பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

எதிர் அணி நடுவரம்மா னு கூப்பிட்டா நாங்க மட்டும் சும்மாவா கூப்பிட முடியும்... அதான் நடுவரை அக்கா ஆக்கியாச்சு

//டிவி பொட்டி டிவி பொட்டினு ஒண்ணு நடுஹாலுல குந்திகினு கீரே அத்தவுடவா மொபல்போனூ கெடுதல உண்டாக்குது!///

அதான் நடு ஹால் ல இருக்கே அவங்களே ஒத்துக்கிட்டாங்களே.... அதுல என்ன பார்க்கிறங்காண்ணு எல்லாருக்கும் நல்லா தெரியுமே.... மொபைல் வச்சுக்கிட்டு என்ன பண்றாங்கன்னே தெரியலையே.... அதான் பிரச்சனை ....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மாணவர்கள் செல்ஃபோன் வைத்துக்கொள்ளலாம் என்று வாதடவுள்ளேன்......
கெடுதல் கெடுதல் என்கிறார்களே அனைவரிடமும் எண்ணங்கள் வேலைசெய்யும்,யோசிக்கமுடியும்,செல்ஃபோன வைத்துக்கொண்டு இவர்கள் மட்டும் தவறு செய்வதுபோலவும் பெறியவர்கள் ஒன்றுமே தவறுசெய்யாமல் அனைத்தையும் சரியாக செய்வதுபோலவும் பேசுகிறார்களே......?
ஏன் நடுவரே நான் ஒன்று கேட்கிறேன்,தெரியாத பிள்ளைகளுக்கு நல்லதையும் தீயதையும் கற்றுக்கொடுத்து உனக்கு எது சரி எது தவறுன்னு சொல்லிக்கொடுக்கத்தானே பெரியவர்கள் இருக்காங்க?டி.வி தவறு,படங்கள் தவறு,சமுதாயமே மாறிடுச்சு இதில் சரி தவறு எதுன்னு குழந்தைகள் வளர்ந்தா அது அவங்களுக்கும் நமக்கும் பிரச்சனைங்க.
சோ அவங்களுக்கு நாம கத்துதரனும்,அவங்க கண்டிப்பா நல்லதை எடுத்துப்பாங்க,
நடுவரே, போர்சன் முடிக்காம ஸ்கூலில் ஸ்பெசல் கிளாஸ் திடீர்னு யார் சொல்வா?செல்ஃபோன் இருந்தா மாணவனே வீட்டுக்கு சொல்லலாமே,ஹாஸ்டலில் பிராப்ளம் வார்டனோ,டீச்சர்ஸோ சரியில்லை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு யார் சொல்வா?செல் இருந்தா குழந்தைகள் நம்மிடம் சொல்லலாமே,
நடுவரெ மீண்டும் வருகிறேன் (நேரமின்மையால்) இப்போது விடைபெறுகிறேன்....

காலை வணக்கம் நடுவர் அவர்களே !
இன்றைய உலகில் மாணவ மாணவிகளுக்கு கைப்பேசி அவசியம் இல்லை என்றே சொல்வேன். ஏனென்றால் இன்றைய மாணவ மாணவிகள் அதை பாட்டு கேட்பதற்கும் , கிரிக்கெட் பார்பதற்கும், அரட்டை அடிப்பேற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் போதும் கூட கைப்பேசியை காதில் வைத்துக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விபத்துகள் நிறைய நடக்கிற்றன. இதனால் கைப்பேசி அவசியமில்லை என்பது என் கருத்து.
மேலும் மாணவ மாணவிகளுக்கு முக்கியமான மெஜெச் சொல்லவேண்டுமென்றால் 1 ரூபாய் போன் மற்றும் ஸ்கூல் போனை உபயோகபடுத்தலாம்.
கைப்பேசியின் நன்மை, தீமைகளை அறிந்த பின் மாணவ, மாணவிகளிடம் கொடுத்து உபயோக படுத்த சொல்வதுதான் நல்லது என்பது என் கருத்து.
நன்றி !

thanks

/////////அதான் நடு ஹால் ல இருக்கே அவங்களே ஒத்துக்கிட்டாங்களே.... அதுல என்ன பார்க்கிறங்காண்ணு எல்லாருக்கும் நல்லா தெரியுமே.... மொபைல் வச்சுக்கிட்டு என்ன பண்றாங்கன்னே தெரியலையே.... அதான் பிரச்சனை ....//////////

அய்யோ!அய்யோ! அப்ப நீங்க 24 மணி நேரமும் வீட்லயே உக்காந்து புள்ளைங்க என்ன சேனல் பார்க்குதுனு வேவு பார்த்துட்டே இருப்பீங்கள?
நாங்க கைபேசி வாங்கித்தர்றதோட நோக்கமே ஆபத்து நேரத்துல கைகொடுக்கும் ஆபத்பாந்தவனா இருக்குமேனுதான்.
முன்ன மாதிரி இப்பல்லாம் எல்லாரும் அவங்கவங்க சொந்த ஊர்லயே வாழ்றதில்லை.
இது இன்னார் கொழந்த பாவம் பஸ்ஸ விட்டுருச்சு போல நடந்து போகுது பாருனு அழைச்சிட்டு போயி வீட்லயே விட்டுட்டு போவாங்க! நம்ம வழ்க்கை முறையில
இது யார் குழந்தைங்கனு கூட யாருக்கும் தெரியாது.
கிராம புறங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு தொழில் விஷயமா, வேலை விஷயமா இடம்பெயர்ந்து(பஞ்சம் பொழைக்க) போறவங்களோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு.
அப்படி இருக்கிறப்ப கைபேசியோட அவசியம் விவரம் தெரிஞ்ச எல்லோருக்கும் ரொம்ம்ப அவசியம் என்பது எங்களின் ஆணித்தரமான வாதம் நடுவர் அவர்களே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அய்யோ!அய்யோ! அப்ப நீங்க 24 மணி நேரமும் வீட்லயே உக்காந்து புள்ளைங்க என்ன சேனல் பார்க்குதுனு வேவு பார்த்துட்டே இருப்பீங்கள?///

இவங்க மொபைலை வாங்கி கொடுத்து வேவு பார்ப்பேனு சொன்னாங்க... இப்போ நடு ஹால் ல ஒடுற டி‌வி ல என்ன நடக்குதுணு நமக்கு தெரியாத!!! இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன்.... 24 மணி நேரமா பிள்ளைகள் வீட்டுலே உட்கார்ந்து டி‌வி பார்க்குதா!!! ஒரு வேலை எதிர் அணி காரங்க பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் கே போறது இல்லை போல.... அந்த நேரம் தானுங்க நம்மாளும் வேலைக்கு போக போறோம்!!! கொஞ்சம் நேரம் பார்க்கிற டி‌வி ல ஏதும் கேடு வரதுக்குள்ள பொழுதனைக்கும் நோன்டுற மொபைல் தான் ஆபத்து நடுவர் அவர்களே....

//கிராம புறங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு தொழில் விஷயமா, வேலை விஷயமா இடம்பெயர்ந்து(பஞ்சம் பொழைக்க) போறவங்களோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு.
அப்படி இருக்கிறப்ப கைபேசியோட அவசியம் விவரம் தெரிஞ்ச எல்லோருக்கும் ரொம்ம்ப அவசியம் ///

கண்டிப்பா விவரம் தெரிஞ்ச அனைவருக்கும் கை பேசி அவசியம் தான்... பள்ளி கல்லூரி குழந்தைகளுக்கு அதை பயன் படுத்த விவரம் போதாது... விவரம் னா ஆப்பரேட்டிங் ஃபார்மட் இல்லை... அது நம்மளை விட அவங்களுக்கு நல்லாவே தெரியும்...

நான் சொல்ற விவரம் செல் போன் வச்சு எதுக்கு பயன்படுத்தணும்?? எதுக்கு பயன்படுத்த கூடாதுணு தெரியனும்.... அதை அறிந்து கொள்ள வயதும் அனுபவமும் போதாது னு நாங்க அடிச்சு சொல்றோம் (உங்களையோ, எதிர் அணியையோ ((இன்னும்)) அடிக்கலை ) நடுவரே .... பாத்து தீர்ப்பை கொடுங்க பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//மாணவ மாணவிகளுக்கு முக்கியமான மெஜெச் சொல்லவேண்டுமென்றால் 1 ரூபாய் போன் மற்றும் ஸ்கூல் போனை உபயோகபடுத்தலாம்//.

ஏதாவது எமர்ஜென்ஸினா 1காய்ன் பூத் எங்கேனு போய் தேடறதுனு நீங்களே சொல்லி இருக்கீங்க நோட் தெட் பாயிண்ட் யுவர் ஆனர்!

மேலும் ரோட்டில் நடந்து செல்லும் போதும் கூட கைப்பேசியை காதில் வைத்துக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விபத்துகள் நிறைய நடக்கிற்றன. இதனால் கைப்பேசி அவசியமில்லை என்பது என் கருத்து.//

வண்டி ஓட்டறப்ப கைபேசி பேசாதீங்கனு அரசாங்கமே கெட்ட வார்த்தைல மைக் வெச்சு திட்டினாலும் கேக்காம டேஸ் மேல் கல்மாரி பெய்யற மாதிரி போறது யாருங்க நடுவர் அவர்களே,?

இப்பல்லாம் குந்தைங்க(இளைஞர், இளைஞ்சி) போக்குவரத்து ஒழுங்குபடுத்துறதுல போக்குவரத்து அலுவலர்கூட சேர்ந்து என்ன அழகா சீர்ப்படுத்துறாங்க இதெல்லாம் எதிரணில இருக்கிறவங்களுக்கு தெரியலயா நடுவர் அவர்களே?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//இப்பல்லாம் குந்தைங்க(இளைஞர், இளைஞ்சி) போக்குவரத்து ஒழுங்குபடுத்துறதுல போக்குவரத்து அலுவலர்கூட சேர்ந்து என்ன அழகா சீர்ப்படுத்துறாங்க இதெல்லாம் எதிரணில இருக்கிறவங்களுக்கு தெரியலயா நடுவர் அவர்களே?//

இன்னும் அவங்க கை ல செல் போன் வரலை... அதான் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துறாங்க... வந்தா போக்குவரதுக்கு பெரும் இடைஞ்சலும், தலை வலியும் மிச்சம்.....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//கண்டிப்பா விவரம் தெரிஞ்ச அனைவருக்கும் கை பேசி அவசியம் தான்... பள்ளி கல்லூரி குழந்தைகளுக்கு அதை பயன் படுத்த விவரம் போதாது... விவரம் னா ஆப்பரேட்டிங் ஃபார்மட் இல்லை... அது நம்மளை விட அவங்களுக்கு நல்லாவே தெரியும்...//

நடுவரே! ஒரு மனிதனுக்கு விவரம் எப்போங்க வரும்? கல்யாணமாகி குழந்த குட்டி பெத்ததுக்கு அப்புறமா? நீங்க சொல்லியே ஆகோனும்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவர் அவர்களே,
எதிர் அணியினர் கைபேசியால் இருப்பதால் தான் குழந்தைகள் இருக்கும் இடம் தெரிகிறது , க்ரூப் ஸ்டடி பண்ண வசதியா இருக்குது ,நட்பு வட்டம் பெரிதாகுதுனு சொல்றாங்க....
ஏன் காலைல எழுந்து படிக்கணும்னா வீட்டில உள்ளவங்க கிட்ட சொன்னா எழுப்பி விட போறாங்க , அட அலாரம் வச்சா நம்மளே எழுந்து படிக்கலாம்...காலைலேயே இவங்களுக்கு அரட்டை அடிக்கணும் அதுக்கு இதெல்லாம் ஒரு சாக்கு நடுவரே...வீட்டில எக்ஸாம் நேரத்துல கூடவா அரட்டைன்னு கேட்பாங்கள்ள அதுக்கு தான் யூனிட்க்கு இவ்ளோ நேரம் சொல்லி வச்சு படிக்கிறோம் போன்ற கதை எல்லாம்...எப்படியும் அந்த செல்ல கைய வச்சு கிட்டே இருக்கனும்..
காலேஜ் படிக்குற பொண்ணு செல்ல வாங்கி பார்த்தீங்கனா உங்களுக்கே தெரியும் நடுவரே அதுல இருக்குரது ஃபுல்லா பார்வர்ட் மெசேஜ் தான்..இவ அனுப்பினா அத 10 பேருக்கு அனுப்புறது , இன்னோரு பொண்ணு அனுப்பினா அத இந்த பொண்ணு பேர் போட்டு இன்னோரு 10 , 15 பேருக்கு அனுப்புறது இதான் வேலை.சரி சாப்பிடும் போதாவது ஒழுங்கா சாப்பிடுராங்களா அப்போவும் செல் தான்....
இதனால் தான் பள்ளி பருவத்திலேயே காதல் வருது இவங்களுக்கு...இதுக்கு எல்லாம் இந்த செல் தானே காரணம்...நம்ம பிள்ளைங்கள நம்பணும்,நம்பிக்கை தான் எல்லாம்னு எதிர் அணி என்ன தான் சொன்னாலும் செல்போனால் நமக்கு தீமைகளே அதிகம் நடுவரே...
இப்போ டீவி ல பார்த்தீங்கனா பாட்டு சேனல்கள்ள அடியில மெசேஜ் வருது அந்த கொடுமய எல்லா தோழிகளுமே படிச்சிருப்பாங்க எல்லாம் காதல் வசனங்கள் தான்...எல்லாம் நம்ம செல் பயன்படுத்துற மாணவர்களின் வேலை தான்...இதெல்லாம் செல்லினால் ஏற்படுற நன்மையா நடுவரே??
பள்ளி பருவத்தில் காதல் , படிப்பில் கவனம் சிதறுவது ,பாலியல் குற்றங்கள் போன்ற அனைத்திற்க்குமே செல் ஒரு தவிர்க்க முடியாத காரணம் .... விரிவான கருத்துக்களுடன் மீண்டும் வருகிறேன்......

நடுவரே
கொஞ்சம் வேலை அதிகம் விட்டா புள்ளைங்க கெட்டு போறதே கைபேசி தான் சொல்லிடுவாக எதிர் அணியினர்.
////அதானே இரவில் கால் எதற்கு அதே மொபைலில் அலாரம் கூட இருக்கே?////
எதுக்குனா நாம படிக்கறப்ப ஒரு போட்டி வேணும். நாம 10 மணிக்கு எந்திரிக்கலாம் இல்ல 11 மணிக்கு எந்திரிக்கலாம் இருப்போம் இதுவே நாம்ம friend படிக்கரா தெரிஞா படிக்கமா இருப்போமா? அதுக்கு தான் கால் நடுவரே.

நாம புள்ளைங்களிடம் நட்பாக பழகினால் நம் குழந்தைகள் நம்மிடம் பொய்யும் சொல்ல மாட்டாங்க. நாம் நம் குழந்தைகள் மேல் மிக அக்கரை மட்டும் வைதால் போதும் நடுவரே .
தினமும் அவர்கள் நம்மிடம் நடப்பதை நம் கண் பார்த்து சொன்னால் போதும் அப்படி சொன்னால்அவர்களை நாம் புரிந்துக்கொள்வோம்.
கைபேசி இதற்கு தான் இப்படி தான் என்று சொன்னால் கேட்க மாடார்களா. நீ இப்ப படி இப்ப விளையாடு சொன்னா கட்டாயம் கேட்பார்கள்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

மேலும் சில பதிவுகள்