பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

நம் பெருமை மிகு நடுவருக்கு வாழ்த்துக்களுடன், தலைப்பு தந்த தோழி தேன்மொழிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டு மற்றும் நம் அறுசுவை தோழர் / தோழிகள் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்... தற்போது நம் நாடு, இந்தியன் என்று அழுத்தமாக பெருமைபட்டுக் கொள்ளும்படி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அமைதியின் வழியில் சுதந்திரம் வாங்கி தந்த அண்ணல் மகாத்மாவை எண்ணி பெருமை படுகிறேன்...

நீண்ட நாட்களுக்கு பின் பட்டியில் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... தொடர்ந்து வாதம் செய்ய இயலவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும்போது வந்து பதிவிடுகிறேன்...

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமற்றது என்பதே நான் தேர்ந்தெடுக்கும் அணி...

மீண்டும் விரிவான வாதங்களுடன் வருகிறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நீங்க தானே அறுசுவையில் எல்லோருக்கும் சுத்தி போடுறவங்க. அது என்னங்க அப்படி சொல்லிடீங்க இப்போ தான் உறுப்படியானு.....

யாரு முறைக்கிறா சொல்லுங்க......ரெண்டு பெரும் சேர்ந்து ஓடிடுவோம்.

குழந்தைகளுக்கு புதிய தொழில் நுட்பத்தை சரி வர பயன்படுத்த பெற்றோர்கள் சொல்லிகொடுக்க வேண்டும் என்று சொல்றீங்க. அதுவும் சரி தான்.......

ஆனாலும் இந்த ஐந்தாவது LKG இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை......சரி உங்களுக்கு இல்லைனா எனக்கும் இல்லை.

மூச்சு வாங்கியாச்சா? கிலோ கணக்கா இல்லை மூட்டை கணக்கா? வியாபாரம் முடிந்ததும் பட்டிக்கு வந்து சேருங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அவங்க சொல்றதும் சரி தானுங்களே?

என்ன தான் வகை வகையாய் சமைச்சாலும் பிடிச்சதை மட்டும் தானே சாப்பிட முடியும் அதுவும் பசி இருந்தால் மட்டுமே.

சந்தேகம் பாடம் படிக்கும் போது வந்தா வீட்டுக்கு அழைத்து கேட்கலாம்.......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அப்பாடி இப்போ தான் நடுவருக்கு தெம்பே வருது. அவசியம் அணியில் கொஞ்சம் வாதங்கள் வர தொடங்கியிருக்கு :)

நாம சின்ன பிள்ளைகளாக இருந்த போது வெறும் புள்ளை பிடிக்கறவங்க மட்டும்......கொடுக்கும் பிஸ்கட் வாங்காமல் இருந்தாலே தப்பிச்சிக்கலாம். ஆனா பாருங்க இப்போ பிரச்சனை எங்கேயிருந்து வரும்னே தெரியலை.

வாங்க வாங்க உங்களின் ஆணித்தரமான வாதங்களுடன் வந்து நச்சுன்னு பதிலடி கொடுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அட நீங்க வேற......நானே எதிர் அணிக்கு ஆள் இல்லைன்னு பார்த்தா நீங்க அதை விரட்டிருவீங்க போல......பாவம் அவங்க தான் ஒத்துக்கிட்டாங்க இல்ல.....முடிந்த விளக்கத்தை தருவாங்களாம்......பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

நீங்க காதல் தப்புன்னு சொல்றீங்களா......இல்லை பருவத்தை குறை சொல்றீங்களா?

அட என்னங்க நீங்க.....நம்ப குப்பன் சுப்பன்லேர்ந்து எல்லோரும் வைத்திருக்கும் ஒரு பொருள் கைபேசி. அதை வைத்திருந்தால் எல்லாம் டப்பு பார்டி இல்லீங்க.......அப்படி பார்த்து பேக் அடிச்சா திருடன் திருவோடு தான் ஏந்தணும். பந்தாவுக்கு கைபேசி உள்ளே கைப்பையில் ஒண்ணுமே இல்லீங்களாம்.....இதை நான் சொல்லலைங்க....எதிரணி சொல்வாங்கன்னு சொன்னேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இல்லையே நானும் நிறைய கடத்தல்களை படத்துல பாத்திருக்கேனே.......கை, வாயெல்லாம் கட்டி போட்டு தானே தூக்கிட்டு வருவாங்க......வந்ததுக்கு அப்புறம் அவங்களே கால் போட்டு (நம்பர் எப்படி வந்திருக்கும்.......ஒருவேளை இந்த குழந்தை கையில் வைத்திருக்கும் கைபேசியில் பார்த்து அழைத்திருப்பார்களோ) அந்த குழந்தையை அதன் பெற்றோரிடம் பேச வைப்பார்கள்.

இப்பெல்லாம் செல் போன்ல தான் போட்டோ எடுக்கணும் இல்லையாமே...எதிரணி சொல்றாங்க......எல்லாமே முக புத்தகதுலேர்ந்தே சுட்டுகராங்கலாமே!

யோசிச்சிட்டே இருக்கேன்.....நீங்களும் நல்ல யோசிச்சி அதிரடியான வாதங்களுடன் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது நல்லாயிருக்கே.....அய்யய்யோ சுட்டுடும் நான் மாட்டேன் என்று சமைக்காமல் தான் இருக்கோம இல்லை அந்த "" ஐ சாப்பிட்டால் எனக்கு என்னாகும் என்று சாப்பிடாமல் தான் இருக்காங்களா?

டாஸ்மார்க் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்........நான் பேசமாட்டேன்பா.......

பள்ளிக்கு படிக்க தானுங்களே போறாங்க.......இந்த இடை பட்ட நேரத்துல்ல கைபேசி எதுக்குன்னு நான் கேட்கலைங்க.....எதிரணியினரே......சரி தானே.....நீங்க கேட்க சொன்னதை அப்படியே கேட்டுட்டேன்....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மொத்தமாவா வேண்டாம்னு சொல்றாங்க.......எதுக்கும் காலம் வரும் பொருத்திருங்கன்னு தானே சொல்றாங்க.

அவங்க என்ன சொல்ல வராங்கன்னா பில் கட்டுறது அம்மா அப்பா தானே அந்த தொடர்பை பத்தி சொல்றாங்க.

வாங்க வாங்க வந்து வெளுத்து கட்டுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கத்திற்குரிய நடுவர் பெருந்தகையே!
பழைய பட்டில சாப்பிட,குடிக்கனு குச்சிஐஸ்,கொடுக்காப்புளினு குடுத்தாங்க போலிருக்கு நீங்க நீர்மோராவது குடுங்க தலீவிரே!
கண்ணக்கட்டறாப்போல இருக்கு!
நாம இப்போ அழகான ரோஜா செடி வாங்கி நட்டோமனா அது அங்க இங்க ஆடாம இருக்க குச்சி வெச்சு நட்டி நேரா வளர செய்யுரோம்,
அது வளர்ந்து பூ வந்துச்சுனா நம்ம வீட்டு வாண்டு ஓடிப்போய் பறிக்கப்பார்க்கும், நாம என்ன பண்ணுவோம் முள்கைல குத்திரும், ரத்தம் வந்திரும் பார்த்து பதனமா பூ பறிக்க சொல்லிதருவோம்!
இந்த இடத்தில ரோஜாங்கிற அழகான மலர சுத்தி(கைபேசி), கொக்கி மாதிரிமுள் (2,3,4,5,6,7,8,9,Gக்கள்,புளுடூத்,) அதிலிருந்து பாதூகாப்பா பூ பறிக்கச் சொல்லி தரணும்.போட்டா புடிக்கிறாங்கோ,
வீடியோ புடிக்கிறாங்கோனு அலர்றாங்க எதிரணி தோழிகள்,
நாம பாந்தமா ஆடை உடுத்தினுபோனா எவன் போட்டாப்புடிப்பான் சொல்லுங்கோ!கையெடுத்து கும்பிடமாட்டானா?
ஸ்கின் கலர்ல லெகின்ஸ் போட்டுட்டு போனா, ஜாக்கட்ல ஜன்னல் கதவு, முதுக்கில ஒருமுடிச்சு, கடைக்குபோனா நைட்டி., நம்ம மேல தப்ப வைச்சுககிட்டு குழந்தைங்க கெட்டுப்போய்டுவாங்கோனு கூப்பாடுபோடுறது!
சாப்பிட்டுவர்றேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஒன்னு என்னங்க (பணத்தை தவிர) ஆயிரம் கூட கேளுங்க. அதானே போற போக்கை பார்த்தால் மாணவர்கள் தான் சமூக சீர்கெடுக்கு காரணம்னு சொல்லிடுவாங்க போலிருக்கே. பிரச்னையை தீர்க்க சொன்ன பிரச்னையை வேடிக்கை பார்க்க வந்தவனை தீர்த்துட்டா போதுமா?

இந்த குறுஞ்செய்தி, குழு திட்டம் இந்த மாதிரியானே திட்டங்களே மாணவர்களை மையபடுத்தி தானே வருகின்றன.....

கண்டிப்பாக முன்னேறியவர்கள் அனைவருமே தொழினுட்பத்தை சரிவர பயன்படுத்தியவர்கள் தான் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

வாங்க வாங்க.....காத்திருக்கேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்