பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

இந்திரா,
முதல் பட்டி மன்றத்திலேயே கலக்கிட்டீங்க... நீங்க பட்டி மன்றத்தை நடத்திய விதம் ரொம்ப இம்ப்ரசிவா இருந்தது... வாழ்த்துக்கள் :-)

கொஞ்சம் ஆபிஸ் வேலை இருந்ததால் தொடர்ந்து நேரம் செலவிட முடியவில்லை. நீங்கள் அடுத்த முறை நடுவராக வரும் போது, இதற்கும் சேர்த்து காம்பன்செட் செய்து விடலாம் :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி... அடுத்து உங்கள எப்போ நடுவரா பார்க்கலாம்???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே சரியான தீர்ப்பு சொல்லியிருக்கீங்க நன்றி, பட்டியில் சிறப்பாக வாதிட்ட தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்ன நடுவரே இப்படி கேட்டுடீங்க இதுதான் உங்கள் முதல் பட்டிமன்றமுனு (நடுவராக) யாராலையும் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருக்கீங்க இதில் சந்தேகமில்லை... இன்னும் நடுவராக பல மன்றங்களை எடுத்து நடத்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
லலிதா

உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்