பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

கார்த்திக்காவுக்கு பதிலடி கொடுக்க கார்த்திக்காவா....சரி தான்.....

என்னங்க நீங்க மெசேஜ் ப்ரீஅதுவும் இல்லாம இந்த குரூப் குள்ளே கால் பண்ணினாலும் ப்ரீ தானாம்.....ஆனா ட்யுஷன் எங்கிங்க ப்ரீயா சொல்லி தராங்க சொல்லுங்க.....அப்படின்னு கண்டிப்பா நான் கேட்கலைங்க.....எதிரணியினரே காப்பாத்துங்க என்னை....

அதானே இரவில் கால் எதற்கு அதே மொபைலில் அலாரம் கூட இருக்கே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே! ஏந்திரிங்க! ஏந்திரிங்க நடுவரே ஏந்திரிங்க(அஞ்சலி பாப்பாஸ்)! கண்ண தொடச்சுங்குங்க காபி இந்தாங்க பிரஷ் எல்லாம் பிறகு பாக்கலாம் காபி முதல்ல குடிங்க!
இந்த அநியாயத்த கேளுங்க நடுவரே! ஒரு அறிவியல் வளர்ச்சி கைபேசிங்கிறது அனைவரும் அறிந்ததே அதனால் நம்ம குடும்பத்துக்கு என்ன நன்மை அதை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம்நு யோசிக்காம கெட்டதுநு மட்டுமேசொல்லிக்கிட்டுருக்காங்க!
மஞ்சள் கண்ணாடி அணிஞ்சுகிட்டு உலகத்த பார்த்தா மஞ்சாளவேதான் தெரியும்.
நடுவர் அவர்களே உங்களுக்கே தெரியும் தூங்கறவங்கள எழுப்பலாம்,
தூங்கிற மாதிரி நடிக்கிறவங்கள என்ன தான் தார, தப்பட்ட, (கொம்பு
ஊதி)அடிச்சாலும் எழுப்ப முடியாதுநு.

மீண்டும் கிளிப்பிள்ளக்கி சொல்ற மாதிரி சொல்றேன் நடுவரே! பலாப்பழம் எப்படி இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும்அதை அப்படியேவா சாப்பிடறோம்?

இல்லயே, தேங்கெண்ணெய கைல தடவிக்கிட்டு மேல இருக்கிற முள்பகுதி(Gஸ்,னெட், பிடூத்) எல்லாத்தையும் நீக்கிட்டு
உள்ள இருக்கிற இனிப்பான சுளைய(கைபேசி தேன்ல ஊறவச்சு) சாப்பிடறோம், குழந்தைகளும் ஆசையோட சாப்பிடறாங்க!,

ஆரஞ்சு எடுத்துக்கோங்க மேல இருக்கிற தோலோடவா சாப்பிடறோம் இல்லயே தோல(2G,3G,4G,இன்டர்னெட், புளுடூத்) நீக்கிட்டு சுளைய(கைபேசி) மட்டும் சாப்பிடறோம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//போன வாரம் பிவீஆர் சினிமாஸ் க்கு போயிருந்தேன்... மூணு பெண் புள்ளைங்களும் ரெண்டு ஆண் புள்ளைங்களும் வந்திருந்துதுங்க... அதுங்களுக்கு என்ன 12 வயசுல இருந்து 15 வயசுக்குள்ள தான் இருக்கும்... ஆனா அதுங்க பொது இடத்தில் தொட்டு தொட்டு தடவி தடவி பேசுறதும் பழகுனதும் பார்த்த அத்தனை போரையும் முகம் சுளிக்க தான் வச்சிதுங்க... இதுக்கு முக்கிய காரணம் என்னனு நினைக்கறீங்க... இந்த பாழாய்ப்போன கைபேசி தானுங்கோ... நண்பர்கள் என்று சொல்லி சொல்லி தவறான பாதையில் போக இந்த கைபேசி தானுங்க முக்கிய வழி வகுக்குதுங்க நடுவரே... இது தேவை தானா...//

ஏங்க நடுவரே இதுக்கெல்லாம் காரணம் கைபேசியாங்க? கெட்டுப்போன சினிமா இருக்கே அத மறந்துட்டு கைபேசிமேல பழிபோட்டா எப்படீங்க!
கைப்புண்ணுக்கு கண்ணாடி கேக்கிறவங்கள நாம் என்னங்க பண்ணமுடியும்.
ஆயிரம் கைகள் மறச்சி நின்னாலும் ஆதவன்(கைபேசி) மறைக்க முடியுமா நடுவர் அவர்களே!
//இந்த காலேஜ் புள்ளைங்க இன்னும் மோசம்... முக்கால் வாசி காதல் பண்ணவும், கடலை வறுக்கவும், காலேஜ் கட் அடிக்கவும் தான் கைபேசியை உபயோகிக்கதுங்க... இந்த அழகுல இப்ப தப்பு தப்ப படம் புடித்து பகிர்ந்துக்கறதும், தவறான sms பகிர்ந்துக்கறதும் சகஜமாகிருசுங்க... இதுல பெண் புள்ளைங்களும் விதிவிலக்கில்லை...//
காதல்ங்கிறது அம்பிகாவதி அமராவதி காலத்தில இருந்து இருக்கே! விசுவாமித்திரர் காலத்தில எந்த போனுங்க இருந்திச்சு, தீப்பெட்டி போன்கூட இல்ல!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வீட்டுக்கு கால் பண்ணி நாம் எடுத்தால் யார் பேசுறான்னு தெரியும்......ஆனா இவங்க தான் ஒரு கோட் வைத்திருக்காங்களே......முதலில் ஒரு ரிங் வரும் கட் ஆகும் அடுத்து இரண்டு வந்து கட் ஆகும்.....அப்புறம் வந்தால் இவர்களே எடுப்பார்களாம்......

ஆனாலும் இப்போ இருக்கும் பசங்களுக்கு ரொம்ப தான் மூட் ச்விங்க்ஸ் இருக்கு....எதுனாலன்னு தான் கண்டே பிடிக்கவே முடியலையே......ஆனா அது நிவாரணத அவன் கண்டு பிடிச்சிருக்கான். எப்படி போகுது பாருங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//மதிகெட்ட மம்மீஸ்//..........நோ மம்மி பாவம் மம்மி பாவம்......

நடுவரை ரொம்பவே குழப்புறீங்களே.........கைபேசி வைத்திருக்கும் குழந்தைகளை வேலைக்கு போகும் பெற்றோர்கள் எப்படி கண்காணிக்க முடியும். போன் பண்ணியா......அப்போ அங்கே உருப்படியா ஒரு வேலையும் நடக்கலை......

பென்டிரைவ் = இணையம்.......புதுசா இல்ல இருக்கு.....இல்லை நீங்க வேறு எதையாவது பத்தி சொல்றீங்களா....பிரியல......

இப்போ எல்லாம் ஆசிரியர் கூட கரும்பலகையில் எழுதுவதில்லை போலிருக்கே......எல்லாம் ப்ரோஜெக்ட்டார் தானாமே.....கேட்டால் எல்லாம் ஐபாட், ஐபோன் காலமாம்.

நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட்......இப்போ இந்த "ஜெல்லி"பீன் தான் லேடஸ்ட் ஆமே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்ல வேலை பஸ்ஸில் ஏறியதும் அந்த பெண்ணின் கைபேசியை யாரும் ஆட்டை போடவில்லை :(

செய்து ரொம்பவே சுடுது.....அடுத்த தடவை கொஞ்சம் ஆறபோட்டு சொல்லிபோடுங்க.....பாருங்க நடுவருக்கு தீக்காயம்.....:(

முதலில் நல்ல எண்ணத்தை விதைக்க சொல்றாங்க.....செய்திட வேண்டியது தானே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கைபேசியை ஒரு தொலைதொடர்பு சாதனமாக மட்டுமே பார்க்க சொல்றாங்க. அதுவும் சரி தானே. அதனுடைய முதன்மையான கடமை அது தானே!

//ஒரு விஷயத்தை மாணவர்களிடம் தராமல் தடுத்து நிறுத்தி விட்டால் அவர்கள் திருந்தி விடுவார்களா? // சரியான கூற்று......தந்துவிட்டு அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கணும். அதனுடைய உண்மையான பயன்பாட்டை சொல்லிகொடுக்கனும் நு சொல்றாங்க.....சரியா சொல்லிட்டேனா பிந்து?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு நன்றி.

என்னங்க நீங்க வந்தும் வராதுமாக அரசியல் பேசுறீங்க. வாங்க வாங்க நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் ஆணித்தரமான வாதங்களை உங்களிடம் இருந்து எதிர்ப்பர்கிறோம். சீக்கிரம் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

போன பட்டி நடுவர் பக்கத்துல இருந்தார் அதனால எல்லாம் கொடுத்திருப்பாங்க.......நான் இங்கேயிருந்து கொடுத்து அது அங்கே உங்களுக்கு வந்து சேருவதற்குள்ளே உங்களுக்கு எதாவது ஏடாக் கூடாமா (அதாவது புட் பாய்சன்) ஆயிட்ட பட்டியை நான் இழுத்து மூடாவா.......அது நடக்காதில்ல....போங்க போங்க வீட்டில் பானையில் இருக்கும் தண்ணியை எடுத்து மொடக் மொடக்க்னு குடிச்சிட்டு வந்து வாதாடுங்க.

உவமை எல்லாம் பலமா இருக்கு....பேஷ் பேஷ்.....

ஸ்கூல் காலேஜ் பிள்ளைங்க டேஸ்ட் இவ்வளவு மட்டமவா இருக்கு? நைட்டி பத்தி பேசினா இங்கே அறுசுவையே கொந்தளிக்கும் சொல்லிட்டேன் ஆமா......

அது சரி இந்த கைபேசி பொண்ணுங்க வைத்திருப்பதே இல்லை......இல்லை அவங்களும் தான் இந்த போட்டோ பிடிக்கறது, வீடியோ எடுக்கறதுன்னு போயிட்டே இருக்காங்களா.....

என்னங்க பாஷை எல்லாம் மாறுது.......ரவுண்ட் கட்டுவீங்களோ?

//நீ அறுசுவைல பார்த்து வை நா வந்து சமைச்சு தர்றேன்!// இது நல்லாயிருக்கே.......ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.....யாருக்குன்னு கேட்க்காதீங்க.

ஒரு சின்ன சந்தேகம்......பட்டியில் இல்லை....சும்மனாச்சுக்கும்......அந்த விளக்கவுரையுமே திருவள்ளுவர் தந்தது தானுங்களா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தமிழ் நாடு மாறி விட்டாதா......இல்லை நானிருக்கும் போது முண்டிக்கிட்டு தான் பஸ்ஸில் ஏறுவோம். சில நேரங்களில் துப்பாட்டா கூட என்னுடன் வராது.

//நாய்(மொபைல்) வாங்கி நடு வீட்டுல விட்டா ஒரு நாள் இல்லை ஒரு நாள் கடிக்க(தொந்தரவு தான்) தான் செய்யும்// இதுக்கு தாங்க எங்க வீட்டில் செல்ல பிராணி வளர்க்க தடை போட்டிருக்கேன்

அவங்க கம்பைன்ட் ஸ்டடி பண்றேன்னு சொல்றாங்க, காய் வாங்க போறாங்க, அது செய்ய இது செய்ய உபயோகமா இருக்குனு சொல்றாங்க நீங்க என்னடா ஒன்னுதுக்கே இல்லைன்னு சொல்லிட்டீங்க. நீங்க சொல்றது பார்த்தா அவசியம் கிடக்குது நடுவரே தேவையே கிடையாதுன்னு சொல்றாப்பல இல்ல தெரியுது.

இந்த கால் பார்வேர்டிங் எல்லாம் இல்லையா இப்போ?

அப்பாலைக்கு வாங்கினா மட்டும் கரீக்கிட்டா ஊஸ் பண்ணுவாங்கன்னு என்ன மே நிச்சியம்......அப்படினே தானே எதிரணி கேட்டீங்க?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்