பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முதலாவதாக வந்து பட்டியை துவங்கியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.நீங்க கணவர் குடும்பத்தினர் அணியா.வரும் போதே வாதத்தோட வந்து இருக்கீங்க குட் குட்.

//குழந்தை இல்லை என்று தன் மகனுக்கு மறுமணம் செய்துவைக்க நினைப்பது. இந்த செயலை நிச்சயம் பெண்ணை பெற்றவர்கள் செய்ய மாட்டார்கள். எங்காவது மகளுக்கு குழந்தை இல்லை என்று மறுமணம் செய்த பெற்றோரை பார்த்ததுண்டா? இல்லையே. //அதானே குழந்தை இல்லைனு சொல்லி யாராவது பெண்களுக்கு மறுமணம் செஞ்சி வைக்கிறாங்களா என்ன? நியாயமான கேள்வி தான்...ஐயயோ அப்படினு நான் கேக்கலைங்க எதிரணியினர் கேக்குறாங்க சீக்கிரமா வந்து பதில் சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாங்க காங்கோ கல்பனா வாங்க.... உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி... நீங்களும் கணவர் குடும்பத்தினரே அணியா... சீக்கிரமா உங்கள் அனல் பறக்கும் வாதங்களோடு வாங்க ...

//தலைப்பில் மூன்றாவதாக ஒன்றையும் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அது யாதெனில், கணவர் குடும்பத்தாராலோ, மனைவி குடும்பத்தாராலோ குடும்பத்தில் விரிசல் ஏற்படாத குடும்பங்களில் பெரும்பாலும் தம்பதியிரிடையே வீரிசல் ஏற்படும். அதற்கு பெரும்பாலும் பொறுப்பு வகிப்பவர்கள் பெண்களா? ஆண்களா?// நீங்க சொல்ற மாதிரி மூன்றாவதா ஆண்களா பெண்களானு சேர்த்தா அது ஒரு தனி ட்ராக்கா போயிட்டு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த தலைப்பை வச்சி தனியா ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்...தவறாக ஏதேனும் சொல்லி இருப்பின் மன்னிக்கவும்.மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும் ஏற்றுக்கொள்கிறேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் , தலைப்பை தந்த தோழி பாரதிக்கும் வாழ்த்துக்கள்...
குடும்ப விரிசல்களுக்கு காரணம் கணவன் வீட்டார்களே என்ற தலைப்பில் நான் வாதாட போகிறேன்....
எல்லா மாமியாரும் பெண் பார்க்க வரும் போதும் சரி , திருமணத்தின் போதும் சரி ரொம்ப நல்லவங்களா தான் கண்ணுக்கு தெரியறாங்க ஆனா அவங்க வீட்டுக்கு நம்ம வாழ போகும் போது தான் அவங்க சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்குறாங்க...
அதென்னங்க அவங்க பெத்த பொண்ணுன்னா ஒரு நியாயம் , மருமகள்னா ஒரு நியாயம்..
வெளிநாட்டுக்கு மகள் கணவருடன் வாழ போகும் போது மாமியார் , நாத்தனார் தொல்லை இல்லாம மாப்பிளையோடு சந்தோஷமாக இரு என மனம் நிறைந்து அனுப்பி வைக்கும் அம்மா இதே மருமகள் மகனுடன் வாழ போனால் மட்டும் ஏன் இடி விழுந்தது போல் வருத்தபடுகிறார்கள்....
தன் பெண் நன்றாக வாழலாம் மருமகள் கணவனுடன் நிம்மதியாக வாழ கூடாது...இது என்ன நியாயம்?
சரி அவர்களே அரைமனதாக அனுப்பி வைத்தால் கூட சின்ன மாமியார், பெரிய மாமியார் போன்றவர்கள் எதேனும் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்...அவர்களுக்கு நாங்கள் அடித்துக் கொண்டால் ஒரு மெகா சீரியல் பார்த்த திருப்தி...(இதில் என்ன அல்ப சந்தோஷமோ தெரியவில்லை )நாளை அவர்கள் வீட்டிலும் இது போல் நடக்காது என்று என்ன நிச்சயம்?
பழக்கமில்லாத புது இடத்தில் வாழ போகும் பெண்களுக்கு தவறுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான்....
அவர்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக இருந்தவர்கள் என்பதையே மறந்து இது தெரியாதா அது தெரியாதா என்று குறை சொல்கிறார்கள்..
நம்மளிடம் சொன்னால் கூட பரவாயில்லை நேராக மகனிடமே புகார் பத்திரிக்கை வாசிக்கிறார்கள்..இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வரும் .
இங்கும் வந்து நம்மை நிம்மதியா வாழ விடுகிறார்களா போன் மூலம் தம்பதிகளுக்கு இடையே ஏதாவது பிரச்சனை கிளப்புவது , மொத்தத்தில் மருமகளை மகனை நம்மிடம் இருந்து பிரிக்க வந்த பெண்ணாகத்தான் நினைக்கிறார்களே தவிர மருமகளாக நினைப்பதே இல்லை..இதற்கு ஒன்றிரண்டு மாமியார்கள் வேண்டும் என்றால் விதிவிலக்காக இருக்கலாம்..
மீண்டும் வருகிறேன்....

வாழ்த்திற்கு நன்றி பிந்து.நீங்க மனைவி குடும்பத்தினர் அணியா. எதிரணியில வந்து முதல் ஆளா சீட்டு பிடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்.

//மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் ஏதேனும் சீட்டில் சேர்ந்து சேமித்தால் நல்லது என்று மாமியார் சொல்லும் போது யோசிக்க வேண்டிய ஒன்றாக தோன்றும் விஷயம் அதே கருத்தை அம்மா கொஞ்சம் மாற்றி சொல்லும் போது உடனே சரியானதாக தோன்றுவது இல்லையா?//அம்மா சொன்னா ஸ்ரீனு தோணுற விஷயம் மாமியார் சொன்ன ஏன் சரினு தோண மாட்டிங்குதுனு கேக்குறாங்க.வந்து பதில் சொல்லுங்கப்பா...

//அது என்னவோ பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பிறகும் அம்மாவிடம், பிடித்தவர்களிடம் எல்லாம் யோசனை / அறிவுரை கேட்கலாம்... அது போல் நடக்கலாம்... தப்பே இல்லை... ஆனால் ஆண்கள் மட்டும் அதையே செய்தால், மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக, பெற்றவர் சொல் பேச்சு கேட்டு நடக்கும் பொம்மைகளாக சித்தரிக்க படுகிறார்கள்... இதன் லாஜிக் தான் புரியவில்லை.//அதான அது என்ன லாஜிக் எனக்கும் புரியல. கொஞ்ச நேரம் பொருங்க எதிரணியில இருந்து யாராவ்து வந்து விளக்கம் சொல்றாங்களானு பாக்கலாம்..

உங்ககிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன். விரிவான வாதங்களோட சீக்கிரம் வாங்க.அதே நேரத்துல உங்க கையையும் பார்த்துக்கோங்க.வலி இப்போ பரவாயில்லையா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.நீங்க மனைவி குடும்பத்தினர் அணியா.சீக்கிரம் உங்கள் வாதங்களோடு வாங்க ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி. நீங்க கணவர் குடும்பத்தினரே காரணம் அணியா.அப்போ மனைவி குடும்பத்த்னரே அணிய ஒரு கை பாத்துடுவீன்ஙனு சொல்லுங்க.சீகிரம் உங்க மனசுல இருக்குறத எல்லாம் வாதங்களா வந்து கொட்டுங்கோ...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே.....
சீட் பிடிக்கவே அந்த பதிவு.இப்போ வருகிறேன் வாதங்களுக்கு...
நல்ல குடுமிப்பிடி போட வைக்கும் தலைப்பு....கொடுத்த தோழிக்கும் எடுத்த நடுவருக்கும் மிக்க நன்றி........வாழ்த்துக்களும்கூட......
நடுவரே தனிப்பட்ட முறையில் மனைவியோ கணவனோ இருவரும் யோசித்தாலே எத்தனை பெரிய பிரச்சனையும் ஒன்னுமில்லாததாக ஆகிவிடும்.....சோ நான் வாதிடுவதால் எங்கள் குடும்பத்தில் குழப்பமோன்னு நினச்சுடப்பிடாதாக்கும்.....அப்புறம் என்னவரிடம் அவ்ளோதான்.........
சரிசரி வாதத்திற்கு வருவோமா?
நடுவரே திருமணம் முடிந்ததும் பெண்ணின் தாய் தந்தை சொல்வது என்ன எப்படி சண்டைபோடுவது?எப்படி கூடகூட பதில்பேசி வாயாடுவது?இப்படியா??? சத்தியமா இல்லை நடுவரே......
பெண்பிள்ளை யார் எது சொன்னாலும் அனுசரித்துப்போ,மாமி சமையலில் அல்லது வேறு வேலைகளில் குறைசொன்னாலும் குறையாக எடுக்காதே தவறை திருத்துவதாக எண்ணி சரின்னு கேட்டுக்க, கணவனின் மனது புண்படும்படி நடவாதே......மற்ற உறுப்பினர்களையும் அனுசரித்து தேவைகளை கவனின்னுதான் சொல்லி அனுப்புவாங்க.....
மனைவிகள் கணவன் வீடு போன அடி=உத்த நிமிஷத்திலிருந்தே தன்வீடுன்னு எண்ணி எது எங்க இருக்கு சமையல் பொருட்கள் எங்கன்னு கவனிப்பா......ஆனால் மற்றவர்கள்(கணவன் வீட்டார்) பாருடா வந்தவுடனே நோட்டம்விடுறதைந்த அப்படின்னு நினைப்பாங்க.......கணவன் இருக்காரே முதலில் இருந்தே மனைவி வீடுன்னே எண்ணுவார் நம்மவீடுன்னு நினைத்தால்தானே அங்கு உரிமையோட பேச பழக......?
அடுத்து பொதுவா வேணும்னு பிரச்சனை பண்ரவங்க குறைவுதான் நடுவரே.ஆனாலும் உரிமைப்போராட்டத்தில் அதிக சண்டைகள் வரும் அதில் அதிக பங்கு இந்த கணவன் வீட்டாருக்குதான்......முதலில் கல்யாணம் முடிந்ததுமே பிள்ளையை மனைவி பிடுங்கிட்டான்ற எண்ணத்தில் வரும் சண்டைகள் பலவாறூ வெடிக்கும்.......தென் மச்சினன் கொழுந்திக்கு பிடித்த சாதம் பண்ணலை.........மாமாக்கு சுகர்னு தெரியாம ஸ்வீட் செஞ்சுட்டா இப்படி அல்பதனமான விஷயங்களில் வரும்.........
அடுத்து குழந்தையை கவனிக்கலைன்னு வரும்........முதல் குழந்தையாயிற்றே தெரியாததை சொல்லி கொடுக்கதானே கூட்டுகுடும்பமா இருக்கறது........இப்படி பலபல விஷயங்களில் வளர்ந்து வெடிக்கும் நடுவரே.........
நடுவரே எந்த பெண்ணைப் பெத்தவங்களும் கல்யாணம் பண்ணி வைப்பது பெண் குடும்பமாக சந்தோஷமா வாழத்தான்....பாசம் அதிகமான அவர்கள் அதை பிரிக்க நினைக்க மாட்டார்கள்..........
அதே மனநிலையில் ஆண்பிள்ளை வீட்டார் திருமணம் செய்து வைத்தாலும் அவர்களின் உரிமையுடனான பாசம்(தன் பையன்மேல்மட்டும்) அவர்களை பிரிக்கவே நினைப்பது கொடுமை ஆனால் அதுதான் உண்மை......

மீண்டும் வருகிறேன் விரைவில்........

கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளும் கூட பெரிதாகி விரிசல் விழுகிறது என்றால் அங்கே மூன்றாம் மனிதரின் தலையீடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த மூன்றாம் மனிதர் யாரென்று மேலோட்டமாகப் பார்த்தால் எல்லோரும் சட்டென்று சொல்வது கணவரின் குடும்ப உறவுகளைத்தான். ஆனால் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இது தவறு என்பது நடுவருக்குப் புரியும்.

ஒரு குடும்பத்தை விரிசல்களின்றி நடத்திச் செல்லும் பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் இருக்கிறது என்றாலும் அதை சற்று கூடுதல் கவனத்துடன் செய்வது மனைவியாகத்தான் இருக்கும். கணவரின் வீட்டார் சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று மனைவி உணர்ந்தால் அதை எப்படி சமாளித்து தன் குடும்பத்தை நிலைநிறுத்துவது என்பதை நன்கு அறிந்தவள் பெண். அங்கே அவள் கணவனுக்கு பின் தான் அவரது உறவுகள். அந்த உறவுகள் இல்லை என்றாலும் அது அவளைப் பெரிய அளவில் பாதிக்காது. தனிக்குடித்தனம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதன் மூலம் தன் குடும்பத்தில் விழப் போகும் விரிசலை தடுத்து விடுவாள்.

ஆனால் பெண்ணுக்கு பிறந்த வீட்டு உறவு என்பது உணர்வோடு கலந்த விஷயம். தன் பிறந்த வீட்டு குடும்பத்தினரால் ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அவள் கணவனையும் விட முடியாமல் பிறந்த வீட்டு உறவுகளையும் முடியாமல் குழம்பி நிற்பாள். நிச்சயம் தெளிவான முடிவு எடுக்க முடியாது. கணவருக்காக பிறந்த வீட்டை விட்டுக் கொடுத்தாலும் மனதின் ஓரத்தில் கணவர் மீது கசப்பு உருவாகும். அதே பிறந்த வீட்டுக்காக கணவரை விட்டுக் கொடுத்தாலும் கணவருக்கு மனைவியின் மீது கசப்பு ஏற்படும். இதுவே விரிசலுக்கு முதல் படியாக உருவெடுக்கும்.

தனிக்குடித்தனம் செல்லும் போதும் இதே பிரச்சினை வருமே என எதிரணியினர் கேட்பார்கள். தனிக்குடித்தனம் செல்லும் போது மனைவிக்காக அவன் பெற்றோரை விட்டு விலகினாலும் தனியாகவாவது அவனது பெற்றோருடன் சென்று உறவாடும் நிலை இருக்கும். ஆனால் கணவனுக்காக பெற்றோரை விட்டுக் கொடுக்கும் மனைவியால் தன் பெற்றோரை தனியாக சென்று கூட பார்க்கவோ உறவாடவோ முடியாத தடை ஏற்படும். பெற்றோருக்காக தனிக்குடித்தனம் செல்லாமல் தவிர்த்தாலும் தனிமையில் தன் மனைவியை கணவரால் சமாதானப் படுத்த முடியும். ஆனால் மனைவியால் தன் பெற்றோருக்காக கணவனை சமாதானப் படுத்துவது என்பது மிகக் கடினம். அது நமது சமுதாய சூழல் மற்றும் ஆணின் ஈகோ சம்பந்தப்பட்ட விஷயம்.

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் போதே மாமியார் பற்றிய பயத்தை உருவாக்குவதே பிறந்த வீட்டினர்தான். மாமியார் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போ அப்படீன்னு பல அறிவுரைகள் தன் மகளுக்கு புகட்டுவதோடு சீக்கிரமா உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கோ என்பது போன்ற அறிவுரைகளும் கொடுக்கப் படும். இது பெரும்பாலான வீடுகளில் நடக்கும் நிதர்சனமான உண்மை. இத தன் மகளின் மீதுள்ள அக்கறையால் கொடுக்கப் படும் அறிவுரைகளாகவே பெண் வீட்டினர் நினைக்கின்றனர். ஆனால் அது எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை உணராமல் இருக்கின்றனர் பெண்வீட்டார்.

எப்போது ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் ஏற்படும் சிறு சலசலப்புகளைக் கூட பிறந்த வீட்டுக்குத் தெரிய படுத்துகிறார்களோ அப்போதே சிக்கல்கள் தொடங்கி விடும். காரணம் பெண்ணின் பிறந்த வீட்டினரைப் பொறுத்த வரை தன் பெண் தவறே செய்யாதவள். அப்படியே செய்திருந்தாலும் அது அவ்வளவு பெரிய விஷயமாக அவர்களுக்குத் தெரிவதில்லை. மகளுக்கு அறிவுரை சொல்கிறோம் என்று சொல்லும் அறிவுரைகளும் அவர்களை அறியாமலேயே அந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டினரின் மீது வெறுப்பை ஏற்படச் செய்து விடும். என்னடா இது மொட்டைத்தலைக்கு முழங்காலுக்கும் முடிச்சு போடற மாதிரி இருக்கேன்னு யோசிக்கறீங்களா?

இப்போ தெளிவாகவே சொல்கிறேன். இப்போ ஒரு பெண் தன் அம்மாவிடம் வந்து புகுந்த வீட்டில் அப்படி சொன்னாங்க இப்படி சொன்னாங்கன்னு குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறாள்னு வச்சுக்கோங்க. எத்தனை வீடுகளில் "நீ என்னம்மா செய்தே" அப்படீங்கற கேள்வியை பெண்ணிடம் கேட்பாங்கன்னு நினைக்கறீங்க. ஒரு சில வீடுகளைத் தவிர்த்து பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கு தன் பெண் ஒன்றும் தெரியாத அப்பாவி மாமியார் வீட்டினர்தான் தவறு செய்பவர்கள் என்ற எண்ணம்தான் இருக்கும். அதே எண்ணத்துடன் தான் அவர்கள் அந்த பிரச்சினையை அணுகவும் செய்வார்கள். இப்போ மகளிடம் என்ன சொல்லுவாங்க? அவங்க எப்படி இருந்தாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ அப்படீம்பாங்க. மேலோட்டமாக பார்க்கும் போது இது நல்ல அறிவுரையாகத்தான் இருக்கும். ஆனால் அது மகளின் மனதில் என்ன எண்ணத்தை உருவாக்கும்னு நினைக்கறீங்க? தான் செய்வது சரிதான் மற்றவர்கள் செய்வதுதான் தவறு என்ற எண்ணத்தையும், மற்றவர்கள் தவறே செய்தாலும் தான் தானே அட்ஜஸ்ட் பண்ண வேண்டியிருக்கு என்ற எணத்தையும் உருவாக்கும். இந்த எண்ணம் மனதில் பதியும் போது புகுந்த வீட்டினர் என்ன செய்தாலும் தவறாகவேதான் தோன்றும். அப்புறம் என்ன மனதில் விரிசல்கள் தோன்றும்.

குடும்பத்தில் விரிசல் வராமல் இருக்கணுமா? புகுந்த வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றி பிறந்த வீட்டில் பேசாமல் இருந்தாலே அந்த பிரச்சினைகளால் குடும்பத்தில் விரிசல் உண்டாவதை தவிர்க்க முடியும். இல்லேன்னா பெண்ணுக்கு நல்லது செய்கிறேன் என்று அவர்களையும் அறியாமலேயே விரிசல்கள் விழ காரணமாக இருந்து விடுவார்கள்.

எதிரணியினருக்கான பதில்களோடு விரைவில் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்களும் கணவர் குடும்பத்தினரே அணியா... கணவர் குடும்பத்தினரே அணிக்கு பலம் அதிகமாயிட்டே போகுதுப்பா. மனைவி குடும்பத்தினர போட்டு தாக்க யாராவது சீக்கிரம் வாங்க...

//1 . மாமியார் பிரச்சனை - தன் மகனை எங்கே பிரித்து விடுவாளோ என்று எண்ணி அவுங்க பிரச்சனை பண்ணுவாங்க
2 . கவுரவம் - நாங்க பையனை பெத்தவுங்க, பையன் வீட்டு காரங்க அப்படி இப்படின்னு சொல்லி பெருசா அலட்டிகிறது. சின்ன விஷயத்த கூட ஊதி ஊதி பெருசா பண்றது.//ம்கன் நம்மள விட்டு போயிடுவானோங்கிற பயம்,பையன பெத்தவங்கங்கிற கௌரவம் இந்த மாதிரி காரணத்துனால கணவர் வீட்டு காரங்க பிரச்சனை பண்ணுறாங்கனு சொல்றாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவர் இந்துவுக்கு என் நன்றிகளும் வழ்துக்களும்.
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.

பெரும்பாலும் குடும்ப விரிசலுக்கு காரணம் கணவனின் உறவினர்களே என்ற அணிக்கு தோல்கொடுத்து பேச வந்துள்ளேன்.
நடுவர் அவர்களே ஒரு ஆண் சந்தோசமாக வாழத்தானே திருமணம் செய்து வெக்கிராங்க.அப்போ வர மருமகளை மகளாக பார்க்கும் மாமியார் எத்தனை பேர்.
திருமணமாகிய பின்பு வெளி ஊரில் வசிக்கும் ஒரு கணவன்,மனைவிக்கு குடும்ப அட்டை அவசியம் தானே? என் தோழிக்கு திருமணமாகி 2 வருடம் ஆகியும் இன்னும் குடும்ப அட்டை வாங்கவில்லையாம். ஏனென்றால் கணவன் வீட்டில் இருந்து இன்னும் அவர் பேரை நீக்கி தரவில்லையாம்.ஏனென்றால் அவர் பேரை நீக்கினால் அவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டதாக அர்த்தமாம். என் தோழிக்கு என்ன வருத்தம்னா ரேஷன் கார்டு இல்லாமல் சிலிண்டருக்கு ரொம்ப கஷ்ட்ப்படுகிறாளாம்.ரேஷன் கார்டு பேச்சை எடுத்தாளே இருவருக்கும் கடிப்பாக சண்டை நிச்சயமாம். இப்போது சிலிண்டர் தட்டுப்பாடு எவ்ளோ டிமான்டுனு தெரியும்தானே நடுவரே. என் தோழியின் மாமனார் பேர் நீக்கச் சான்றிதல் வாங்கி கொடுத்தால் என்ன குறைந்தா போவார்கள். இதனால் என் தோழிக்கும் அவள் கணவருக்கும் இப்போ கூட சண்டை வந்து 10னாட்கள் பேசவில்லையாம்.

//**********/மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் ஏதேனும் சீட்டில் சேர்ந்து சேமித்தால் நல்லது என்று மாமியார் சொல்லும் போது யோசிக்க வேண்டிய ஒன்றாக தோன்றும் விஷயம் அதே கருத்தை அம்மா கொஞ்சம் மாற்றி சொல்லும் போது உடனே சரியானதாக தோன்றுவது இல்லையா?//அம்மா சொன்னா ஸ்ரீனு தோணுற விஷயம் மாமியார் சொன்ன ஏன் சரினு தோண மாட்டிங்குதுனு கேக்குறாங்க.வந்து பதில் சொல்லுங்கப்பா*******//

மகன் சம்பாதித்து மாதம் எவ்வளவு பணம் தன் அம்மாவிற்கு கொடுத்தாலும் எத்தனை பேர் போதும் என்று சொல்கிறார்கள்? அதே மருமகளை சீட்டில் சேர சொல்லி அந்த சீட்டை எப்டி அபேஸ் பன்னுவதுனு முன்னாடியே ப்ளான் செய்யுறவங்களையும் நான் கேள்விபட்டிருக்கேன் நடுவரே.

வரதட்சனை என்றாலே அது பெண் வீட்டார் தான் குடுக்க வேண்டும் என்பதை வழக்கமாக்கி விட்டார்கள். எங்காவது மணமகன் வீட்டார் வரதட்சனை குடுத்திருக்கிறார் என்று கேள்விபட்டிருகிறோமா?

தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று என்னி தான் வரதட்சனை எவ்வளவு கேட்டாலும் செய்கிறார்கள்.அப்டி இருந்தும் கூட இன்றும் எத்தனை பெண்கள் கணவரின் உறவினர்களால் பிரிக்கப்பட்டிருகிறார்கள்....
இன்னும் வாதங்களுடன் வருகிறேன் நடுவரே......

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்