சம்பா கோதுமை ரவை கூட்டாஞ்சோறு

தேதி: October 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

சம்பா கோதுமை ரவை- 1கப்
துவரம் பருப்பு- 1/2கப்
சின்ன வெங்காயம்- 10
பச்சைமிளகாய்- 2
கேரட்- 1சிறியது
வெள்ளரிக்காய்- 10செமீ துண்டு
புடலங்காய்- 10செமீ துண்டு
முருங்கைகாய்- 1 சிறியது
கொத்தவரங்காய்- 5
வாழைக்காய்- பாதி
கத்திரிக்காய்- 2 சிறியது
தக்காளி- 1
முருங்கைக் கீரை- 2கைப்பிடி அளவு
புளி- நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை- 2இனுக்கு
சாம்பார் பொடி- 1 மேசைக்கரண்டி
மல்லிக்கீரை- சிறிதளவு
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

அரைக்க:
தேங்காய் துருவல்- 1/4கப்
சீரகம்- 1தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 2
பூண்டு- 2பல்
கறிவேப்பிலை- 1இனுக்கு

தாளிக்க:
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 3/4தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 2இனுக்கு
பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி


 

கோதுமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
துவரம் பருப்புடன் கலந்து கழுவி 10நிமிடம் ஊறவிடவும்
காய்கறிகளை ஒன்றரை இன்ச் நீளமுள்ள விரலளவு துண்டுகளாக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் தக்காளி மற்றும் வெட்டிய காய்கறிகள் சேர்த்து மேலும் 3நிமிடங்கள் வதக்கவும்.
ஊறவைத்த கோதுமை ரவை, பருப்பு சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கலக்கவும்.
உப்பு புளி காரம் சரி பார்த்து கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கைக் கீரையை வதக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாகவும் இல்லாமல் மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
நன்றாக கொதித்ததும் வதக்கிய முருங்கைக் கீரை மற்றும் அரைத்த தேங்காய் கலவை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
மிதமான தீயில் 3 முதல் 4விசில் வந்ததும் இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியதும் திறந்தால் சாதம் சற்று தளர்வாக இருக்கும்.
இதனிடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து மல்லிக்கீரை கலந்து கிளறி பரிமாறவும்..


சூடாக இருக்கும் போது தளர்வாக இருந்தால்தான் ஆறும் போது ரொம்பவும் இறுகி விடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சம்பா கோதுமையை கண்டதும் நீங்கன்னு தெரிஞ்சுது :) நல்ல குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி! இன்னிக்கு லஞ்சுக்கு செய்தேன். பிடிச்சிருந்தது. இங்கே ஷேர் பண்ணிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூப்பரா இருக்கு கவி.... வித்தியாசமா இருக்கு. கண்டிப்பாக செய்து பார்க்கறேன்..... விருப்பப்பட்டியலிலும் சேர்த்துட்டேன்ன்ன்ன்.... :))

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

செய்து பாருங்க ப்ரியா! இதே முறையில் புழுங்கல் அரிசியிலும் செய்யலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,

என்கிட்டே இருக்கு..இருக்கு..அவசியம் செய்துட்டு சொல்றேன்..முருங்கை கீரைக்கு alternate பண்ணிடலாம்தானே.. ..
ஆரோக்கியமான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முருங்கைக் கீரை இல்லாமலும் செய்யலாம் கவி. ஆனால் வேறு கீரை வகைகள் இதுக்கு சரியா வரும்னு தோணலை. காய்கறிகளும் நம் விருப்பபடி சேர்க்கலாம். ஆனால் கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர், ப்ரகோலி... சரியா வராது. நன்றி கவி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Gd mrng