சாம்பார் பொடி

தேதி: October 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

காய்ந்த மிளகாய் - அரை கப்
தனியா - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக அளந்து வைக்கவும்.
தனியாவை சிவக்க வறுக்கவும்.
காய்ந்த மிளகாயை சிறுதீயில் வறுக்கவும்.
மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுக்கவும்.
துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை நன்கு சூடு போக ஆற விடவும்.
பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து அவரவர் தேவைக்கு ஏற்ற பதத்தில் திரிக்கவும். மணமான சாம்பார் பொடி தயார்

கட்டி பெருங்காயம் சேர்ப்பவர்கள் ஒரு சிறு நெல்லியளவு சேர்க்கவும். விரல் மஞ்சள் இருப்பின் 2 இன்ச் சேர்க்கவும். இவற்றையும் லேசாக வறுத்து அரைக்கவும். மேலும் காரம், நிறம் வேண்டுபவர்கள் தனி மிளகாய் தூள் வறுக்காமல், பொடியுடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம். நன்கு ஆற வைத்து அரைப்பதால் ஈரம் கோர்க்காமல் நீண்ட நாட்கள் வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதுக்குள்ள அனுப்பியாச்சா :) சூப்பர். வறுத்து பொடிச்சிருக்கீங்க... வாசம் சொல்லவே வேண்டாம். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாம்பார் பொடி நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சாம்பார் பொடி சம வாசம்,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பரான சாம்பார் பொடி வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

valthukkal..............

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

வனி
முதல் பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி..
செய்து பாருங்க..

ஹளிலா,
பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி..

முசி,
பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி..

இந்து,
வாழ்த்திற்கு நன்றி..
தமிழில் பதிவிடுங்க உதவிக்கு அறுசுவை தமிழுதவி அல்லது http://www.google.com/transliterate/தமிழ்
ட்ரை பண்ணுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

Sambar podi romba easyana seimuraiya iruku... Kandippa senju parkanum... Vazhthukkal... (En mobileil tamil typing option illa sorry)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

good

இந்திரா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

நித்யா,
செய்து பாருங்க..
(நான் ஸ்ட்ரிக்ட்ல்லாம் இல்லை..ஒரு சின்ன விண்ணப்பம் தான் ..சாரி எல்லாம் வேண்டாம்)
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

ராஜேஸ்வரி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா சாம்பார் பொடி நல்லா செஞ்சு இருக்கிங்க.....வாழ்த்துக்கள்.....

ஷமீலா ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

எங்கள் ஊரில் மல்லி சேர்த்து சாம்பார் வைக்க மாட்டார்கள்.. உங்கள் குறிப்பை பார்த்து பொடி செய்தேன்..
மணமும் சுவையும் அசத்தல்..

ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் சுவை என்று இவ்வளவு நாட்கள் நினைத்து விட்டேன்..