பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்னுடைய வாதம் பிரச்சனைக்கு காரணம் கணவர் வீட்டாரே!!

மாமியார்கள் செய்ர பெரிய தப்பு தன் மகளுடன் மருமகளை ஒப்பிட்டு பேசுவது.திருமணம் ஆகும் போது எல்லோரும் எல்லா வேலைகளையும் கற்று கொண்டு வருவதில்லை.போக போக கத்துக்க முடியும்.ஆனா அவங்க உங்க அம்மா என்ன உனக்கு ஒரு வேலையும் கற்று கொடுக்கலயானு கேட்பாங்க. என் மகளும் எல்லா படிப்பு படித்தவள் தான் நான் என் மகளுக்கு படிக்கும் போதே எல்லா வேலைக்லையும் கற்று கொடுத்து விட்டேனு குத்தி காட்டுவாங்க.தன் மருமகளும் மக மாதிரி தான் அவளுக்கு நல்லது என்ன கெட்டது என்னனு நம்ம தான் சொல்லி குடுக்கனும் ஏன் புரிச்சிக்க மாட்டங்கிறாங்க தெரியல?

அப்புறம் போன் மூலமாக பிரச்சனைய இழுத்து விடுவாங்க.அவங்க சொல்லுரத எதாவது கேட்காம விட்டுடோம்னா உடனே குறை சொல்லுரதுக்கு வெளி நாட்டில் இருக்கும் தன் மகனிடம் போன் பண்ணிருவாங்க.எல்லா நீ கொடுக்குற இடம் தான் மனைவி எப்படி வைக்கனுமோ அப்படி வைக்கனும் .சொல்லுவாங்க இல்லனா இப்படி தான் நடக்கும்னு சொல்லுவாங்க...

தன் மகனுக்கு அறிவுரை கூறுவாங்க அக்கா தங்கைக்கு வேணும் இருக்குறத செய்தா தான் நாம் நல்லா இருக்க முடியும்னு.அதுக்கு எதிர்மறையா மகள் கிட்ட சொல்லுவாங்க. நமக்கும் குழந்தைகள் செலவு அதிகமா இருக்கு அதுக்கு ஏற்ற மாதிரி உங்க அக்கா தங்கைக்கு சொல்ல முடியும்னு சொல்லுனு சொல்லுவாங்க.இது என்ன மகனுக்கு ஒரு நியாயம் மகளுக்கு ஒரு நியாயமா?

தன் மகள் கணவரோட இருந்தா அவங்க சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.அதே மருமகள் இருந்தா அவங்களுக்கு பொறுக்காது.அதுவும் அதிக பாசம் உள்ள மகன்னா அவங்களுக்கு தாங்க முடியாது.எங்க நம்ம மகன நம்ம கிட்ட இருந்து பிரிச்சிருவாளோனு. நமக்கு தோணாததை அவங்களே நமக்கு சொல்லி குடுப்பாங்க....

ஒரு வீட்டில இரண்டு மூன்று மருமக இருப்பாங்க.வீடுக்கு வரவங்க கிட்டலாம் என்னோட பெரிய மருமக மாதிரி இவ இல்லனு சொல்லுவாங்க.இவங்களே ஒற்றுமையா இருக்கனும்னு நினைக்கிறவாங்க கிட்ட பிரச்சனை ஏற்ப்படுத்து வாங்க....
இப்படியே எல்லா பிரச்சனைக்கும் அவங்களே காரணம்மா இருப்பாங்க ஆனா பலிய எல்லாம் வீட்டுக்கு வந்த மருமக மேல சொல்லுவாங்க.....

எனவே பிரச்சனைக்கு காரணம் கணவர் குடும்பத்தார் தான்.....

தோழிகளே பட்டில இது என்னோட முதல் பதிவு தவறு இருந்தா மன்னிக்கவும்.

வாழ்த்துக்கு நன்றி.. நீங்களும் கணவர் குடும்பத்தினரே அணியில சீட் பிடிச்சிட்டீங்களா ...
// மகன் சந்தோஷமா இருக்க தானே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைக்கிறீர்கள்!!! அப்படி சந்தோஷமா இருக்கும் போது அதை ஏன் உங்களால தாங்கிக்க முடியலை// எதிரணியினரே வாங்க வந்து பதில் சொல்லுங்க..

//வீட்டுக்கு வந்த மருமகள் தன் வீடா நினைச்சு எல்லார் மேலயும் என்ன சண்டை வந்தாலும் பாசமா இருக்கணும் னு நினைக்கிறங்க!! ஆனா அதையே மகன் தன் மாமனார் , மாமியார் மேல பாசம் காட்டுனா இவங்களுக்கு ஏன் தாங்கிக்க முடியலை??? பெண்ணிற்கு ஒரு நியாயம். பையனுக்கு ஒரு நியாயமா? இது என்னங்க அநியாயமா இருக்கு !!!//அதானே அநியாயமா இருக்கே ஆணுக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயமா?

//என்ன னா ஆளு (மனைவி) இல்லாதப்ப தன் மகனிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கொடுத்து இருவருக்கும் இடையே சண்டை வர வைத்து வேடிக்கை பார்க்கிறது யாருங்கோ??//நீங்க சொல்றது சரி தான் இத நானே பல வீட்டுல கண் கூடா பாத்து இருக்கேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முதல்முதலாய் பட்டிக்கு வந்த உங்களை அறுசுவையின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன். நீங்க கணவர் குடும்பத்தினரேனு வாதாட போறீங்களா கலக்குங்க.
பெண்வீட்டார் பெண் நல்லா இருந்தா போதும்னு நினைப்பாங்க கணவர் வீட்டார் தான் உரிமை போராட்டத்துல பிரச்சனை உண்டு பண்ணுறாங்கனு சொல்றீங்க... விரிவான வாதங்களோடு மீண்டும் வாங்க..

உங்க பேரு என்னனு தெரிஞ்சிக்கலாமா?காயத்ரினு நினைக்கிறேன் சரியா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு ரொம்ப நன்றி. நீங்களும் கணவர் குடும்பத்தினர் அணிக்காக வாதாட போறீங்களா சூப்பர். சீக்கிரம் விரிவான் வாதஙளோட வாங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஆரம்பகாலம் தொட்டே குடும்ப உறவுக்குள் விரிசல் வர கணவன்வீட்டாரே காரணமாக உள்ளனர். அவர்களே வரதச்சனை, குழந்தையின்மையினால் மறுமணம், இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். நம் நாட்டில் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமைபடுதுகிரார்களே தவிர மருமகனை யாரும் வெறுப்பதில்லை. கணவனும் மனைவியும் ஒரு சிறு விவாதத்தில் இருக்கும்போது கணவன் வீட்டாரே இடையில் புகுந்து பாருடா கூட கூட பேசுறா. வாய் இவளுக்கு அதிகம் என்று கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் மனைவி வீட்டில் உள்ளவர்கள் தன் மகளையே விட்டு கொடுத்து போமா என்று சொல்வார்கள். ஆண் வீட்டாரே பிரச்சனையை பெரிதுபடுத்தி விரிசல் வர காரனமாய் இருக்கிறார்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வாழ்த்திற்கு நன்றி. நீங்க எந்த அணி? அடடா நீங்களும் கணவர் குடும்பத்த தான் தாக்கி பேசப்போறீங்களா... வரும்போதே வாதத்தோடு வந்து இருக்கீங்க போல வெரி குட் வெரி குட்.

//அதென்னங்க அவங்க பெத்த பொண்ணுன்னா ஒரு நியாயம் , மருமகள்னா ஒரு நியாயம்..
வெளிநாட்டுக்கு மகள் கணவருடன் வாழ போகும் போது மாமியார் , நாத்தனார் தொல்லை இல்லாம மாப்பிளையோடு சந்தோஷமாக இரு என மனம் நிறைந்து அனுப்பி வைக்கும் அம்மா இதே மருமகள் மகனுடன் வாழ போனால் மட்டும் ஏன் இடி விழுந்தது போல் வருத்தபடுகிறார்கள்....
தன் பெண் நன்றாக வாழலாம் மருமகள் கணவனுடன் நிம்மதியாக வாழ கூடாது...இது என்ன நியாயம்?// தன் மகள் மட்டும் கணவருடன் சந்தோஷமா இருக்கனும் மருமகள் நிம்மதியா இருக்க கூடாதுனு நினைச்சி பிரச்சனை உண்டு பன்னுறாங்கனு சொல்றாங்க...எதிரணியில இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//பெண்பிள்ளை யார் எது சொன்னாலும் அனுசரித்துப்போ,மாமி சமையலில் அல்லது வேறு வேலைகளில் குறைசொன்னாலும் குறையாக எடுக்காதே தவறை திருத்துவதாக எண்ணி சரின்னு கேட்டுக்க, கணவனின் மனது புண்படும்படி நடவாதே......மற்ற உறுப்பினர்களையும் அனுசரித்து தேவைகளை கவனின்னுதான் சொல்லி அனுப்புவாங்க.....//பெண்ணை பெற்றவங நம்ம பொண்ணு நல்லா இருக்கனுனு நினைச்சி நல்லது தான் சொல்லி அனுப்புவாங்க அதுனால அவங்கனாள பிரச்சனை வராதுனு சொல்றாங்க.

//மனைவிகள் கணவன் வீடு போன அடி=உத்த நிமிஷத்திலிருந்தே தன்வீடுன்னு எண்ணி எது எங்க இருக்கு சமையல் பொருட்கள் எங்கன்னு கவனிப்பா......ஆனால் மற்றவர்கள்(கணவன் வீட்டார்) பாருடா வந்தவுடனே நோட்டம்விடுறதைந்த அப்படின்னு நினைப்பாங்க.......கணவன் இருக்காரே முதலில் இருந்தே மனைவி வீடுன்னே எண்ணுவார் நம்மவீடுன்னு நினைத்தால்தானே அங்கு உரிமையோட பேச பழக......?// நீங்க சொல்றதும் சரியா தான் தோணுது பாக்கலாம் எதிரணி என்ன சொல்றாங்கனு?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

// கணவருக்காக பிறந்த வீட்டை விட்டுக் கொடுத்தாலும் மனதின் ஓரத்தில் கணவர் மீது கசப்பு உருவாகும். அதே பிறந்த வீட்டுக்காக கணவரை விட்டுக் கொடுத்தாலும் கணவருக்கு மனைவியின் மீது கசப்பு ஏற்படும். இதுவே விரிசலுக்கு முதல் படியாக உருவெடுக்கும்.// ரொம்ப சரியா சொன்னீங்க

//தனிக்குடித்தனம் செல்லும் போதும் இதே பிரச்சினை வருமே என எதிரணியினர் கேட்பார்கள். தனிக்குடித்தனம் செல்லும் போது மனைவிக்காக அவன் பெற்றோரை விட்டு விலகினாலும் தனியாகவாவது அவனது பெற்றோருடன் சென்று உறவாடும் நிலை இருக்கும். ஆனால் கணவனுக்காக பெற்றோரை விட்டுக் கொடுக்கும் மனைவியால் தன் பெற்றோரை தனியாக சென்று கூட பார்க்கவோ உறவாடவோ முடியாத தடை ஏற்படும். பெற்றோருக்காக தனிக்குடித்தனம் செல்லாமல் தவிர்த்தாலும் தனிமையில் தன் மனைவியை கணவரால் சமாதானப் படுத்த முடியும். ஆனால் மனைவியால் தன் பெற்றோருக்காக கணவனை சமாதானப் படுத்துவது என்பது மிகக் கடினம். அது நமது சமுதாய சூழல் மற்றும் ஆணின் ஈகோ சம்பந்தப்பட்ட விஷயம்.// இதுல எங்க மனைவி வீட்டுகாரங்க பிரச்சனை உருவாக்குறாங்க? பெண்களோட இயலாமை கஷ்டம் ஆணோட ஈகோ தானே தெரியுது? எனக்கு புரியல...

//ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் போதே மாமியார் பற்றிய பயத்தை உருவாக்குவதே பிறந்த வீட்டினர்தான். மாமியார் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போ அப்படீன்னு பல அறிவுரைகள் தன் மகளுக்கு புகட்டுவதோடு சீக்கிரமா உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கோ என்பது போன்ற அறிவுரைகளும் கொடுக்கப் படும்.// பெத்தவங்க பொண்ணுக்கு கொடுக்குற தப்பான அறிவுரை தான் பிரச்சனையை உண்டாக்குதுனு சொல்றீங்க அப்படி தான? எதிரணியினரே வாங்க வந்து இதுக்கு பதில் சொல்லுங்க..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி. நீங்களும் கணவரே குடும்பத்தினரே அணியில சீட் பிடிச்சிட்டீங்களா...
// கணவன் வீட்டில் இருந்து இன்னும் அவர் பேரை நீக்கி தரவில்லையாம்.ஏனென்றால் அவர் பேரை நீக்கினால் அவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டதாக அர்த்தமாம். என் தோழிக்கு என்ன வருத்தம்னா ரேஷன் கார்டு இல்லாமல் சிலிண்டருக்கு ரொம்ப கஷ்ட்ப்படுகிறாளாம்.//உங்க தோழியின் நிலைமையை நினைச்சா பாவமாத்தான் இருக்கு.இப்படி பட்டவங்க நிறைய பேரு இருக்க தான் செய்றாங்க என்ன பண்ணுரது.

//மகன் சம்பாதித்து மாதம் எவ்வளவு பணம் தன் அம்மாவிற்கு கொடுத்தாலும் எத்தனை பேர் போதும் என்று சொல்கிறார்கள்? அதே மருமகளை சீட்டில் சேர சொல்லி அந்த சீட்டை எப்டி அபேஸ் பன்னுவதுனு முன்னாடியே ப்ளான் செய்யுறவங்களையும் நான் கேள்விபட்டிருக்கேன் நடுவரே.//எதிரணியினரே உங்க கேள்விக்கன பதில் வந்துடுச்சி பாருங்க ... இவங்க சொல்ரதும் சரியா தான் தோணுது. எல்லாரும் சேர்ந்து என்ன நல்லா குழப்புறீங்க போங்க. இப்ப தான் தெரியுது நடுவரா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பட்டி மன்றத்துக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். நீங்களும் கணவர் குடும்பத்தினர் அணியா.கணவர் குடும்பத்தார எல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போல இருக்கு.

// நீ கொடுக்குற இடம் தான் மனைவி எப்படி வைக்கனுமோ அப்படி வைக்கனும் .சொல்லுவாங்க இல்லனா இப்படி தான் நடக்கும்னு சொல்லுவாங்க...// இப்படி எல்லாமுமா சொல்றாங்க...

//தன் மகனுக்கு அறிவுரை கூறுவாங்க அக்கா தங்கைக்கு வேணும் இருக்குறத செய்தா தான் நாம் நல்லா இருக்க முடியும்னு.அதுக்கு எதிர்மறையா மகள் கிட்ட சொல்லுவாங்க. நமக்கும் குழந்தைகள் செலவு அதிகமா இருக்கு அதுக்கு ஏற்ற மாதிரி உங்க அக்கா தங்கைக்கு சொல்ல முடியும்னு சொல்லுனு சொல்லுவாங்க.இது என்ன மகனுக்கு ஒரு நியாயம் மகளுக்கு ஒரு நியாயமா?// மாமியார் மருமகளுக்கு ஒரு நியாயம் மளுக்கு ஒரு நியாயம் பேசி குடும்பத்துல குழப்பத்த உருவாக்குறாங்கனு சொல்றாங்க..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்