அங்க இருந்து திரும்ப மெசேஜ் அப்புறம் அதுக்கு ரிப்ளை இப்படியே நேரம் போயிடும் அப்புறம் எங்க இருந்து படிக்கிறது சொல்லுங்க?

அப்புரம் பாத்தீங்கனா இப்போ வர போன்ல 2g,3g,4g னு எல்லா g யும் இருக்கு. அதுலயே நெட் யூஸ் பன்னி ஃபேஸ்புக்,டுவிட்டர் எல்லாத்தையும் பாக்குறது.இதோட நிறுத்துனா பரவாயில்லை கண்ட கண்ட சைட்டுக்கு போயி கண்ட கண்ட வீடியோவ பாக்குறது.இதனால சின்ன வயசுலயே தேவை இல்லாத எண்ணம் இதோட விளைவு தான் இப்போ பாலியல் வன்முறை அதிகமாயிருக்கு.

அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு நாம சின்ன வயசிலேயே போன் வாங்கி குடுக்குறதுனால பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இடைவெளி அதிகமாயிடுச்சி. பிள்ளைங்க எப்போ பாத்தாலும் மொபைல ப்ரண்ட்ஸொட சாட்டிங்லயே இருந்தா அப்புறம் எப்போ அம்மா அப்பா கூட பேசுவாங்க...

இப்போ நீங்க தைரியமா சொல்லுங்க நடுவரே இவ்வளவு கெடுதல் தர செல்போன் மாண்வர்களுக்கு தேவை இல்லைனு.

மீண்டும் வருவேன்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அப்பா இப்பத்தான் உறுப்படியா அருசுவைல என் பங்கும் சேருது.

நல்ல தலைப்பு நடுவருக்கு என் முதற்க்கண் வணக்கம் வாழ்த்துக்கள்.

நான் இங்கு பேச வந்திருக்கும் தலைப்பு என்னவெனில் கைப்பேசி அவசியமே.....

எல்லோரும் முறைக்காதீர்கள் என்ன செய்வது எதிர் அணி ஒன்று இருந்தால் தான் பட்டி சூடு பிடிக்கும்.என்னால் முடிந்த விளக்கத்தை தர பார்க்கிறேன்

கைப்பேசியினால் ஆபத்து என்றால்.... அது சகல வசதிகளும் உள்ள கைப்பேசியினால் தான் என்று சொல்லலாம்.

உதாரனத்திற்க்கு கேமரா ,இன்டெர்னெட், ப்ளூ டூத் போன்றவை.
இதுவெல்லாம் இல்லாமலும் கைப்பேசி இருக்கத்தான் செய்கிறது (அதை யாரு விரும்புரான்னு சொல்லுரீங்களா....)
அவற்றை பயண்படுத்துவதில் தப்பே இல்லை

எலக்ட்ரானிக் ஐடம் பெருகிய இந்த கால கட்டத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எவற்றால் எது பெருகுது என்ற விவாத்ததிற்க்கு நான் வர வில்லை.

இது போன்ற சமயங்களில் கைப்பேசியின் பங்களிப்பு பெரும் பலணாக உள்ளது.நாம் நம் பிள்ளைகளை அடிக்கடி ஃபோனில் அழைத்து விசாரித்து கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில் அந்த ஃபோன் பெற்றோர்களின் முழு கன்கானிப்பில் இருக்க வேண்டும்.
அந்த ஃபோனை குடு என்று கேட்டால் அவர்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் தரக்கூடியவர்கலாக இருக்க வேண்டும்.

அன்று நாம் படித்த ஐந்தாவது பாட புத்தகம் இன்று LKG லேயே வந்து விட்டது ஆனால் அன்று நமக்கு இருந்த அதே மூளையின் அளவு தான் இன்றும் அதில் மாற்றம் இல்லை.
இதற்க்கு ஈடு குடுக்கத்தான் இந்த மாதிரியான கருவிகள் நமக்கு தேவை படுகிறது.

முன்னாடியெல்லாம் பள்ளி கல்லூரியில் படிக்கும் பசங்க என்றால் பக்கத்து பக்கத்து வீட்டு பசங்களாக இருப்பார்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து படிப்பார்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்வார்கள்.

ஆனால் இன்றோ பைக் போன்றவைகளால் ஊர் விட்டு ஊர் வந்து படிக்கிறார்கள் ஹாஸ்ட்டலில் தங்கி படிக்கிறார்கள் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்து கொள்ள அவர்களுக்கு கைப்பேசி அவசியமே.

ஏன் எதையுமே கெட்ட கண்ணோட்டத்தில் பார்க்கனும் கைப்பேசியை நல்ல விதமாக பயன்படுத்தும் மாணவர்களும் எனக்கு தெரிந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்க்கு எனக்கு தெரிந்து என் அக்கா மகன் மற்று அவன் ஃப்ரன்ட்ஸ்.....

தெரியாமல் எத்தனையோ.....

சூ.... அப்பாடீ..... மூச்சி வாங்குது.
முடியலை....

SSaifudeen:)

//உதாரனத்திற்க்கு கேமரா ,இன்டெர்னெட், ப்ளூ டூத் போன்றவை.
இதுவெல்லாம் இல்லாமலும் கைப்பேசி இருக்கத்தான் செய்கிறது (அதை யாரு விரும்புரான்னு சொல்லுரீங்களா....)
அவற்றை பயண்படுத்துவதில் தப்பே இல்லை// எதிரணியே சொல்லிட்டாங்க கேமரா இண்டநெட் இருந்தா தப்பு நடக்குதுனு. எத்தனை பசங்க செங்கல் மொபைல் வாங்கி குடுத்தா ஏத்துப்பாங்க சொல்லுங்க. இப்போ இருக்குறவங்க ரொம்ப தெளிவு.

//ஆனால் அதே நேரத்தில் அந்த ஃபோன் பெற்றோர்களின் முழு கன்கானிப்பில் இருக்க வேண்டும்.
அந்த ஃபோனை குடு என்று கேட்டால் அவர்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் தரக்கூடியவர்கலாக இருக்க வேண்டும்.// எதுக்கு கண்காணிக்கனுனு எதிரணியினர் சொல்றாங்க? தப்பு நடக்க கூடாதுனு தானே? எதுக்கு போன் வாங்கி தரனும் எதுக்கு கண்காணிக்கனும் இதெல்லாம் தேவையா?வகை வகையா சமைச்சி வச்சிட்டு எதையும் சாப்பிடக்கூடாதுனு சொல்ற மாதிரி இருக்கு. இவங்க வாங்கி தருவாங்களாம் ஆனா தேவை இல்லாத விஷயத்துக்கு பயன் படுத்த் கூடாதுனு கண்காணிப்பாங்களாம் நல்ல காமெடி போங்க.

//முன்னாடியெல்லாம் பள்ளி கல்லூரியில் படிக்கும் பசங்க என்றால் பக்கத்து பக்கத்து வீட்டு பசங்களாக இருப்பார்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து படிப்பார்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்வார்கள்.// அப்படி சந்தேகம் கேக்கனும்னா அப்பா அம்மா மொபைல்க்கு போன் பன்னட்டும் இல்ல வீட்டுல லேண்ட் லைன் இருந்தா அதுல பன்னட்டும். அதுல எல்லாம் சந்தேகம் கேக்க கூடாதா என்ன? இல்ல கேட்டா சந்தேகம் தீராதா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அன்பான நடுவர் அவர்களுக்கும் முகம் தெரியா ஆருயிர் தோழிகளுக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்டிப்பாக கைப்பேசி அவசியமே என்ற தலைப்பில் வாதாட வந்துள்ளேன்.

நடுவர் அவர்களே நாம் குழந்தைகளாக இருந்த காலங்களில் இவ்வளவு குற்றங்கள் மலிந்திருக்கவில்லை.
நாமும் பத்திரமாக பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வந்தோம்.
கோவையில் நடந்த படுபாதக செயலை அனைத்து எதிரணியினரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
முஸ்கன், ரித்திக் என்ற இளம் குருத்துக்களை இரண்டு கயவர்கள் கசக்கி வீசினரே!
அந்த குட்டிபெண்ணிடம் கைபேசி மட்டும் இருந்திருந்தால் தன்னையும்
காத்துக்கொண்டு தன் தம்பியையும் காப்பாற்றியிருப்பாலே!

இதை எழுதும்பொழுதே கைகள் நடுங்கின்றன நடுவரே! கெட்டுப்போக வேண்டும் என்றால் எப்படிவேண்டுமானாலும் கெட்டூபோகாலாம்.
கைபேசி அவசியம் என்ற ஆணித்தரமான கருத்துக்களுடன் இன்னும் வருவேன்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//நான் இங்கு பேச வந்திருக்கும் தலைப்பு என்னவெனில் கைப்பேசி அவசியமே.....

எல்லோரும் முறைக்காதீர்கள் என்ன செய்வது எதிர் அணி ஒன்று இருந்தால் தான் பட்டி சூடு பிடிக்கும்.என்னால் முடிந்த விளக்கத்தை தர பார்க்கிறேன்///

பின்ன என்ன நடுவர் அவர்களே!!! எதிர் அணி தோழி ஆரம்பத்துலே ஒத்துக்கிட்டாங்க... சும்மா லு லு லாய்க்கு தான் பேசுறாங்கலாம்... உண்மையா அவங்க சொல்லலை பா....

//கைப்பேசியினால் ஆபத்து என்றால்.... அது சகல வசதிகளும் உள்ள கைப்பேசியினால் தான் என்று சொல்லலாம்.//

ஆபத்து சாதாரண கை பேசி ல கூட இருக்கு... தேவையற்ற எதிர் பாலின நட்பிடம் தொடர்ந்து பேசி கொண்டிருப்பது ஏதும் அறியா வயதில் காதல் என்பது போன்ற மாயவலையில் சிக்க வைக்கும்... இது தேவையற்ற ஒன்றே!!! (அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் நடுவர் அவர்களே. இது தேவையா னு நீங்களே யோசிங்க...

//எலக்ட்ரானிக் ஐடம் பெருகிய இந்த கால கட்டத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எவற்றால் எது பெருகுது என்ற விவாத்ததிற்க்கு நான் வர வில்லை.

இது போன்ற சமயங்களில் கைப்பேசியின் பங்களிப்பு பெரும் பலணாக உள்ளது.நாம் நம் பிள்ளைகளை அடிக்கடி ஃபோனில் அழைத்து விசாரித்து கொள்ளலாம்.//

இந்த கொள்ளை பெருக இந்த கைபேசியும் முக்கிய காரணம் தான் நடுவர் அவர்களே... இந்த பிள்ளைங்க போற வழி எல்லாம் சும்மாவா போவாங்க... ஒண்ணு கீழ குனிஞ்சு மெசேஜ் அனுப்பிக்கிட்டே போவாங்க... (இந்த காலத்து பொண்ணுங்க, பசங்க குனிஞ்ச தலை நிமிர மாட்டாங்க ) இல்ல கால் பண்ணி பேசிக்கிட்டே போவாங்க. இதை பார்க்கிறவங்களுக்கே தெரிஞ்சு போகும். செல் எல்லாம் வச்சு இருக்காங்க... நல்ல டப்பு பார்ட்டி னு... நீங்க பாட்டுக்க மெசேஜ் பண்ண வேண்டியது தான்... அவங்க பாட்டுக்க உங்க bag யோ, மொபைலை யோ ஆட்டையை போட வேண்டியது தான்....

//ஃபோன் பெற்றோர்களின் முழு கன்கானிப்பில் இருக்க வேண்டும்.//

பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்ட சொல்றாங்க எதிர் அணி தோழி...

//பள்ளி கல்லூரியில் படிக்கும் பசங்க என்றால் பக்கத்து பக்கத்து வீட்டு பசங்களாக இருப்பார்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து படிப்பார்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்வார்கள்.//

அப்படியே சந்தேகத்தை தீர்த்துட்டாலும்.... கிளாஸ் நடக்கும் போதே இந்த காலத்து பிள்ளைங்க செல் போன் ல எதிர்த்த பெஞ்ச் ல பிள்ளைக்கு மெசேஜ் அனுப்பி விளையாடுறாங்க... அப்போ ஒழுங்கா கவனிச்சா எதுக்கு சந்தேகம் வர போகுது... அப்படியே வந்தா tution போகலாமே (செல் போன் பில் க்கு tution fees பரவாயில்லை நடுவரே... உபயோகமும் கூட)

திரும்ப வருவேன் .......

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//கோவையில் நடந்த படுபாதக செயலை அனைத்து எதிரணியினரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
முஸ்கன், ரித்திக் என்ற இளம் குருத்துக்களை இரண்டு கயவர்கள் கசக்கி வீசினரே!
அந்த குட்டிபெண்ணிடம் கைபேசி மட்டும் இருந்திருந்தால் தன்னையும்
காத்துக்கொண்டு தன் தம்பியையும் காப்பாற்றியிருப்பாலே!// இவ்வளவு திட்டமிட்டு குழந்தைகளை கடத்துபவ்ர்கள் அவர்கள் வைத்டிருக்கும் கைபேசியை மட்டும் அவர்களிடம் விட்டு வைப்பார்களா. அப்படியே அவர்கள் கவனிக்கவில்லை என்றாலும் அந்த பெண் அவர்கள் பெற்றோர் நம்பரை டயல் செய்து பேசும் வரை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா கடத்தல் காரர்கள்? கடத்த வெண்டும்னு திட்டம் போடுறவங்க எல்லாவற்றையும் யோசிச்சி தான் பண்ணுவாங்க.

// கெட்டுப்போக வேண்டும் என்றால் எப்படிவேண்டுமானாலும் கெட்டூபோகாலாம்.//
அதை தான் நாங்களும் சொல்கிறோம் கெட்டு போறதுக்கு செல்போனும் ஒரு வழி . தெரிஞ்சே எதுக்கு நம்ம குழந்தைகளை நாம் பாழுங்கிணற்றில் தள்ளனும்??? நமக்கு தெரியாம எவ்வளவோ தப்பு பண்ணி கெட்டு போனாலும் நமக்கு தெரிஞ்ச தப்பு செய்ய தூண்டுற செல்போன வாங்கி கொடுக்காம ஒரு சில தவறையாவது தடுக்கலாம் இல்லையா?

அதுக்காக நான் எல்லாரையும் தப்பு பண்ணுறதுக்காக தான் செல்போன் பயன்படுத்துறாங்ஞு சொல்ல வரல. செல்போன் வாங்கி கொடுத்தும் தப்பு பண்ணாத மாணவர்களும் இருக்காங்க அவங்கள பத்தி பிரச்சனையே இல்ல. தப்பு பண்ணுறவங்களால எத்தனை பேரோட வாழ்க்கை நாசமா போகுது இதெல்லாம் தேவையா? எத்தனை பேரு செல்போன் கேமரால பொண்ணுங்கள தப்பா படம் பிடிச்சி அத நெட்ல போட்டு அதனால எத்தனை பொண்ணுங்க தற்கொலை ப்ண்ணுறாங்க?அந்த பொண்ணுங்க வாழ்க்கைக்கு யாரு பதில் சொல்லுவா? அந்த பொண்ண பெத்தவங்க மனசு என்ன பாடு படும்.இதெல்லாம் நல்லா யோசிச்சி பாருங்க நடுவரே. யோசிச்சி நல்ல முடிவா சொல்லுவீங்கனு நம்புறேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எந்த ஒரு பொருளிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. தீ சுடும் என்பதற்காக நாம் சமைக்காமல் இருக்கிறோமா? வண்டி வாகனங்களில் சென்றால் விபத்து நடக்கும் என்று நடராஜா சர்வீஸ்லதான் போறோமா? எதையும் கவனமுடனும், நாகரீகமாகவும் கையாள கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தார்மீக கடமை!எந்தப்பொருளுமே கிடைக்கும் வரைதான். ஒருவாரம் அதைப்பற்றிய நினைவுகள் தூக்கத்திலும் கூட இருக்கும், பிறகு வேறொன்றுமில்லை இவ்வளவுதான் விஷயம் என்று தூக்கிப்போட்டுட்டுவாங்க!

#//அப்புரம் பாத்தீங்கனா இப்போ வர போன்ல 2g,3g,4g னு எல்லா g யும் இருக்கு. அதுலயே நெட் யூஸ் பன்னி ஃபேஸ்புக்,டுவிட்டர் எல்லாத்தையும் பாக்குறது.இதோட நிறுத்துனா பரவாயில்லை கண்ட கண்ட சைட்டுக்கு போயி கண்ட கண்ட வீடியோவ பாக்குறது.இதனால சின்ன வயசுலயே தேவை இல்லாத எண்ணம் இதோட விளைவு தான் இப்போ பாலியல் வன்முறை அதிகமாயிருக்கு//
ஏங்க இதுக்கெல்லாம் எதுக்குங்க கைபேசி இன்ட்ர்னெட் பிரவுசிங் சென்டர்தான் வீதிக்கு நாலு இருக்குதே! டாஸ்மார்க்மாதிரி மக்கள் நடமாட்டம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இருக்கே! கைபேசிங்கிறது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான தொலைதொடர்பு சாதனமாத்தான் பார்க்கணுமே தவிர எதிரணி தோழிகள் கூறுவதுபோல அல்ல நடுவர் அவர்களே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்