பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

////அப்படியே சந்தேகத்தை தீர்த்துட்டாலும்.... கிளாஸ் நடக்கும் போதே இந்த காலத்து பிள்ளைங்க செல் போன் ல எதிர்த்த பெஞ்ச் ல பிள்ளைக்கு மெசேஜ் அனுப்பி விளையாடுறாங்க... அப்போ ஒழுங்கா கவனிச்சா எதுக்கு சந்தேகம் வர போகுது... அப்படியே வந்தா tution போகலாமே (செல் போன் பில் க்கு tution fees பரவாயில்லை நடுவரே... உபயோகமும் கூட) ////

எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி இல்லை சில பேர் teacher கிட்ட கேட்க பயப்படுவாங்க அதை தைரியமா friend கிட்ட கேப்பாங்க எல்லா நேரமும் நாம் பள்ளி/கல்லூரிகளில் இருகக முடியாது. அப்ப என்ன பண்ணுவாங்க? நான் நைட் படிக்கும் போது என் தோழி என்ன எலுப்பி விடுவா நான் அவளை எலுப்பி விடுவேன்(call) .அவள் அவளுடைய வீட்டில் நான் என் வீட்டில். ஒரு unit படிக்க இவ்வளவு நேரம் என்று தான் படிப்போம்.(sms)

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

//எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி இல்லை சில பேர் teacher கிட்ட கேட்க பயப்படுவாங்க அதை தைரியமா friend கிட்ட கேப்பாங்க எல்லா நேரமும் நாம் பள்ளி/கல்லூரிகளில் இருகக முடியாது. அப்ப என்ன பண்ணுவாங்க? நான் நைட் படிக்கும் போது என் தோழி என்ன எலுப்பி விடுவா நான் அவளை எலுப்பி விடுவேன்(call) .அவள் அவளுடைய வீட்டில் நான் என் வீட்டில். ஒரு unit படிக்க இவ்வளவு நேரம் என்று தான் படிப்போம்.//

எல்லா நேரமும் பள்ளி கல்லூரி ல இருக்க முடியாது தான்.. ஆனா எவ்வளவோ நேரம் பள்ளி கல்லூரிகள் ல சும்மா தான் பொழுது போக்குறாங்க.. அப்போ கேட்டா இன்னும் நல்லா சொல்லி தாராளமே... அனுபவம் உள்ள ஆசிரியர் blackboard ல விரிவா சொல்லி தராது புரியதாம்... ஆனா ஃப்ரெண்ட் செல்போன் ல புட்டு புட்டு வச்சுருவாங்கலாம்.... அப்படியே புரிஞ்சுருமாம்.... முக்குக்கு 300 tution சென்டர் இருக்கு... அங்க போயி உங்க doubt கிளியர் பண்ணிக்கலாமே...

நைட் ல கால் பண்ணி எழுப்பி விடுவாங்கலாம்... இதுக்கு ஒரு alarm piece போதுமே... sms, call கே நேரம் போயிடும்... இதுல எங்க இருந்து படிக்க???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவரே... முன்பெல்லாம் நமக்கு போன் வந்தா வீட்டு நம்பர்க்கு வரும். பசங்க யார்கிட்ட பேசுறாங்க என்னன்னு நமக்கு ஓரளவு தெரியும். ஆனா இப்போ இந்த கைபேசி வந்ததால் இரவு நேரங்களில் கூட பசங்க யாரிடம் வேண்டுமானாலும் பேசுறாங்க... என்ன பேசுறாங்க, யார்கிட்ட பேசுறாங்க என எதுவுமே நமக்கு தெரிவதில்லை. எத்தனையோ தேவையில்லாத நட்பு, கெட்ட நட்பு, மிரட்டல்கள் என எல்லாமே நம்ம கண்ணை கட்டிட்டு பசங்களிடம் நேரா போகுதே... இது ஆபத்து இல்லையா? அவங்களா சொல்லும் வரை நமக்கு என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாது.

பசங்க இப்போ அப்பா அம்மா அவங்க மொபைலை எடுப்பதை கூட விரும்புவதில்லைங்க... அதில் கூட ப்ரைவசி எதிர் பார்க்கிறாங்க. அப்படி இருக்கும் போது எப்படிங்க நம்பி தைரியமா கொடுத்துட்டு இருக்க முடியும்??

யோசிச்சு பாருங்க... பையனோ, பொண்ணோ... நம்ம கிட்ட சிடு சிடுன்னு விழறாங்க, ஏன்னு கேட்டா காரணம் சொல்வதில்லை... மொபைலை நோண்டிகிட்டு யாருக்கோ மெசேஜ் அனுப்பிகிட்டு இருப்பாங்க... பெற்ற மனம் எப்படி பதரும்??? என்ன பிரெச்சனை, என்ன மெசேஜ், ஏன் கோவமா இருக்காங்க... இப்படி எவ்வளவோ பதட்டம். தேவையா இது???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

#//வயது வந்த ஒரு அம்மாவையே இந்த இணையம் கட்டி போட்டு கவனத்தை சிதைச்சுண்ணா இந்த ரெண்டும் கெட்டான் வயசுல உள்ள பிள்ளைகளை இந்த இணையமும், கைபேசியும் கெடுக்காதா என்ன !!!!!!!! #//
இது போல மதிகெட்ட மம்மீஸ் இருக்கிறவரையில கைபேசி இருந்தாலும், இல்லை என்றாலும் கெட்டுப்போய் விடுவார்கள். எதுவாக இருந்தாலும் பெற்றோரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

எதிரணி தோழிகள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள், பிறந்த குழந்தையிடம் கைபேசி தரச்சொல்லவில்லை.
எத்தனை பேர் வேலைக்கு சென்று விட்டு குழந்தைகள் நல்லபடியாக வந்தார்களா? இல்லையா? பதைபதைத்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம் அல்லவா! நம் பெற்ற செல்வங்களை நாமே நம்பாவிட்டால் மற்றவர் எப்படி நம்புவர்.
பள்ளியிலேயே இலவச கணிணீ கொடுக்கிறார்களே எதிர்க்கட்சி மக்களே இதை யாரும் அறியவில்லையா?
இன்டர்னெட் இல்லைனு சொல்லாதீங்க பென்டிரைவ்னு ஒண்ணு இருக்கு. நடுவரே எதிரணில பாயிண்ட்டுக்கு பஞ்சம் போல.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

#//இன்றைய காலத்தில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் டீச்சரை வீடியோ எடுக்கறாங்க, போட்டோ எடுக்கறாங்க... கூட படிக்கும் பெண்களை போட்டோ எடுத்து வைக்கறாங்க. மொட்டையா சொன்னாலும் என்ன சொல்றேன்னு எல்லாருக்கும் இங்க புரியுது தானே? இதெல்லாம் கேமரா மொபைல் செய்யும் வேலை... இல்லாம மொபைல் எல்லாம் யாருங்க வாங்குறாங்க? இப்பவே பந்த காட்ட கத்து வெச்சிருக்காங்க... பழைய பேச மட்டுமே பயன்படும் மொபைல் யார் கையிலாவது பார்த்தால் உடனே “அந்த செங்கல்லை தூக்கி போடுடா”னு கமண்ட் வரும்#/.
அந்தக்காலதில போர்டுலயும், சுவர்லயும் எழுதுன விஷமமாணவர்கள் இருந்தாங்க, அதுக்காக சாக்பீஸ் பயன்படுத்தாம இருந்தோமா? இல்ல பள்ளிக்குதான் அனுப்பாம இருந்தாங்களா?
#//மொதல்ல சொந்தமா நாலு காசு சம்பாதிக்கட்டும் நடுவரே... அப்பறம் மொபைல் வாங்கட்டும். அப்பா கட்டும் பணத்தில் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி இவங்க லூட்டி அடிப்பதை நியாயம் என சொல்ல பாயிண்ட்டே இல்லைங்க.#//
இப்போதைக்கு நாங்க வாங்கிக்கொடுக்கிற செங்கல்லயே பயன்படுத்து
அப்பால சிமெண்ட், ஜல்லி எல்லாம் வாங்குனு நாமதான் புத்திமதி சொல்லனும் நடுவர் அவர்களே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் அணிக்கு இவ்வளவு பலமா....ம்ம்ம்ம் கிளப்புங்க......

நான் தற்போது பஸ்ஸில் கண்ட காட்சி என் தலைப்பிற்க்கு மேலும் வலு சேர்த்து உள்ளது அதான் வந்ததும் வராததுமாய் பட்டிக்கு வந்திட்டேன்.

நாங்கள் பஸ்ஸிற்க்காக நின்று கொண்டு இருக்கும் போது சரியான கூட்டமாக இருந்தது
பஸ் வந்ததும் எல்லோரும் நெருக்கடியோடு ஏறி கொண்டு இருந்தோம்.பஸ் புரப்பட்டு விட்டது.
என் பக்கத்தில் ஒரு பொண்ணு இருந்தால் அவள் பார்க்க 12வது காலேஜ் படிப்பது போல் இருந்தால்.

அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது உடனே கன்டக்டர் கன்டக்டர் என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.என்னவென்று பார்த்தாள் அவள் அம்மா பஸ்ஸில் ஏற வில்லையாம் பஸ் அந்த ஸ்டாப்பை விட்டு கொஞ்சம் தூரம் நகர்ந்து விட்டது

நல்ல வேலையாக அந்த மாணவியிடம் கைப்பேசி இருக்கபோய் அவள் அம்மா அழைத்தால் இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் அவள் அம்மாவிடமோ அவளிடமோ கையில் பணம் இல்லை என்றால்.....
யோசித்து பாருங்க நடுவரே.... யோசித்து பாருங்க என் எதிர் அணியினரே.....

அந்த காலத்தில் எல்லாம் பசங்க ஒருவயசு வரைக்கும் அம்மா பிள்ளையாகவே வீட்டை சுற்றியோ மிஞ்சி மிஞ்சி போனா தெருவை சுற்றியோ இருப்பார்கள் ஆனால் இன்றோ தனியாக ஊர் விட்டு ஊர் சென்று கொண்டு இரிக்கிறார்கள்.

இப்படி தேவைக்காக செல்வதை நம்மால் தடுக்க முடியாது அதனால் அவர்கள் கையில் கைப்பேசி இருந்தால் நம் பிள்ளைகள் எங்கு சென்றாலும் நம் பார்வையிலே இருப்பார்கள்.

நம் பிள்ளைகளை குழந்தை பருவத்தில் இருந்தே நல்லது கெட்டதுகளை சொல்லி வளர்த்தாள் தாராளமாக அவர்கள் கையில் கைப்பேசி என்ன தனியாக இன்டெர்னெட் வசதி உள்ள லேப் டாப்பையே கொடுக்களாம்.

அதை பயன் படுத்தும் மாணவர்களை பொறுத்து தான் அதன் நன்மை தீமை உள்ளதே தவிர கைப்பேசி பயன்படுத்தும் மாணவர்களே இதற்கு முழு காரனம் இல்லை.

SSaifudeen:)

கைபேசி என்பதன் உண்மையான பயன் என்ன? எங்கே இருந்தாலும் எளிதாக தொலைவில் இருப்பவருடன் பேச முடிவது தான். உங்கள் மகனோ, மகளோ, பொதுவாக நான்கு மணிக்கு வீடு வந்து விடுவார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்று ஆறு மணி ஆகியும் வீடு திரும்ப வில்லை என்ன செய்வீர்கள்? கவலையே பட மாட்டீர்களா? ஒரு கைபேசி இருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் என்று நினைக்க மாட்டீர்களா?

நான் கல்லூரியில் படித்த காலத்தில், ப்ராஜெக்டிர்க்காக வேறு ஊர் செல்ல வேண்டி இருந்தது. மாலையில் அங்கே இருந்து கிளம்பும் போது வீட்டிற்கு போன் செய்து இரவு பதினொன்று மணிக்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். வழியில் வேறு ஒரு அக்சிடென்ட் அதனால் பேருந்து, சென்னை வந்து சேர காலை மூன்று மணிக்கு மேல் ஆகி விட்டது. என்னுடைய அப்பா அங்கேயே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அது மட்டுமா, என்ன எது என்று தெரியாத டென்ஷன் வேறு... இதெல்லாம் இன்றைய காலத்தில் நடக்குமா? செல் போன் கையில் இருப்பதால் எவ்வாளவு வசதி.

நான் முன்பே சொன்னது போல் எந்த பொருளிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். தொலைகாட்சியினால் மாணவர்களுக்கு நல்லது மட்டும் தான் கிடைக்கிறதா? அதே போல் தான் இன்டர்நெட்... எதிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே தான் இருக்கும்... குழந்தைகளுக்கு, நல்லதையும் கெட்டதையும் சொல்லி தர வேண்டியது பெரியவர்களின் கடமை. மாணவர்களால் தான் சாதாரண கைபேசியில், கேமெரா, ப்ளூடூத் வசதி எல்லாம் வந்தது???

நாம் வளர்ந்த பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கை பேசி பயன்படுத்தி கேம்ஸ் விளையாடுவதை பற்றி பேசுகிறோம், சில வெளிநாட்டு பள்ளிகளில் ப்ரீ-கேவில் குழந்தைகளுக்கு ஐ-பேட் கொண்டு கல்வி கற்று தருகிறார்கள். ஒரு விஷயத்தை மாணவர்களிடம் தராமல் தடுத்து நிறுத்தி விட்டால் அவர்கள் திருந்தி விடுவார்களா? அப்போது தான் மேலும் கெட்டு போவார்கள்... உண்மையில் பெற்றோர்கள், குழந்தைகளிடம் நண்பராக / தோழியாக பேசி பழகினாலே செல் போன் மட்டும் அல்ல எதனாலும் குழந்தைகளை மாற்ற முடியாது...

பொதுவாக எல்லோரும் சொல்லும் இந்த எம்எம்எஸ் பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணம் என்ன? செல்போன்கள் தானா? நல்ல விஷயங்களை, நம் கலாச்சாரத்தை பற்றியெல்லாம் இளைய தலைமுறைக்கு சொல்லி நெறிபடுத்துவது யாருடைய பொறுப்பு? இதை எல்லாம் விட்டு விட்டு ஏதோ கையில் ஒரு செல் போன் இருந்தால் தான் மாணவர்கள் கெட்டு போவதாக சொல்வது அபத்தம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவற்றை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்தி நம் குழந்தைகளுக்கு நல்ல விதத்தில் பயன் படுத்த சொல்லி தர வேண்டும்.

இன்றைய நிலையில் கல்வி, சாப்ட் ஸ்கில்ஸ் மேம்படுத்துவதற்கு என்றெல்லாம் எத்தனையோ விதமான ஆப்ஸ் அண்ட்ராயிட் மற்று ஐ-போன் தளங்களில் இலவசமாக கிடைக்கிறது. இவ்வளவு ஏன் சின்ன குழந்தைகள் சுலபமாக எழுத / படிக்க கற்றுக் கொள்ளவும் எத்தனையோ ஆப்ஸ் இருக்கின்றன.

மேலே சொன்னது போல், உலகம் துரிதமாக தொழில் நுட்பத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது, இப்போதும் நாம் இது போல் விவாதம் செய்துக் கொண்டிருக்காமல், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து சரியான பாதையில் அவர்களை வழி நடத்தினால் செல் போன மட்டும் அல்ல எதனாலும் அவர்கள் தவறான பாதையில் போக வழியில்லை. எனவே இது போன்ற காரணத்திற்க்காக எல்லாம் செல் போன் தேவை இல்லை என்று சொல்வது சரி அல்ல.... அவசர காலத்தில் பயன்படும் செல் போன் மாணவர்களுக்கும் மிகவும் அவசியமானது தான்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

முதல் வாதமா? சுப்பர். பிளாட்டின பட்டியில் அணியை தேர்ந்தெடுத்தாச்சு அப்புறம் என்ன இனி கால் மேல கால் போட்டு பேசிட்டே போயிட்டே இருங்கன்னேன். உங்களின் வாதங்களை மேலும் எதிர்ப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

முதல் முறை என்பதால் ஒரு குறிப்பு சொல்ல ஆசைப்படுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கண்டிப்பாக நடுவராக இல்லை ஒரு சக தோழியாகவே! உங்களின் கருத்தை ஒரே பதிவில் பதிவிட்டால் அது ஆணிதரமானதவும் அழுத்தமாகவும் பதியும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்களின் பெயரை (மட்டும்) பார்த்துவிட்டு ஒரு சிறு குழப்பம். என்னடா முதல் பக்கத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தில் இப்படி சொல்றாங்களேனு பார்த்தா இனிஷியல் வேற.......ஹி ஹி ஹி......

வணக்கத்துடன் வாழ்த்துகளுக்கும் நன்றி. அது என்னவோ இது இல்லாட்டி ஒரு தவறுமே நடக்காதுங்கற மாதிரி இல்ல இருக்கு....வாங்க வாங்க விடாதீங்க வந்து நல்ல அழுத்தமா ரிங் விட்டு கேளுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

வாஸ்தவமான பேச்சு. கேட்ட விஷயம் ரீச் ஆனா அளவுக்கு நல்லது ஆக மாட்டேன்குது. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, பள்ளியில் இயற்க்கை அவசரத்துக்கு கூட சில நேரத்தில் அனுமதி இல்லாத போது இதுக்கெல்லாம் கொடுத்த என்னாகும். அப்புறம் எல்லாம் இதுலே தான் இருக்கும். என்ன ஸ்பெஷல் கிளாஸ் வெச்சாலும் பாடத்தை முடிக்கவே முடியாது.

ஆக மொத்ததுல இந்த கைபேசி உபயோகத்தால படிப்பு டெட் லைன் மாதிரி இருக்குனு சொல்றீங்க. புள்ளைங்க ஒரு மொபைல் அம்மா அப்பா வேற மொபைல், அடுக்களைக்கும் ஹாலுக்குமே கால் போட்டு தான் பேச வேண்டி இருக்கு. அப்போ தைரியமா சொல்லிடலாம்னு சொல்றீங்க. சரி விடுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்