மெட்ராஸ் மீன் குழம்பு

தேதி: September 6, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - அரை கிலோ
பச்சை மாங்காய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - ஐந்து
பச்சைமிளகாய் - இரண்டு
தக்காளி - இரண்டு
முழுப்பூண்டு - ஒன்று
மிளகாய்தூள் - நான்கு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் - கால் கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு - நான்கு தேகரண்டி
எண்ணெய் - அரை கோப்பை


 

மீனை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் பச்சைமிளகாய், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை வைத்து மையாக அரைத்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி எல்லாத்தூள் வகைகளையும் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுதை போட்டு சிறிது நேரம் வதக்கி இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கி விடவும். பிறகு மாங்காயையும் உப்பையும் போட்டு கொதிக்க விடவேண்டும்.
குழம்பு கரண்டியில் ஒட்டும் பதம் வந்தவுடன் மீனைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கி விடவும். நன்கு ஆறவைத்து சூடான சோற்றுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி மேடம்,

இந்த வாரம் மாங்காய் வாங்கிட்டு வந்திருந்தேன். சாம்பார் வெக்க போகும் போது ஞயாபகம் வந்து, உங்க குறிப்ப பாத்தேன்:-)

நான் உங்க மீன் குழம்பு குறிப்பை, மீனுக்கு பதிலா, கத்திரிக்காய் போட்டு(வெஜ்), கொஞ்சம் கூட மாத்தாம அப்படி பண்ணேன்:-)சூப்பரா வந்தது:-) கத்திரிக்காயை எண்ணெயில் வறுத்து குழம்புல சேர்த்தேன். கிட்டதட்ட மீன் குழம்பு டேஸ்டே வந்திடுச்சு:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு தங்கை ஹர்ஷினி அவர்களுக்கு, இந்த குறிப்பை சைவமாக செய்த தங்களுக்கு பாராட்டு. மற்றொரு தருனத்தில் மீனைக் கொண்டு செய்து பாருங்கள் அதன் சுவை கூட நன்றாக இருக்கும். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி டியர்.

டியர் மனோகரி மேடம்,

மீன் குழம்பு மாங்காய் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி.

மனோகரி மேடம் அவர்களுக்கு,
நான் எப்போதும் இந்த முறையில் தான் மீன் குழம்பு செய்வேன்.ஆனால் என் அம்மா அரைத்து கொடுக்கும் (கலந்த) மிளகாய்ப்பொடி போட்டு செய்வேன்.இந்த முறைதான் உங்கள் குறிப்பைப்பார்த்து தனி மிளகாய்ப்பொடி போட்டு செய்தேன் அதே சுவையுடன் இருந்தது.(இனி தனி மிளகாய்ப்பொடி தான் )நன்றி உங்களுக்கு.

அன்புடன்,
அபிராஜன்

நானும் ரொம்ப நாளாகவே சொல்ல நினைத்ததுதான். இந்த மீன் குழம்பை செய்து பார்த்தபிறகு நான் எப்போதும் வைக்கும் மீன்குழம்பின் செய்முறை எனக்கு மறந்துபோய்விட்டது. இந்த மெத்தர்டு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிட்டதால், இப்பஎல்லாம் இப்படித்தான் செய்கிறேன். நன்றி மனோகரி மேடம்.

அன்பு தங்கைகள் ரீட்டா, அபி, மற்றும் மலர், இந்த குழம்பை செய்து பார்த்து பின்னூடம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரின் பதிவுகள் மிகுந்த உற்சாகத்தை தந்தது நன்றி.

மனோகரி அக்கா, வீட்டில் மாங்காய் இருந்ததால் நேற்று உங்கள் முறைப்படி மெட்ராஸ் மீன் குழம்பு செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. உங்களுக்கு என் நன்றி!

டியர் விது சென்னையில் இந்த முறையில் தான் மாங்காய் சீஸன் சமயத்தில் மீன் குழம்பு செய்வார்கள்.இங்கு அதைப் போல் முடியாவிட்டாலும் எப்போதாவது செய்வதுண்டு, இதை நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

Portia Manohar
Madam i have a doubt.can we add tamarind to this or cannot.pls do advise.thanks

Portia Manohar

ட்யர் போர்டியா

தேவை இல்லை மாங்காய் சேர்ப்பதனால், மாங்காய் இல்லை என்றால் அதற்கு பதில் புளி சேர்க்கலாம்
ஜலீலா

Jaleelakamal

Thanks for clearing my doubt.Take care

Portia Manohar

மனோகரி மேடம் இன்னிக்கு மெட்ராஸ் மீன் குழம்பு செய்தேன்.மாங்காய் இல்லை.அதனால் புளி சேர்த்து செய்தேன்.சுவையாக இருந்தது.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டியர் கவிசிவா மீன் குழம்பை எப்படிச் செய்தாலும் சுவைதான்,இங்கு பெரும்பாலும் புளி சேர்த்து தான் நானும் மீன் குழம்பு செய்வேன்.நீங்க இந்த குறிப்பைச் செய்து பின்னூட்டம் அளித்தது மகிழ்வைத் தந்தது மிக்க நன்றி.

டியர் மனோகரி மேடம்,
(நேற்றே இந்த பின்னூடம் எழுதி பதிவு செய்ய முயற்சி செய்தேன் - பதிவாகவில்லை. இதோ மீண்டும் ஒரு முறை...)

நேற்று இரவு உங்க மெட்ராஸ் மீன் குழம்பு வைத்தேன். புளிக்கு பதிலாக மாங்காய் போட்டு வைப்பது எனக்கு புதிது. இந்த மெத்தெட்ல நான் ட்ரை பண்ணினேன். குழம்பு ரொம்ப அருமையா டேஸ்ட்டியா வந்தது. இன்னைக்கு லன்ச்கு அதுதான் கொண்டு வந்திருந்தேன்… ம்ம்ம்.. ‘...நேத்து வச்ச மீன் குழம்பு… ‘ என்று பாடத்தோணுது!! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ