பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

அப்படியெல்லாம் உடனே தீர்ப்பை சொல்லிட முடியாது கண்ணு..........ரெண்டு நாள் விட்டு பிடிப்போம்.....வழிக்கு வந்திடுவாங்கன்னு தான் தெரியாது. என்ன நீங்க தானே என்னையும் எதிர் அணியிலே சேர்த்தீங்க.......

இப்போ பாருங்க எதிரணி இழுக்கறாங்க......இருங்க இருங்க கை பத்திரம்......அப்படி எல்லாம் இவங்க சொன்னதுக்காகவா......உங்களுடைய வாதங்களை எடுத்து விடுங்க அவசியமில்லை அணியினரே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது பாயின்ட்......வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற இடத்துக்கு போயிட்டு வர எடுத்துக்கு மொபைல். அதுவும் இல்லாமல் எதாவது சேட்டை சண்டை சச்சரவுன்ன நிர்வாகமே பெற்றோருக்கு கால் பண்ணிடுவாங்க இல்ல......

கைபேசி இருந்தும்மா தெருவுக்கு ரெண்டு மூணு பூத் இருக்கு......ஒன்னும் விளங்கலையே!

இந்த ரெண்டுன்கெட்டானுக்கு கைபேசி அவசியாம்னு சொல்லுங்க எதிரணியினரே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்மேல என்னங்க கடுப்பு.....இப்படி என்னை தூங்க போறதுக்கு முன்னாடியே எழுப்பி, தூங்கவிடாம காபியை வேற கொடுத்து.......வேண்டாம் வலிக்குது :(

கைபேசியை தேனில் ஊறவேச்சா திட்டினா கூட இனிக்க இனிக்க பேசுற மாதிரி இருக்குமோ......செய்து பார்க்க வேண்டியது தான்.

அட போங்க தூங்க போற நேரத்துல்ல எனக்கு பழம் காபி எல்லாம் கொடுத்து பசியை கிளிப்பி விட்டுடீங்க. சரியா போச்சு போங்க.....

இப்போ என்ன தான் கடைசியா சொல்றீங்க.......கைபேசி அவசியம் அவ்வளவு தானே.....சரி விடுங்க.....ஆனா இந்த எதிரணி விட மாட்டங்களே.....அவங்ககிட்டே இன்னமும் விளக்கமா சொல்லி பாருங்க.....ஒருவேளை உவமை இல்லாமல் சொன்ன புரியுமோ?

அதானே கைபேசி வந்ததுக்கு அப்புறம் தான் பிள்ளைங்க கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போன மாதிரியில்ல பேசுறாங்க......சரியா புடிச்சீங்க.....

விசுவாமித்திரரை அந்தம்மா ரிங் டோன் (பாட்டு பாடி) விட்டு இல்ல காதலிச்சாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//நடுவரை ரொம்பவே குழப்புறீங்களே.........கைபேசி வைத்திருக்கும் குழந்தைகளை வேலைக்கு போகும் பெற்றோர்கள் எப்படி கண்காணிக்க முடியும். போன் பண்ணியா......அப்போ அங்கே உருப்படியா ஒரு வேலையும் நடக்கலை......//
நடுவரே டீ ப்ரேக், இன்ட்ர்வெல் இந்த மாதிரி சமய்துல கால் பண்ணி பேசலாமே!

பென்டிரைவ் = இணையம்.......புதுசா இல்ல இருக்கு.....இல்லை நீங்க வேறு எதையாவது பத்தி சொல்றீங்களா....பிரியல......//
அரசாங்கம் பள்ளி குழந்தைகளுகு இலவசமா கணிணீ கொடுக்குதில்லயா, பென்டிரைவ்ல காப்பி பண்ணி கெட்ட விஷயங்கள பார்க்கணும்னு நினைச்சா பார்த்துருவாங்களே கைபேசினால மட்டுமிலனு சொல்ல வர்ரோம்.

பெற்றோர்களோட சரியான வழிகாட்டல் இல்லேனா கைபேசி இருந்தாலும் இல்லேனாலும் கெட்டுப்போக சந்தர்ப்பங்கள் அதிகம்.
மேலும் அன்னப்பட்சி எப்படி நீரையும், பாலையும் பிரித்து பருகுகிறதோ அது போல கெட்ட விஷயங்கள ஒதுக்கிட்டு நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை குழந்தைகளுக்கு வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மீண்டும் திணற திணற உங்களை மூச்சு முட்ட முட்ட வளைச்சுக் கட்ட வந்துட்டேன்

//நடுவரே டீ ப்ரேக், இன்ட்ர்வெல் இந்த மாதிரி சமய்துல கால் பண்ணி பேசலாமே!///

பேசுங்கய்யா... பேசுங்க... உங்களை யாரு பெத்த பிள்ளை கூட பேச வேணாம் னு சொன்னா... வீட்டு லாண்ட்லைன் கு பேசுங்க... அப்போ தான் பிள்ளை வீட்டுல பத்திரமா இருக்குனு நிம்மதி கிடைக்கும்.. கழுதை இந்த செல் போன் ல தான் எங்க இருந்து வேணும் னாலும் கூவலாமே....

//கெட்ட விஷயங்கள ஒதுக்கிட்டு நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை குழந்தைகளுக்கு வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.///

அதுக்கு தான் நடுவரே நாங்க கெட்ட விஷயத்தை அதிகமா வழங்க கூடிய மொபைலை ஒதுக்கிட்டு... நல்ல விஷயத்தை மட்டும் பிள்ளைகளுக்கு வளர்க்கிறோம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//என்னங்க நீங்க மெசேஜ் ப்ரீஅதுவும் இல்லாம இந்த குரூப் குள்ளே கால் பண்ணினாலும் ப்ரீ தானாம்.....ஆனா ட்யுஷன் எங்கிங்க ப்ரீயா சொல்லி தராங்க சொல்லுங்க.....அப்படின்னு கண்டிப்பா நான் கேட்கலைங்க.....எதிரணியினரே காப்பாத்துங்க என்னை....///

நீங்க இப்படி ஒரு பக்கமா பேச கூடாது நடுவரே... அநியாயத்துக்கு துணை போக கூடாது... இதெல்லாம் நல்லா இல்லை.. ஆமா சொல்லி புட்டேன்...அப்புறம் உங்க பேச்சு கா....

ப்ரீ கிடைக்குதுனு பெத்த பிள்ளைக்கு விஷம் வாங்கி கொடுப்போமா நடுவரே... பெத்த மனசு என்ன அவ்வளவு கல் லா??????

அதே மாதிரி விலை கொடுத்தாலும் நல்ல உண்ண கூடிய ஹெல்தி பொருட்களை தான் பிள்ளைகளுக்கு கொடுப்போம் ... அதை தான் நடுவரே நான் சொல்றேன்... பிள்ளை நல்லா படிக்கணும் னா tution வைக்கலாம்... மொபைல் வாங்கி தந்தா கழுதை கெட்டு குட்டி சுவரா தான் போகும்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//அவங்க கம்பைன்ட் ஸ்டடி பண்றேன்னு சொல்றாங்க, காய் வாங்க போறாங்க, அது செய்ய இது செய்ய உபயோகமா இருக்குனு சொல்றாங்க நீங்க என்னடா ஒன்னுதுக்கே இல்லைன்னு சொல்லிட்டீங்க. நீங்க சொல்றது பார்த்தா அவசியம் கிடக்குது நடுவரே தேவையே கிடையாதுன்னு சொல்றாப்பல இல்ல தெரியுது.///

அவங்க அவசியம் இருக்குனு சொன்னாங்க நடுவரே.... நாங்க சொன்னோமா....

கம்பைண்ட் ஸ்டடி பண்றாங்களா.... கம்பைண்ட் மொக்கை போடுறங்களா னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.... நான் ஒண்ணும் படிக்கலை டி... நீ ஏதும் படிச்சியா? சிந்து எவ்வளவு படிச்சாலாம்... கால் பண்ணியா அவளுக்கு??? இந்த பசங்க எல்லாம் என்ன பண்றாணுக?? பிட் ஏதும் ரெடி பண்றாங்களா... இது தான் நடுவரே இன்றைய மாணவ மாணவிகளின் கம்பைண்ட் ஸ்டடி ... இந்த வெட்டி அரட்டை நடக்குற நேரத்துல நாம தனியா 1 unit படிச்சு முடிச்சுடலாம்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ப்ரேக் எல்லாம் நாம் நினைக்கும் நேரமேல்லாமே தானே.....சரி தான் அப்போ கண்டிப்பா கால் பண்ணிக்கலாம்.

இருந்தாலும் இந்த பென் டிரைவ் தான் என்னை ரொம்பவே குழப்புது......சரி விடுங்க......எதிரணி ஸ்டெடியா இருக்காங்க இல்ல......அப்போ தாக்குங்க...

பெற்றோரின் கடமையை உரக்க சொன்னதற்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க ஒரு அக்மார்க் பெற்றோர் தான் ஒத்துக்கறேன்......பின்ன வெறும் நல்ல விஷயம் மட்டுமே இருக்கும் எல்லாத்துக்கும் அக்மார்க் முத்திரை உண்டு இல்லையா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//அதுக்கு தான் நடுவரே நாங்க கெட்ட விஷயத்தை அதிகமா வழங்க கூடிய மொபைலை ஒதுக்கிட்டு... நல்ல விஷயத்தை மட்டும் பிள்ளைகளுக்கு வளர்க்கிறோம்//

டிவி பொட்டி டிவி பொட்டினு ஒண்ணு நடுஹாலுல குந்திகினு கீரே அத்தவுடவா மொபல்போனூ கெடுதல உண்டாக்குது!

அத்துல வற்ர அத்தன சேனலயும் புள்ளக பாத்துட்டு கெட்டுபோகாமல இதுல கெட்டுப்போறாங்கோ!
இன்னா நடுவரம்மா சோக்காகீது!

இவுங்கோ பேசறது ஒண்ணுமே பிரியமாட்டேங்குது
நீங்களே இன்னானு விஷயத்த கேட்டு சொல்லுங்கோ!

நீங்க வேற பொசுக்கு பொசுக்குனு தூங்கப்போயிடரீங்கோ!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்