மசால் பொடி

தேதி: October 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கொத்தமல்லி விதை - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 300 கிராம்
சீரகம் - 200கிராம்
சோம்பு - 100கிராம்
மிளகு - 25கிராம்
வெந்தயம் - 25கிராம்
அரிசி - ஆழாக்கு
உளுந்தம்பருப்பு - 1/4 கிலோ
துவரம்பருப்பு - 1/4 கிலோ
பெருங்காயம் - 3 கட்டி
மஞ்சள் சில் - 3
கறிமசால்(கிராம்பு,அன்னாசிபூ,பட்டை,கல்பாசி எல்லாம் சேர்ந்து) - 15கிராம்


 

கொத்தமல்லி,மிளகாய்வத்தல்,மஞ்சள் மூன்றையும் வெயிலில் 2 மணிநேரம் காய வைக்கவும்.
மீதமுள்ள பொருட்களை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளவும்.


நான் சொன்ன அளவு பொருட்கள் உபயோகித்தால் 2 1/2 கிலோ அளவிற்கு மசால் பொடி கிடைக்கும்.இந்த பொடியை அனைத்து விதமான குழம்பிற்கும் உபயோகிக்கலாம். சாம்பாருக்கும் பயன் படுத்தலாம். அசைவத்திற்கும் உபயோகிக்கலாம். இந்த மசால் பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டால் 6 மாதத்திற்கும் மேல் கெடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நல்லதொரு குறிப்புகொடுத்த தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றிகள் பல!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Super recipe pa... Naanga masala items mattum serkama matha ellaam ditto apdiye araichu use pannuvom pa... Vinoja keatta masal podi idhuthaane? Innum pala kurippugal vazhanga vazhthukkal indhu...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்திற்கு நன்றி... ஆமா நித்யா வினோஜா கேட்ட மசால் பொடி தான் இது அவங்களுக்காக தான் இந்த குறிப்பே அனுப்புனேன்.அவங்கள தான் காணோம் ஒரு வாரமா. படமில்லாம அனுப்புனதுனால வராதுனு நினச்சேன்பா. இந்த குறிப்பு வந்தது எனக்கே இன்ப அதிர்ச்சியா இருக்கு.அட்மின் அண்ணாக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.