பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

//எந்த ஒரு பொருளிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. தீ சுடும் என்பதற்காக நாம் சமைக்காமல் இருக்கிறோமா? வண்டி வாகனங்களில் சென்றால் விபத்து நடக்கும் என்று நடராஜா சர்வீஸ்லதான் போறோமா?///

தீ சுடும் தான்.. அதுக்காக நாம சமைக்காம இருக்க போறதும் இல்லை தான்... ஆனா நம்ம குழந்தைகளை சமைக்க விட போறது இல்லை... வாகனங்களில் விபத்து நடக்கும் தான்... அதுக்காக போகாம இருக்க மாட்டோம்... பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டோம்... எல்லாத்துக்கும் ஒரு வயசு, அனுபவம் தேவை... அது வரை காத்திருக்க தான் சொல்றோம்... நம்ம பிள்ளைங்க ஒரு பருவத்தை கடந்த பின் அவங்களும் செல் உபயோகிக்கலாம்...

//கைபேசிங்கிறது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான தொலைதொடர்பு சாதனமாத்தான் பார்க்கணுமே தவிர எதிரணி தோழிகள் கூறுவதுபோல அல்ல நடுவர் அவர்களே!//

ஆஹா.. பிள்ளைகளோட கால் ரிஜிஸ்டர், இன்பாக்ஸ் பார்த்த தானே தெரியும்... செல்போன் வாங்கி கொடுத்த அப்பா அம்மா கு எத்தனை முறை பேசியிருக்காங்க? ஃபிரண்ட்ஸ் கு எத்தனை முறை பேசியிருக்காங்க னு???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவரே! நான் உங்கள்ட்ட ஒண்ணு கேட்குறேன் எதுக்காக மாணவர்கள் ஃபோன் யூஸ் பண்ணலாமா வேண்டாமான்னு கேட்குறீங்க இதுனால அவங்க தப்பான செயல்களில் ஈடுபடுவார்கள் என்று தானே....?

அப்படி பார்க்க போனால் உலகத்தில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் மாணவர்கள் தான் காரணமா?.
///// என்ன இது வடிவேல் சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமாவுல இருக்கு////.

படிக்காத சில விஷமிகளும் பெரிய பெரிய தவறுகளை ஃபோன் மூலம் செய்ய தான் செய்கிறார்கள்.
நல்ல வழியில் செல்வதும் கெட்ட வழியில் செல்வதும் அவங்க அவங்க மன நிலையை பொறுத்து.

நீங்க விளம்பரங்களில் பாருங்க அதிகமான ஃபோன் விளம்பரங்கல் காலேஜ் ஸ்டூடன்டை மையமா வைத்து தான் எடுக்குறாங்க.அப்படியென்றால் வீட்டில் தொலைக்காட்ச்சி, கம்ப்யூட்டர் எதுவும் வைக்காதீர்கள் உங்க பசங்களை வெளியே விடாதீர்கள்.
இல்லையென்றால் அவர்களுக்கு ஆசை வர தான் செய்யும்.

////எதுக்கு போன் வாங்கி தரனும் எதுக்கு கண்காணிக்கனும் இதெல்லாம் தேவையா?////
கண்கானிங்க நம் பிள்ளைகல் தானே அவர்கள் ஆசையை நிறைவேற்றுவதையும் அவர்களை பார்த்து கொள்வதையும் விட நமக்கு வேறென்ன பெரிய வேலை.

இந்த கால கட்டத்தில் பல துறைகளில் முன்னேறி கொண்டு இருக்கும் மாணவர்கள் அனைவருமே கைப்பேசி பயண் படுத்துனவர்களாகத்தான் இருக்கும் ஏன் அவர்கள் ஒழுங்கா இல்லையா.......?????

மீண்டும் வறேன் சூடான விவாதங்களோடு அவசரமா வெளியே போறேன்

SSaifudeen:)

#//இன்னிக்கி இருக்கிற மாணவ்ர்கள் படிக்கிற வயசுல படிக்காம காதல்னா என்னனே தெரியாம காதலிச்சி வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறதுக்கு முக்கிய காரணமே செல்போன் அப்படிங்கிறத யாராலயாவது மறுக்க முடியுமா?
இப்போ இருக்குற பசங்கனாளும் சரி பொண்ணுங்கனாளும் சரி தூங்குற நேரம் தவிர மத்த நேரம் கைல போன வச்சி நோண்டிக்கிட்டே தான் இருக்காங்க. கேட்டா மெசேஜ் அனுப்புறாங்களாம்...எப்ப பார்த்தாலும் அதையே பாத்துட்டு இருந்தா எப்போ தான் படிக்கிறது சொல்லுங்க?அதையும் மீறி படிக்க உக்காந்தா டொய்னு ஒரு சவுண்டு என்ன சவுண்டுனு பாக்குறீங்களா? மெசேஜ் வர சவுண்டு ... உடனே மெசேஜ் எடுத்து பாப்பாங்க அதுக்கு ரிப்ளை.... இந்த ரிப்ளைக்கு அங்க இருந்து திரும்ப மெசேஜ் அப்புறம் அதுக்கு ரிப்ளை இப்படியே நேரம் போயிடும் அப்புறம் எங்க இருந்து படிக்கிறது சொல்லுங்க?#//
தொலைக்காட்சில வர்ற இரட்டை அர்த்த சிரிப்புகளும், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளையும் பார்த்து கெட்டுப்போகாத குழந்தைகளா கைபேசினால கெட்டுப்போகப் போறாங்க!
நடுவரே!இப்ப சில பள்ளிகல தவிர்த்து பல பள்ளிகுழந்தைகள் டியூஷன் போகவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறாங்க! 10த், +2 நா கேட்கவே வேண்டாம். கைபேசி கொடுத்தனுப்பவேண்டியது அவசியமாகுது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//ஏங்க இதுக்கெல்லாம் எதுக்குங்க கைபேசி இன்ட்ர்னெட் பிரவுசிங் சென்டர்தான் வீதிக்கு நாலு இருக்குதே! டாஸ்மார்க்மாதிரி மக்கள் நடமாட்டம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இருக்கே! கைபேசிங்கிறது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான தொலைதொடர்பு சாதனமாத்தான் பார்க்கணுமே தவிர எதிரணி தோழிகள் கூறுவதுபோல அல்ல நடுவர் அவர்களே!// நாங்க என்ன சொல்ல வறாம்னு எதிரணிக்கு புரியல போல ??? ப்ரவுசிங் செண்டருக்கு போயி கிடைக்க வேண்டிய எல்லாமே இப்போ அவங்க கையிலையே இருக்கு அதான் பிரச்சனை.

//தொலைக்காட்சில வர்ற இரட்டை அர்த்த சிரிப்புகளும், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளையும் பார்த்து கெட்டுப்போகாத குழந்தைகளா கைபேசினால கெட்டுப்போகப் போறாங்க!// இதுனால கெட்டு போகாதவங்களா அதுனால கெட்டு போவாங்க? அதுனால கெட்டு போகாதவங்களா இதுனால கெட்டு போவாங்க? இப்படி சொல்லி சொல்லியே நம்ம பிள்ளைகள கெடுக்குறதே நாம தான். அதன்னால் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துட வேண்டியது.... ((நீங்க தான் எப்பவும் பிள்ளைகள கண்காணிச்சிட்டே இருப்பீன்ங்களே அப்புறம் ஏன் ட்வுல தேவை இல்லாத நிகழ்ச்சி எல்லாம் பாக்க விடுறீங்க? நல்ல நிகழ்ச்சியா பாக்குறாங்களானு கண்காணிக்க வேண்டியது தானே?))

//கண்கானிங்க நம் பிள்ளைகல் தானே அவர்கள் ஆசையை நிறைவேற்றுவதையும் அவர்களை பார்த்து கொள்வதையும் விட நமக்கு வேறென்ன பெரிய வேலை.// குழந்தைங்க ஆச்சைய ந்றைவேத்தலாம் தப்பு இல்ல ஆனா அது நியாயமான ஆசையா இருக்கணும்.குழந்தை ஆசைபடுதுங்குறதுக்காக அத சாக்கடைல போயி விளையாட விடுவீங்களா என்ன? அது மாதிரி தான் இதுவும். குழந்தைகள கண்காணிக்கலாம் அதுவும் ஒரு அளவுக்கு மேல முடியாது போன் வாங்கி குடுத்துட்டு அவங்க யாரு கூட என்ன பேசுறாங்கனு ஒட்டு கேட்டுட்டே இருக்க முடியுமா? இல்ல என்ன மெசேஜ் அனுப்பி இருக்காங்க என்ன மெசேஜ் வந்து இருக்குனு எப்போ பார்த்தாலும் போன வாங்கி செக் ப்ண்ணிட்டே இருக்க முடியுமா? அப்படி பண்ணுறதுக்கு வாங்கி தராம இருக்குறது எவ்வளவோ மேல்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவர் அவர்களே!
1எதிரணி தோழிகளெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு 3சக்கர சைக்கிள் வாங்கித்தரமாட்டாங்க!
2. குழந்தைங்க வளர்ந்து பெரியவனாகி கல்லூரிக்குபோனா கூடவே கல்லூரி வாகனத்திலோ சொந்தவாகனத்திலோ கூடவேபோயி சாப்பாடு ஊட்டிவிட்டு வருவாங்க! ஏன்ன? சாப்பிடறப்ப கையக்கடிச்குவாங்க, இல்லேன்னா ஸ்பூன முழுங்கீட்டாங்கனா?
இப்பலாம் சின்ன வயசுலயே நீச்சல், குதிரையேற்றம், கராத்தே, குங்பூ, ஸ்கேட்டிங், ஜுடோ, லொட்டு, லொசுக்கு எல்லாமே கற்றுத்தர்றோம்.
இதையெல்லாம் கத்துக்கிட்டா எல்லார்த்தையும் அடிப்பாங்க தண்ணிலபோயி விழுவாங்க அப்படீனு சொல்ல முடியுமா? தற்காப்புக்காகத்தானு புரியவைக்கணும் நடுவர் அவர்களே! தீயதை பார்க்காதே! தீயதை பேசாதே! தீயதை கேட்காதே! நம்ம தத்தா சொன்னத சொல்லி வளர்கணும் நடுவர் அவர்களே!
ஒரு புள்ள நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்புலதான் இருக்குதே ஒழிய கைபேசினால இல்லை.
ஒரு அம்மா கணிணீல பிரவுஸிங்ல பிஸியானதால குழந்தைய கவனிக்காமவிட்டு குழந்த இறந்தே போச்சுங்கிறது எல்லருக்குமே தெரிந்த விஷயம்தான்.
மீண்டும் வருவேன்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவர் அவர்களே, பள்ளி செல்லும் குழந்தைகள் அவர்கள். அவர்களிடம் கைபேசியை தந்து அவர்களை நாமே கெடுத்துவிட கூடாது. கைதொழில் வேண்டுமானால் கற்று கொடுக்கலாம். ஆனால் கைபேசியை கொடுத்து கெடுக்கவேண்டாமே. யோசிக்க வேண்டும்

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

//1எதிரணி தோழிகளெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு 3சக்கர சைக்கிள் வாங்கித்தரமாட்டாங்க!
2. குழந்தைங்க வளர்ந்து பெரியவனாகி கல்லூரிக்குபோனா கூடவே கல்லூரி வாகனத்திலோ சொந்தவாகனத்திலோ கூடவேபோயி சாப்பாடு ஊட்டிவிட்டு வருவாங்க! ஏன்ன? சாப்பிடறப்ப கையக்கடிச்குவாங்க, இல்லேன்னா ஸ்பூன முழுங்கீட்டாங்கனா?
இப்பலாம் சின்ன வயசுலயே நீச்சல், குதிரையேற்றம், கராத்தே, குங்பூ, ஸ்கேட்டிங், ஜுடோ, லொட்டு, லொசுக்கு எல்லாமே கற்றுத்தர்றோம்.// தற்காப்புக்காக கத்துக்கிற கலையும் தன்னையே(நம்மளை) அழிக்கிற செல்போனும் ஒன்னா நடுவரே?

குழந்தைக்கு 3 சக்கர சைக்கிள், கராத்தே, குங்பூ லொட்டு லொசுக்கு எல்லாம் பிறந்த உடனே கத்து குடுத்துடுவாங்களா அவங்க வளர்ந்து அவங்களுக்கு அந்த வயசு வந்த பிறகு தானே சொல்லி தருவாங்க?அத தானே நாங்க சொல்றோம்.நாங்க செல்போனே குழந்தைக்கி வாங்கி தர மாட்டோம்னு சொல்லல அதுக்குனு ஒரு வயசு இருக்கு படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் வாங்கி தருவோனு தான் சொல்றோம் எதிரணிக்கு புரியுதானு கேட்டு சொல்லுங்க நடுவரே.

//ஒரு அம்மா கணிணீல பிரவுஸிங்ல பிஸியானதால குழந்தைய கவனிக்காமவிட்டு குழந்த இறந்தே போச்சுங்கிறது எல்லருக்குமே தெரிந்த விஷயம்தான்.// நல்லா விவரம் தெரிஞ்ச அம்மாக்களே இப்படினா நம்ம ரெண்டு கெட்டான் வயசு மாணவ செல்வங்களோட நிலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க நடுவரே.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//எதிரணி தோழிகளெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு 3சக்கர சைக்கிள் வாங்கித்தரமாட்டாங்க!///

அப்போ நம்மஎதிரணி தோழிகள் வாங்கி தர்ரது பொம்மை ஃபோன் போல.... அப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லை... குழந்தை விளையாடட்டும்.... நடுவர் அவர்களே 3 சக்கர சைக்கிள் ல வீட்டுல ஒட்டுற குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது... அப்படியே விழுந்தாலும் லேசான அடி தான்.. மொபைல் ஃபோன் ல வர பாதிப்பு பிள்ளைங்க வாழ்க்கையை அழிச்சுடும் நடுவர் அவர்களே!!!

//குழந்தைங்க வளர்ந்து பெரியவனாகி கல்லூரிக்குபோனா கூடவே கல்லூரி வாகனத்திலோ சொந்தவாகனத்திலோ கூடவேபோயி சாப்பாடு ஊட்டிவிட்டு வருவாங்க! ஏன்ன? சாப்பிடறப்ப கையக்கடிச்குவாங்க, இல்லேன்னா ஸ்பூன முழுங்கீட்டாங்கனா?///

சின்ன பிள்ளை தனமா இருக்குதுங்க நடுவரே... சாப்பாடும், செல்போன் உம் ஒன்னாம் நம்ம எதிர் அணி தோழி சொல்றாங்க.... சாப்பிட சொல்லி கொடுக்க வேண்டிய வயசுல சொல்லி கொடுத்தா அவங்க ஏன் ஸ்பூனை முழுங்க போறாங்க... செல்போன் என்னவோ அடிப்படை தேவை மாதிரி ல பேசுறாங்க.. உணவு, உடை, உறைவிடம் ல இப்போ செல் போன் சேர்த்துருக்காங்களா என்ன(எனக்கு அப்படி ஏதும் விவரம் தெரியலை நடுவரே. அதான் கேக்குறேன்).

//சின்ன வயசுலயே நீச்சல், குதிரையேற்றம், கராத்தே, குங்பூ, ஸ்கேட்டிங், ஜுடோ, லொட்டு, லொசுக்கு எல்லாமே கற்றுத்தர்றோம்.//

கண்டிப்பா இதெல்லாம் ஆக்கபூர்வமான விஷயங்கள் நடுவரே... இதை யாரும் மறுக்க முடியாது... இதோட போயி செல் போன் யூஸ் பண்றதை கம்பேர் பண்ணவே கூடாது..

//ஒரு புள்ள நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்புலதான் இருக்குதே//

ஆமா கண்டிப்பா... அதான் பிள்ளைக்கு எது நல்லதோ அதை மட்டும் சொல்லி கொடுத்து வாங்கி கொடுத்து வளர்க்க சொல்றோம் .

//ஒரு அம்மா கணிணீல பிரவுஸிங்ல பிஸியானதால குழந்தைய கவனிக்காமவிட்டு குழந்த இறந்தே போச்சுங்கிறது எல்லருக்குமே தெரிந்த விஷயம்தான்.//

வயது வந்த ஒரு அம்மாவையே இந்த இணையம் கட்டி போட்டு கவனத்தை சிதைச்சுண்ணா இந்த ரெண்டும் கெட்டான் வயசுல உள்ள பிள்ளைகளை இந்த இணையமும், கைபேசியும் கெடுக்காதா என்ன !!!!!!!!

திரும்ப வருவேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவரே... காலையில் இருந்து வர முடியாத நிலை. இப்பவும் இவங்க கேப் விடாம போட்டு தாக்குறாங்களே, நடுவில் பூந்து ஒரு பதிவாது போடணும்னு தான் வந்தேன். :) அதனால் எல்லாம் படிக்க முடியல, ரிப்பீட்டு அடிச்சா கோவிக்காம மன்னிச்சு போடுங்கோ.

நடுவரே... எந்த பொருளையும் பயன்படுத்த வயசுன்னு ஒன்னு இருக்கு. சின்ன குழந்தை நல்லா தான் ஹேண்டில் பண்ணுதுன்னு அடுப்படியில் விடுவோமா? அப்படி தான் மொபைல். அதை பய்ன்படுத்த ஒரு மெசுரிட்டி வேணும். அது இல்லாத போது, அந்த பக்குவம் இல்லாத போது அது கையில் இருப்பது ஆபத்து தான். அவர்களுக்கு ஆபத்தோ இல்லையோ சுற்றி இருப்பவர்களுக்கு ஆபத்து.

இன்றைய காலத்தில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் டீச்சரை வீடியோ எடுக்கறாங்க, போட்டோ எடுக்கறாங்க... கூட படிக்கும் பெண்களை போட்டோ எடுத்து வைக்கறாங்க. மொட்டையா சொன்னாலும் என்ன சொல்றேன்னு எல்லாருக்கும் இங்க புரியுது தானே? இதெல்லாம் கேமரா மொபைல் செய்யும் வேலை... இல்லாம மொபைல் எல்லாம் யாருங்க வாங்குறாங்க? இப்பவே பந்த காட்ட கத்து வெச்சிருக்காங்க... பழைய பேச மட்டுமே பயன்படும் மொபைல் யார் கையிலாவது பார்த்தால் உடனே “அந்த செங்கல்லை தூக்கி போடுடா”னு கமண்ட் வரும்.

மொபைல் என்றால் இப்போ அப் டு டேட் என்ன என்ன மாடல் என்ன என்ன வசதி இருக்கோ எல்லாம் இருக்கணும்னு எதிர் பார்க்குறாங்க. அப்பறம் எப்படிங்க??

எந்த நேரமும் க்ளாசை கவனிக்காம பென்ச்சுக்கு கீழ வெச்சு மெசேஜ். எப்ப பார்த்தாலும் யார்கிட்டையாவது கடலை வறுக்குறது... இதுக்கு தான் இப்ப மொபைல் நிறைய பயன்படுது... அப்பறம் எங்க படிக்கிறது??

இப்ப பசங்க அட்வான்ஸ்டு மொபைல் வெச்சு பண்றதெல்லாம் தேவையில்லாத படங்களை டவுன்லோட் செய்வது, தேவை இல்லாத விஷயங்களை நண்பர்களுக்கு ஃபார்வட் செய்வது, கேம் விளையாடுவது, படங்கள் பாட்டுகள் டவுன்லோட் செய்து அட்டகாசம் செய்வது... நல்லதா செய்வது ரொம்ப ரேர்... :)

மொதல்ல சொந்தமா நாலு காசு சம்பாதிக்கட்டும் நடுவரே... அப்பறம் மொபைல் வாங்கட்டும். அப்பா கட்டும் பணத்தில் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி இவங்க லூட்டி அடிப்பதை நியாயம் என சொல்ல பாயிண்ட்டே இல்லைங்க.

இன்னும் பேச இருக்கு... ஆனா யோசிக்கணும்... கோர்வையா வரல் இப்போ. தலை வலி. வரேன் இரவு மீண்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

#//நாங்க செல்போனே குழந்தைக்கி வாங்கி தர மாட்டோம்னு சொல்லல அதுக்குனு ஒரு வயசு இருக்கு படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் வாங்கி தருவோனு தான் சொல்றோம் எதிரணிக்கு புரியுதானு கேட்டு சொல்லுங்க நடுவரே//.
கைபேசி வாங்கித்தருவோம் பேசுவதற்கு மட்டுமேனு!
நீங்களா 2G,3G, 4Gனு போட்டா நாங்க என்ன பண்ண முடியும். ரோட்ல எறங்குனாவே சாக்கடைதான், அதுக்காக ரோடுல இறங்காம ஆகாசத்துலயா போவீங்க என்னேரமும்.
கண்காணிப்புங்கிறத எதிரணி தப்பா புரிஞ்சுகிட்டாங்க போல. தலைப்ப ஒருதடவைக்கு ரெண்டு தடவ கண்ல பூதக்கண்ணாடி வெச்சு ,இல்லன்னா வெளக்கெண்ணெய் 2சொட்டு விட்டு படிங்க. இன்டர்னெட் புளூடூத்னு போடவேயில்ல. நாங்க அடிச்சா மொட்டைதான் இல்லேன்னா 6அடி கூந்தல்தாங்கிற கதையா இருக்கு.
நடுவர் அவர்களே! இங்க எல்லாம் இரத்த களறி ஆயிடும்போல!
சீக்கிரம் எந்திரிங்க நடுவரே!
இன்னும் பொழுது கிளம்பலியா?
ஒபாமாவையும், மிஷ்சேலயும் கேட்டேனு சொல்லுங்க!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்