நியூடெல்லா ஷேக்

தேதி: October 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

நியுட்டெல்லா - 2 ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1 கப்
இனிப்பு - 1/2 ஸ்பூன்
விப்பிங் க்ரீம் - 3 ஸ்பூன்
சாக்கலேட் ஃப்லேக்ஸ் - சிறிது


 

நியூட்டெல்லா பால் மற்றும் சர்க்கரையை நுரை பொங்க அடித்து நீளமான ஒரு க்லாஸில் ஊற்றவும்
அதன் மேல் விப்பிங் க்ரீம் 3 ஸ்பூன் வைக்கவும்
அதன் மேல் துருவிய சாக்கலேட் தூவி குளிர பரிமாறவும்


இணையத்தில் பார்த்து செய்தேன் அருமையாக இருந்தது

மேலும் சில குறிப்புகள்


Comments

தலைப்பைப் பார்த்ததும் தளிகா நினைப்பு வந்தது. ;) குறிப்பு நன்றாக இருக்கிறது தளீ. நிச்சயம் சுவையாக இருக்கும். சின்னவங்க இருந்தால் செய்யலாம். எனக்கு இது அதிகம். :)
ஃபோட்டோ சேர்த்து விடுங்க.

‍- இமா க்றிஸ்

என் நியாபகம் எப்படி வந்துசுன்னு எனக்கு தெரியும்;)..எனக்கு இன்னமும் டவுட் தீரலை நட் ல செஞ்சதால நட்டெல்லாவா எல்லாரும் சொல்றாங்களே நியூட்டெல்லாவா இல்ல மத்தவங்க சொல்றாங்களே நுட்டெல்லாவா யாராவது க்லாஸ் எடுத்தா நல்லா இருக்கும்...இமா ஒரே ஒரு கப் தான் செய்தேன் என் மகளுக்கு கடைசி ஒரு துளி வரை விடவே இல்லை

ஹாய் தளிகா,நலமா...
நுடெல்லா மில்க் ஷேக் செய்தேன்..செம்ம டேஸ்டா இருந்தது.என் மகளும் விரும்பிக்
குடித்தால்

ஹசீன்

தளிகா,

சூப்பர் சாக்லேட் மில்க் ஷேக் ,என் மகளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

நட்டெல்லா என்பது தான் சரியான உச்சரிப்பு , நுட்டெல்லா என்பது இத்தாலியர்களின் உச்சரிப்பு. அவர்கள் பர்கரை(Burger) கூட பர்கர் என்பதற்க்குப் பதில் புர்கர் என்றுதான் சொல்வார்கள்.

நன்றி

நன்றி லூலூ ,வாணி...இவ்வளவு சீக்கிரம் பின்னூட்டம் கிடைத்த குறிப்பு எனக்கு இதான்...வாணி தெளிவான விளக்கம்..நானும் சொல்லும்போது நட்டெல்லான்னு சொல்வேன் ஆனால் எனக்கே சந்தேகம்..இட்டாலியன் கம்பனி ஆச்சே ஒருவேளை அவங்க தான் சரியோன்னு நினைப்பேன்.

பலமுறை செய்துவிட்டேன்.பதிவு போட நேரமில்லை.அருமையான குறிப்பு.நன்றி தோழி....