மட்டன் ஸ்டியூ

தேதி: October 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

எண்ணை - 2 மேஜக்கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு
மட்டன் - 1/2 கிலோ
வெங்காய்ம் - 2
பச்சை மிள்காய் - 3
இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தக்காளி - 1
தேங்காய் 1/2 மூடி - பாலெடுத்து கட்டி பாலை ஒன்றாம் பால் பிறகு வரும் பாலை இரண்டாம் பாலாக எடுத்து வைக்கவும்
உருளை கிழங்கு - 1
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் எண்ணை காயவைத்து பட்டை 1 பெரியது,ஏலம் 4,கிராம்பு 2 சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்பு மட்டனை சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து கிளறி குக்கரில் 2 விசில் விட்டு மட்டனை முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்
பின்பு இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து உருளை கிழங்கும் சேர்த்து மட்டன் கிழங்கும் வேக திரும்ப விசில் விடவும்
பின்பு வெந்ததை உறுதி படுத்திக் கொண்டு கட்டி முதற்பாலை சேர்த்து கொதிக்க வைத்து திக்காக வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்


கீ ரைஸுக்கு மிகவும் பொருத்தமான ஸ்டியூ..கேரளாவில் விசேஷங்களுக்கு கீ ரைசுக்கும் ஆப்பத்துக்கும் கட்டாயம் செய்வார்கள்

மேலும் சில குறிப்புகள்