கொத்தமல்லி ரைஸ்

தேதி: September 7, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 கப்
கொத்தமல்லி - ஒரு கட்டு
துருவிய தேங்காய் - ஒரு கப்
பச்சை பட்டாணி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5
வெண்ணெய்/ நெய் - 2 தேக்கரண்டி


 

2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி, சாதம் வைக்கவும்.
கொத்தமல்லி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் இவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில், வெண்ணெய்/ நெய் ஊற்றி, கடுகு வெடித்ததும், அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு, உப்பு, பச்சை பட்டாணி போடவும்.
கிரேவி கெட்டியான பிறகு, சாதத்துடன் கலக்கவும். இறுதியாக சிறிது நெய் விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ட்ரை பண்ணி பார்த்தேன்,நல்லயிருந்தது,நான் பட்டாணி போடலை.எனக்கு மட்டும் கொஞ்சம் செய்தேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.