நண்டு மசாலா

தேதி: September 6, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கடல் நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
தேங்காய் - அரைக்கோப்பை
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - மூன்று தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
கொத்தமல்லி - ஒரு கட்டு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நண்டை வெட்டி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேண்டிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்ப்பூவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சோம்பை போட்டு பொரிய விடவும்.
பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கி, தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்
பிறகு எல்லாவகைத் தூளையும், நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஒரு கோப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி நண்டு துண்டுகளையும், உருளைக்கிழங்குத் துண்டுகளைவும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தொடர்ந்து இரண்டு கோப்பை தண்ணீரும், உப்பையும் சேர்த்து வேகவிடவும்.
நண்டு வெந்து வாசனை வந்தவுடன் சிறிது கிளறி விட்டு இறக்கி விடவும்


மேலும் சில குறிப்புகள்