உல்லன் பர்ஸ் - பாகம் 2 - பின்னல் பொருட்கள் - அறுசுவை கைவினை


உல்லன் பர்ஸ் - பாகம் 2

ராதாபாய்
வியாழன், 04/10/2012 - 11:38
Difficulty level : Medium
3.90909
11 votes
Your rating: None

 

  • உல்லன் நூல் - 1 (சிறிய பர்ஸிற்கு)
  • குரோசே ஊசி
  • லயனிங் துணி (பர்ஸின் அளவுக்கேற்ப)
  • பர்ஸின் அளவிற்கேற்ப ஜிப்
  • துணி தைக்கும் ஊசி மற்றும் நூல்

 

இப்பொழுது 3 செயின்கள் போட்டு நூல் சுற்றி ஊசியை கீழ்பக்கம் உள்ள பின்னலில் விட்டு இன்னொரு டபுள் குரோசே பின்னிக் கொள்ளவும்.

இப்பொழுது இடது கை சுண்டுவிரலை பின்னலின் கீழ்ப்பக்கம் வைத்துக் கொள்ளவும். (அதாவது ஊசியில் சுற்றப்போகும் நூலுக்கு மேல் சுண்டுவிரல் இருக்க வேண்டும்).

ஊசியை கீழ்வரியிலுள்ள டபுள் குரோசே பின்னலின் இடையே விடவும். (விரலுக்கு மேல் பக்கமாக ஊசி இருக்க வேண்டும்).

இப்பொழுது ஊசியில் நூலைச் சுற்றவும்.

சுற்றிய நூலை வெளியே இழுக்கவும். (நூலை வெளியே இழுக்கும்போது கீழ்ப்பக்கமுள்ள விரலில் நூல் வளையமாக சுற்றி இருக்கும்).

மீண்டும் ஊசியில் நூலைச் சுற்றவும்.

சுற்றிய நூலை அதற்கு முன் உள்ள செயின்களில் இழுத்து ஒன்றாக்கவும். (சுண்டு விரலை கீழ்ப்பக்கம் வைத்து ஊசியில் நூல் சுற்றியதால் பர்ஸின் வெளி பக்கத்தில் சற்று நீண்ட வளையம் போல நூல் இருக்கும்).

இதேபோல அடுத்தடுத்து கீழ்ப்பக்கம் விரலை வைத்து இதே பின்னலை சுற்றிலும் பின்னவும். இதே பின்னலையே தொடர்ந்து பின்னிக் கொண்டே வரவும்.

உங்களுக்கு தேவையான உயரத்தைவிட இரண்டு வரிகள் குறைவாக இந்த பின்னலை முடித்துக் கொள்ளவும். (பர்ஸின் வலது அல்லது இடது புற ஓரத்தோடு இந்த பின்னலை முடிக்கவும்).

இப்பொழுது மீண்டும் டபுள் குரோசே பின்னலை பின்னவும்.

அடுத்த இரண்டு வரிகளுக்கு டபுள் குரோசே பின்னலைப் பின்னவும். கடைசி பின்னலில் ஒரு செயின் போட்டு நூலை வெட்டிவிட்டு செயின் வழியாக நூலை இழுத்து முடிச்சு போட்டு நூலை வெட்டிவிடவும்.

பர்ஸின் உள் பக்கத்திற்கு கொடுப்பதற்கு லயனிங் துணியை பர்ஸின் அளவிற்கேற்ப வெட்டிக் கொள்ளவும். பர்ஸின் அளவிற்கேற்ப ஜிப்பையும் எடுத்துக் கொள்ளவும்.(ஜிப்பின் கடைசியில் ஜிப் பிரியாமல் இருக்க துணி தைக்கும் ஊசியால் ஒரு தையல் போட்டுக் கொள்ளவும்).

இப்பொழுது லயனிங் துணியின் ஓரத்தை லேசாக மடித்து ஜிப்பின் ஒரு பக்கத்தை அதன் மேல் வைத்துத் துணி தைப்பது போல தைக்கவும். (ஜிப் மேல் பக்கமாக இருக்க வேண்டும்).

இப்பொழுது ஜிப்பை திறந்து கொள்ளவும். பிறகு லயனிங் துணியை மடித்துக் கொண்டு அதன் ஓரத்தை லேசாக மடித்து ஜிப்பின் மறுப்பக்கத்தின் மீது வைத்துத் தைக்கவும்.

அடுத்து ஜிப் வைத்து தைக்கப்பட்ட லயனிங் துணியின் வலது புறத்தை இணைத்து தைக்கவும். அதேபோல் இடது புறத்தையும் இணைத்து தைக்கவும்.(ஒரு பை போல கிடைக்கும்)

இப்பொழுது ஜிப் வைத்து தைத்த லயனிங் துணியை பர்ஸின் உள் பக்கத்தில் வைக்கவும்.(மேல் பக்கம் ஜிப் சமமாக இருக்க வேண்டும்).

இப்பொழுது உள்பக்கம் வைத்த துணியை பர்ஸுடன் சேர்த்து துணி தைக்கும் ஊசியால் சுற்றிலும் தைக்கவும்.

அழகிய உல்லன் பர்ஸ் ரெடி.

முதல் பகுதிக்கான லிங்க்

உல்லன் பர்ஸ் - பாகம் 1


ராதாபாய்

ரொம்ப நல்லா இருக்குங்க. சின்ன பிள்ளையா பள்ளியில் செய்தது... அப்போ கடைசியில் தையல் வேலைக்கு கடையில் கொடுப்போம். அழகா செய்து காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உல்லன் பர்ஸ்

அழகாக இருக்கிறது. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்