பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

//நாம பாந்தமா ஆடை உடுத்தினுபோனா எவன் போட்டாப்புடிப்பான் சொல்லுங்கோ!கையெடுத்து கும்பிடமாட்டானா?///

பாந்தமா ஆடை உடுத்துற பெண்களுக்கு பாலியல் வன்முறை நடக்கவே நடக்காது னு ல எதிர் அணி சொல்றாங்க..... கேக்கவே நல்ல காமெடி இருக்கு... பொண்ணுங்க எப்படி உடை உடுத்துனாலும் அது அந்த பையனோட கேரக்டர் ல தான் இருக்கு....

பொறுக்கி க்கு தாவணி, சுடி போட்ட பொண்ணும் ஒண்ணு தான்.... tshirt ஜீன் போட்ட பண்ணும்(sorry பொண்ணும்) ஒண்ணு தான்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவரே உங்களை நான் (செல் போன் அவசியம் இல்லை னு சொல்ற வரை) விடுறதா இல்லை ...

//எத்தனை பேர் வேலைக்கு சென்று விட்டு குழந்தைகள் நல்லபடியாக வந்தார்களா? இல்லையா? பதைபதைத்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம் அல்லவா!///

அதுக்கு எதுக்குங்க வர பிரசாதம் (மொபைல்) சாதாரண பிரசாதமே போதுமே (landline)... அப்போ தான் உண்மைலே நமக்கு கன்பர்ம் ஆ தெரியும் பிள்ளை நம்ம வீட்டுல தான் இருக்கு னு(எத்தனையோ இளம் பிள்ளைகள் பொய் சொல்லலாமே) ஃப்ரெண்ட் வீட்டுல இருந்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேனு பொய் சொல்ல செல் போன் வர பிரசாதம் தான்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//அந்தக்காலதில போர்டுலயும், சுவர்லயும் எழுதுன விஷமமாணவர்கள் இருந்தாங்க, அதுக்காக சாக்பீஸ் பயன்படுத்தாம இருந்தோமா? இல்ல பள்ளிக்குதான் அனுப்பாம இருந்தாங்களா?///

சுவர் கிறுக்கல் களும் அசிங்கமான வீடியோ உம் ஒண்ணு னு சொல்றாங்க பா... இதை எங்க போயி சொல்றது..... இதெல்லாம் கேக்க மாட்டீங்களா நடுவர் அவர்களே...

///இப்போதைக்கு நாங்க வாங்கிக்கொடுக்கிற செங்கல்லயே பயன்படுத்து
அப்பால சிமெண்ட், ஜல்லி எல்லாம் வாங்குனு நாமதான் புத்திமதி சொல்லனும் நடுவர் அவர்களே!///

இப்போதைக்கு வீட்டுல இருக்க லாண்ட்லைன் யூஸ் பண்ணு.... அப்பால பிளாக் பெர்ரி யோ, ஜெர்ரி யோ அப்போ இருக்க லேடஸ்ட் மாடல் வாங்கிக்கோ னு தான் நாங்க புத்தி சொல்றோம்(எதிர் அணி பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்)

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவரே..... நம்ம எதிர் அணி எப்படி நம்மலோட எதிர் அணி சரியா....?

அவங்களிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க அவங்க இந்த கால கட்டத்துல ஒரு மாணவியா இருந்திருந்தால் கைப்பெசி பயண் படுத்தாமல் இருந்திருப்பாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க .

ஒவ்வொருத்தவங்களும் மனசாட்சியை தொட்டு சொல்லனும்.இருக்க மாட்டாங்க ஏன்னா அந்த அளவுக்கு நட்பு வட்டாரம் அதிகரித்து உள்ளது.

////அது அவங்க அம்மாவை கூட கவனிக்காம (மெசேஜ் பண்ணிருக்கும்) பஸ் ல ஏறி இருக்கும்....////

நடுவரே என்னோட பதிவை ஒன்னுக்கு ரெண்டு தடவை நல்லா பூதக்கண்ணாடி வைத்து நம்ம எதிர் அணியை பார்க்க சொல்லுங்க நல்லா தெளிவா போட்டு இருக்கேன் நெரிசலில் என்று இதுல செல்லையோ செங்கல்லையோ நோண்டிகிட்டு இருந்தாங்கலாம்லோ.....

/////பொண்ணுங்க எப்படி உடை உடுத்துனாலும் அது அந்த பையனோட கேரக்டர் ல தான் இருக்கு..../////

நம்ம எதிர் அணியே சொல்லிபுட்டாங்க அது பையனோட கேரக்டர்ல தான் இருக்குன்னு அப்படியென்றால் கைப்பேசியினால் இல்லை என்று தானே நடுவரே அர்த்தம்.
அப்பறம் ஏன் இன்னும் தயக்கம் நாட்டாமை நம்ம தீப்பை டக்குபுக்குன்னு சொல்லிபுடுங்க நிறைய மாணவ மாணவியர்கள் உங்கள் தீர்ப்புக்காக ஆவலோடு உள்ளார்கள் .....

SSaifudeen:)

பட்டியில் எல்லோரும் என்னைய திணற திணற (வாதத்தால்) அடிப்பதற்கு நன்றிகள் பல. கண்டிப்பாக எல்லோருக்கும் பதில் தருவேன். நேரமின்மை தான் காரணம். பொருத்தருள்க!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உணவு உடை உறைவிடத்தில் கைபேசியும் கூடிய சீக்கிரத்தில் சேர்ந்தாலும் ஆச்சிரிய படுவதற்கு ஒன்றுமே இல்லை தான் போல......

சரியான பதிலடி......உங்களின் வாதத்தை மேலும் எதிர்ப்பார்க்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி நீங்களும் தேவையே இல்லை அணியா? சரியா போச்சு போங்க. எதிரணி ஜாக்கிரதையா இருங்க......இவங்க போன் காலை கட் பண்ணவே மாட்டாங்க சோடா குடிக்காமல் பக்கம் பக்கமா பேசுவாங்க பார்த்துகோங்க....அம்புட்டு தான் நான் சொல்லிட்டேன்....

இது பாயின்ட்....மெச்யுரிட்டி வேணுமா அதனால தான் வேண்டாம்னு சொல்றாங்க. இப்படி எதுனால வேண்டாம்னு நீங்க சொன்னீங்கன்னா நாங்க பாட்டுக்கும் கேட்டுட்டு போயிட போறோம்!

இப்பெல்லாம் அந்த கம்பனி காரர்களே அப்க்ரேட் வசதி செய்து லேடஸ்ட் மாடல் போனை மாத்தி கொடுக்கறாங்களாமே?

அப்பாவே தான் வாங்கி கொடுத்து என்னை தொந்தரவு செய்யாதே எக்கேடாவது கேட்டுப்போ என்று சொல்றாராமே?

வாங்க வாங்க.....சூடா ஒரு இஞ்சி டீ குடிச்சிட்டு தெம்பா வாங்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இந்த பட்டி ரொம்பவே நாரி நசநசத்து போயிருக்கு.......உங்களுடன் சேர்ந்து என்னையும் சாக்கடை டாஸ்மார்க் கடை வரையிலும் அழச்சிட்டு போயிட்டீங்க......வேண்டாம் "அன்பர்களே!"..... இப்படியே போனா நடுவர் அழுதுடுவேன்.............

என்னங்க என்னுடைய காலை ஐந்து மணிக்கு என்னைய போய் தட்டி எழுப்பிகிட்டு......சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு.......அப்போ தான் ஏகபோக நித்திரையில் இருப்பேனாக்கும்......

ஒபாமா தானே எங்களுக்கு ஆப்பு வைக்க வரும்போது கண்டிப்பாக சொல்லிடறேன்......நீங்கள் மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் மேம்,

தோழிகளின் வாதங்களை படிக்க நேரமின்மையால் என்னோட வாதங்களில் ஏதும் ரிபீடேசன் இருந்தால் மன்னிச்சிடுங்க...

சரி வாதத்துக்கு வருவோம்... படிக்கிற புள்ளைங்களுக்கு கைப்பேசி அவசியமற்றது...

நடுவரே பொதுவா கைப்பேசியை எந்த காரணத்துக்காக பயன்படுத்துரோம். எந்த நேரத்திலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ள இயலும் என்ற முக்கிய காரணம் தானுங்கோ... சரி நம்ம புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் என்ன 1 மணி நேரம் 2 மணி நேரம் பயணம் செஞ்சு போற தூரத்துலய சேர்க்கறோம். எவ்ளோகெவ்ளோ வீட்டுக்கு அருகில இருக்க நல்ல பள்ளிகூடம பார்த்து சேர்க்கறோம். அப்பறம் புள்ளைங்க பள்ளிகூடத்துக்கு காலைல போய் சேர்ந்ததும் வகுப்பு ஆரம்பிச்சிடுது, சாயந்தரம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்திருதுங்க... இந்த இடைப்பட்ட நேரத்திலோ அல்லது வழியிலோ ஏதேனும் ரொம்ப அவசரமா பெற்றோர்களை தொடர்பு கொள்ள வந்திருந்தால் பள்ளிகூட அலுவலரை உதவி கேட்டு பள்ளி கூட தொலைபேசியை உபயோக படுத்திக்கலாம். அது சரி, வர வழில தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இருந்தால் அதான் தெருவுக்கு 2 - 3 போன் பூத் இருக்குதுங்களே... அதை விட்டுபுட்டு வீணா செலவு பண்ணி கைபேசி வாங்கி தந்தோம்னா... ஒன்னு பொழுதன்னிக்கும் கேம்ஸ் விளையாடிட்டே படிப்பை கோட்டை விட்டுடுதுங்க, இல்லை இந்த பெண்பிள்ளைங்க ஆண்பிள்ளைங்க கிட்டயும் ஆண்பிள்ளைங்க பெண்பிள்ளைங்க கிட்டயும் கடலை வருத்தே பாழுகிணற்றில் விழுதிடுதுங்க... இது தேவை தானா... நடுவரே...

போன வாரம் பிவீஆர் சினிமாஸ் க்கு போயிருந்தேன்... மூணு பெண் புள்ளைங்களும் ரெண்டு ஆண் புள்ளைங்களும் வந்திருந்துதுங்க... அதுங்களுக்கு என்ன 12 வயசுல இருந்து 15 வயசுக்குள்ள தான் இருக்கும்... ஆனா அதுங்க பொது இடத்தில் தொட்டு தொட்டு தடவி தடவி பேசுறதும் பழகுனதும் பார்த்த அத்தனை போரையும் முகம் சுளிக்க தான் வச்சிதுங்க... இதுக்கு முக்கிய காரணம் என்னனு நினைக்கறீங்க... இந்த பாழாய்ப்போன கைபேசி தானுங்கோ... நண்பர்கள் என்று சொல்லி சொல்லி தவறான பாதையில் போக இந்த கைபேசி தானுங்க முக்கிய வழி வகுக்குதுங்க நடுவரே... இது தேவை தானா...

இந்த காலேஜ் புள்ளைங்க இன்னும் மோசம்... முக்கால் வாசி காதல் பண்ணவும், கடலை வறுக்கவும், காலேஜ் கட் அடிக்கவும் தான் கைபேசியை உபயோகிக்கதுங்க... இந்த அழகுல இப்ப தப்பு தப்ப படம் புடித்து பகிர்ந்துக்கறதும், தவறான sms பகிர்ந்துக்கறதும் சகஜமாகிருசுங்க... இதுல பெண் புள்ளைங்களும் விதிவிலக்கில்லை...

இந்த ரெண்டுகெட்டான் வயசில் நம்ம புள்ளைங்களை நாமா பொறுப்ப பாதுகக்கனுமே தவிர இந்த கைப்பேசி வாங்கி குடுத்து அவங்க வாழ்க்கைய நாமலே சீரழிக்க கூடாது என்பது என் கருத்து...

மீண்டும் வருவேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அதே தாங்க நான் கூட படிக்கும் காலத்தில் என் கணக்கு ஆசிரியை பார்த்தாலே நடுங்கும். சந்தேகம் கேட்டால் கச்சிதமாக சொல்லிக்கொடுப்பார் ஆனால் முடித்து விட்டு "என்ன புரிந்ததா........இருந்தாலும் ரொம்ப கஷ்டமான கணக்கு" என்பார். அவர் போடும் கணக்கு ரொம்பவே எளிமையானதாகவே இருக்கும்......நமக்கே கேட்டதற்காக வெட்கமாகி போயிடும். அதற்க்கப்புறம் யாரு சந்தேகம் கேட்டா......

பாருங்க கைபேசியை உபயோகித்து எப்படி ஆக்கபூர்வமாக கம்பைன்ட் ஸ்டடி பண்றாங்கன்னு படிக்கற புள்ள சொல்லுது கேட்டு தெரிஞ்சிக்கங்கப்பா......

வாங்க வாங்க உங்களை மாதிரி சுட சுட வாழ்வியல் உதாரணத்தை வைத்து வாதாடுபவரை தான் தேடிட்டு இருக்கோம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்