பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

// நம் நாட்டில் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமைபடுதுகிரார்களே தவிர மருமகனை யாரும் வெறுப்பதில்லை.//100% உன்மை.

கணவர் வீட்டர் தான் கனவனும் மனைவியும் பேசும் போது கணவனை ஏத்திவிட்டி பிரச்சனைய பெரிசாக்குறாங்கானு சொல்றீங்க அப்படித்தான?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பட்டி மன்றத்தில் இதுவரை இரு அணியினருக்கும் யார் யார் வாதாடி இருக்கிறார்கள் என பார்ப்போம்.

கணவர் குடும்பத்தினரே அணி
***************************
ஷமீனா,கல்பனா,அருட்செல்வி,ஜென்னிவினோ,கார்த்திகா,stargayu,ரேணுகா, ஷமீலா, ரேவதி,சாதிகா...

மனைவி குடும்பத்தினரே அணி
*****************************
பிந்து,கவிசிவா...

மனைவி குடும்பத்தினரே அணியினரின் எண்ணிக்கை ரொம்ப குறைவா இருக்கு.அவங்களுக்கு தோல் குடுக்க தோழிகள் சீக்கிரமா வாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என்னோட வாதத்த பொண்ணு பார்க்க வர்தலிருந்து ஆரம்பிக்கிறேன். பொண்ணு பார்க்கிறேன் பேர்வழினு ஒரு குட்டி கிராமமே திரண்டு வருவாங்க( என்னதான் நெட்ல பார்த்தாலும்) பாருங்க வந்தவங்க பொண்ண மட்டுமா பார்க்கிறாங்க வாய்க்கா,வரப்பு,வைக்கோல் போர், ஆட்டுமந்தை, மாட்டுக்கட்டுத்தறி எல்லாத்தையும் பார்த்து முடிச்சுட்டு கடைசியா பொண்ண மாப்பிள்ளையோட அம்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் உத்து உத்து பார்ப்பாங்க.மாப்பிள்ளையோட அக்கா தங்கை உறவு முறைகள் எல்லாம் பேச்சுகுடுப்பாங்க எதுக்கு பொண்ணு ஊமையானு செக் பண்றாங்களாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//இதுல எங்க மனைவி வீட்டுகாரங்க பிரச்சனை உருவாக்குறாங்க? பெண்களோட இயலாமை கஷ்டம் ஆணோட ஈகோ தானே தெரியுது? எனக்கு புரியல...//

ஹி ஹி புரியற மாதிரி சொல்லாததற்கு மன்னிச்சுக்கோங்கோ நடுவரே! அது என்னன்னா மனைவி வீட்டுக் காரங்க பிரச்சினை பண்ணினா மட்டும்தான் மனைவி கணவருக்காக பிறந்த வீட்டை விட்டுக் கொடுத்து விட்டு அதனால் கணவன் மீது கசப்பு வந்து விரிசல் வருமா. கணவர் வீட்டுக் காரங்க பண்ணும் பிரச்சினையினால் கணவர் மனைவிக்காக அவரது பெற்றோரை விட்டுக் கொடுத்து தனிக்குடித்தனம் போனால் தம்பதிக்கிடையே விரிசல் வராதா அப்படீன்னு எதிரணி கேள்வி கேட்பாங்கோ. அதுக்குத்தான் அப்படி தனிக்குடித்தனம் போனாலும் கணவர் தன் பெற்றோரை தனிமையில் சென்று பார்த்துக் கொள்வார். ஆனால் மனைவியின் வீட்டாரால் பிரச்சினை வந்து கணவனுக்காக பிறந்த வீட்டை விட்டுக் கொடுத்தாலும் மனைவியால் தொடர்ந்து தன் பெற்றோருடன் பேசக் கூட முடியாத சூழல்தான் வரும். அது கசப்பாகி தம்பதியினரிடையே கசப்பை ஏற்படுத்தும்னு சொன்னேனுங்க... இருங்க நடுவரே மூச்சு வாங்கிக்கறேன் :). புரிஞ்சிடுச்சுங்களா நடுவரே. இல்லேன்னா சொல்லுங்க மீண்டும் சபீனா போட்டு விளக்கறேன் :)

எதிரணியினர் சொல்றாங்க மாமியார் வீட்டுக் காரங்க தன் மகனிடம் சகோதர சகோதரிகளுக்கு செய்யணும்னு சொல்றாங்க. அதே தன் மகள்னு வரும்போது உனக்குன்னு சேர்த்துக்கோன்னு சொல்றாங்க இது நியாயமா அப்படீங்கறாங்க. நியாயம் இல்லைதான். இங்கே அவங்க மாமியார் அவங்களை அறியாமலேயே தன் பொண்ணோட குடும்பத்துல சிக்கல் வர மாதிரி நடந்துக்கிட்டாங்க பார்த்தீங்களா? நல்ல பெற்றோரா இருந்தால் என்ன சொல்லணும்? உன் அண்ணா உனக்கு செய்யணும்னு எதிர் பார்க்கற மாதிரி நீயும் உன் நாத்தனாருக்கு செய்யணும்னு சொல்லியிருக்கணுமா வேணாமா? இப்போ பொண்ணோட குடும்பத்துல சிக்கல் உண்டாக்கினது யாரு? யோசிங்க நடுவரே யோசிங்க

நீங்க யோசிச்சு நல்ல முடிவா எடுங்க இன்னும் பதில்களோட கொஞ்ச நேரத்துல வரேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//என்னோட வாதத்த பொண்ணு பார்க்க வர்தலிருந்து ஆரம்பிக்கிறேன். பொண்ணு பார்க்கிறேன் பேர்வழினு ஒரு குட்டி கிராமமே திரண்டு வருவாங்க( என்னதான் நெட்ல பார்த்தாலும்) பாருங்க வந்தவங்க பொண்ண மட்டுமா பார்க்கிறாங்க வாய்க்கா,வரப்பு,வைக்கோல் போர், ஆட்டுமந்தை, மாட்டுக்கட்டுத்தறி எல்லாத்தையும் பார்த்து முடிச்சுட்டு கடைசியா பொண்ண மாப்பிள்ளையோட அம்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் உத்து உத்து பார்ப்பாங்க.மாப்பிள்ளையோட அக்கா தங்கை உறவு முறைகள் எல்லாம் பேச்சுகுடுப்பாங்க எதுக்கு பொண்ணு ஊமையானு செக் பண்றாங்களாம்.// பொண்ணு பாக்குறதுல இருந்தே பிரச்சனை ஆரம்பமாகுதுனு சொல்றீங்க . பட்டி முடியுறதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் வந்துடுவீங்கள?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மன்னிப்பு எல்லாம் கேக்க கூடாது.மீறி கேட்டா நம்ம டீச்சர் மேடம் மாதிரி பென்ச் மேல நிக்க வச்சிடுவேன்.

மன்னைவி வீட்டுகாரங்க பிரச்சனை பண்ணும்போது அவங்க கூட கணவன் பேசகூடாதுனு சொல்றதுனால 2 பேருக்கும் நடுவுல பிரச்சனை வருதுனு சொல்றீங்க சரியா புரிஞ்சிக்கிட்டேனா...

//எதிரணியினர் சொல்றாங்க மாமியார் வீட்டுக் காரங்க தன் மகனிடம் சகோதர சகோதரிகளுக்கு செய்யணும்னு சொல்றாங்க. அதே தன் மகள்னு வரும்போது உனக்குன்னு சேர்த்துக்கோன்னு சொல்றாங்க இது நியாயமா அப்படீங்கறாங்க. நியாயம் இல்லைதான். இங்கே அவங்க மாமியார் அவங்களை அறியாமலேயே தன் பொண்ணோட குடும்பத்துல சிக்கல் வர மாதிரி நடந்துக்கிட்டாங்க பார்த்தீங்களா? நல்ல பெற்றோரா இருந்தால் என்ன சொல்லணும்? உன் அண்ணா உனக்கு செய்யணும்னு எதிர் பார்க்கற மாதிரி நீயும் உன் நாத்தனாருக்கு செய்யணும்னு சொல்லியிருக்கணுமா வேணாமா? இப்போ பொண்ணோட குடும்பத்துல சிக்கல் உண்டாக்கினது யாரு? யோசிங்க நடுவரே யோசிங்க//

யோசிச்சேன் நீங்க சொல்றது சரினு தான் தோணுது.கூடவே இன்னொரு சந்தேகமும் வருது அதே அம்மா மகன்கிட்ட பொண்ணுக்கு நிறய செய்யணும்னு சொல்லி சொல்லி மாமியாராவும் பிரச்சனை பண்ணுறாங்களே? அப்போ எதிரணி சொல்றதும் சரினு தான் தோணுது...

யப்பா என்னால முடியல அழுதுடுவேன்... இப்போ தான் சபீனா போட்டு விளக்குனதுல கொஞ்சம் தெளிவான மாதிரி இருந்துச்சி மறுபடியும் குழம்பிடுச்சி...

எல்லாரும் சீக்கிரம் சபீனாவோட வாங்க எனக்கு விளக்குறதுக்கு...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே இப்போ நாத்தனார் பற்றி சொல்ட்றேன். (இதெல்லாமே என் தோழிகளுடைய மனக்குமுறல்கள் தான்). தனது தங்கை ஒன்ஸ் அப்பான் அ டைம்ல் ஏதோ ஒரு பொருள் வாங்கி தருமாரு ஒரு விளையாட்டு போக்கில் கேட்டிருப்பார். அதை நாளடைவில் அவர் வாங்கி கொடுக்க மறந்திருப்பார்.

ஒரு புதிதாய் திருமணமான மனைவி முதல் முதலாய் ஒரு சின்ன பொருளை ஆசைப்பட்டு கேட்டால் எந்த கணவர்மாரும் வாங்கி கொடுப்பார்கள் தானே? அப்டி வாங்கி கொடுத்து அது நாத்தனாருக்கு தெரிய வந்தால் உடனே ஒரு ஏத்து ஏத்தி விடும் பாருங்க. நான் அன்னிக்கு கேட்டேன் என்க்கு வாங்கி கொடுக்கலை.உன் புது பொண்டாட்டி கேட்ட உடனே வாங்கி குடுக்குறனு. இத மனைவியிடம் கணவன் வந்து கூறும் போது மனைவியால் என்ன கூற முடியும். தன் மனதுக்குள் தான் சொல்லிக்கொல்ல முடியுமே தவிர, ஏன் என் மனைவிக்கு தான் வாங்கி கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லிவிட்டால் போதும் அங்கே சண்டை கன்ஃபார்ம்.

அதே போல் மனைவிக்கு ஒரு புடவையோ அல்லது சுடிதாரோ எடுத்தால் கணவன்மார்கள் வீட்டில் தங்கை இருப்பின் அவளுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அப்டியே எடுத்து கொடுத்தால் இந்த நாத்தனார்மார்கள் என்ன செய்ய வேண்டும்,

1.எதுக்கு அண்ணா எனக்கு. எனக்கே வீட்டில் இருக்குது.அண்ணிக்கு மட்டும் எடுத்துக்கொடுனு (இந்த மனசு யாருக்கும் வராதுனு நான் அடிச்சு சொல்ட்றேன் நடுவரே)
2. ம் நல்லா இருக்கு அண்ணா. நல்லா கலர் காம்பினேஷன் சூஸ் பண்ணி இருக்க நு சொல்லனும்.

ஆனால் வாங்கி கொடுத்தவுடன் நம்மளுக்கு எவ்ளோ ரூபாயில் எடுத்திருக்காங்க, அண்ணா மனைவிக்கு எவ்ளோ ரூபாயில் எடுத்திருக்காங்கனு தான்.
இன்னும் பல வாதங்களுடன் வருகிறேன் நடுவரே.....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

//கணவர் வீட்டுக் காரங்க பண்ணும் பிரச்சினையினால் கணவர் மனைவிக்காக அவரது பெற்றோரை விட்டுக் கொடுத்து தனிக்குடித்தனம் போனால் தம்பதிக்கிடையே விரிசல் வராதா அப்படீன்னு எதிரணி கேள்வி கேட்பாங்கோ. அதுக்குத்தான் அப்படி தனிக்குடித்தனம் போனாலும் கணவர் தன் பெற்றோரை தனிமையில் சென்று பார்த்துக் கொள்வார். ஆனால் மனைவியின் வீட்டாரால் பிரச்சினை வந்து கணவனுக்காக பிறந்த வீட்டை விட்டுக் கொடுத்தாலும் மனைவியால் தொடர்ந்து தன் பெற்றோருடன் பேசக் கூட முடியாத சூழல்தான் வரும். அது கசப்பாகி தம்பதியினரிடையே கசப்பை ஏற்படுத்தும்னு சொன்னேனுங்க...//

நான் தெரியாம தான் கேட்கிறேன்... மனைவி வீட்டு காரங்களோட என்ன பிரச்சனை வர போகுது... வாய்க்கால் தகறாரா!!!!!! அதெல்லாம் கணவன் கூட பிறந்த அண்ணன் தம்பிகள் கூட தான் வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறு எல்லாம்.. பொண்ணு வீட்டு காரங்க பொண்ணோட நல் வாழ்க்கைக்காக விட்டு கொடுத்து தான் போவாங்க....

சரி எதிர் அணி சொல்ற மாதிரியே வச்சுக்கோங்க... கணவர் வீட்டால பிரச்சனை வந்து தனி குடித்தனம் போறாங்கன்னு வச்சுக்கோங்க... அங்க கண்டிப்பா விரிசல் விழும்... கணவர்கள் மனசுல ஏதும் தோனாட்டி கூட அப்பப்பா போயி அம்மா அப்பாவை பார்த்துட்டு வர்ராங்களே... அப்போ நல்லா திரியை பத்த வச்சு தான் அனுப்புவாங்க... வீட்டுக்கு வந்ததும் வெடிக்கிற மாதிரி... தனி குடி தனம் வந்தாலும் வெடிக்கிறது வெடிக்க தான் செய்யும்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவருக்கு காலை வணக்கங்கள்.......

தற்போது நடந்துகொண்டிருக்கும் நிஜத்தை சொல்கிறேன்......இங்கே வீட்டு பக்கத்தில் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர்......மகளின் பெண்ணும்,மகனின் பெண்ணும் ஒரே வயது,பள்ளி செல்கின்றனர்.காலையில் மாமி மகளின் பெண்ணிற்கு மட்டும் தோசைவார்த்து ஊட்டிவிட்டுவிட்டு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மகனின் பெண்ணை கணாமல் விட்டது ஏன் நடுவரே??அந்த பிஞ்சு அம்மாவிடமு அப்பாவிடமும் சொல்லும்போது ஒன்றும் செய்யமுடியாமல் இருவரும் முழிப்பது ஏன் நடுவரே??மனைவி பிரச்சனை பண்ணுபவரா இருந்தா கிளம்புங்க தனிகுடுத்தனம்னு சொல்லியிருப்பா.......
மனைவி வீட்டார் பிரச்சனை செய்பவரா இருந்திருந்தா வாங்க மாப்பிள்ளே நாங்க இருக்கோம்னோ,பேரப்பிள்ளைகளை அனுப்புங்க நாங்க பார்த்துக்கறோம்னொ சொல்லியிருப்பர்.ஆனால் மகளிடம் சொன்னால் மருமகன் மனது சங்கடமாகி வாழ்வு சிக்கலாகும்னு ஒரே காரணத்தால் அவர்கள் சும்மா இருக்கின்றனர் நடுவரே......
நான் சொன்னது சேம்பிள்தான் இன்னும் பல நடக்கிறது, பிறந்த குழந்தையை அண்ணி தூக்கவேணாம்னு நினைக்கும் நாத்தனார்,தன் தோழிகுடும்பம் வந்ததும் தூக்கி கொடுக்கும்போது எவ்வளவு வலிக்கும்?இதையும் பொறுத்து வாழ்வது மனைவியும் மனைவி வீட்டாருமே......
கணவனுக்கு சின்ன அவமானம் வேணாம் நடுவரே.......அவமானப்படுத்துவதாக எண்ணியே இவர்கள் ஒதுங்கி இருப்பார்கள்..........தெரிந்த குடும்பத்தில் மகனின் மச்சினனுக்கு கல்யாணம் இவர்தானே மாப்பிள்ளைன்ற உரிமையில் செய்யனும்.....மச்சினனின் மதிப்பான பரிசுப்பொருளை மாமாவிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னார் மச்சினர். இதை பெரிய விஷயமாக கருதி என் மகனென்ன வேலையாளா இப்படி வேலை வாங்குரீங்கன்னு சண்டையிடும் கணவன் வீட்டார் இருக்கின்றனர் நடுவரே......!!!
மாமி வீட்டில் கூட்டா ஒரு விஷயம் நடக்குதுன்னு வையுங்க அங்கே பணம் பற்றாகுறையா இருக்கும் சமையத்தில் உன்னிடம் எவ்வளவு இருக்குமான்னு கேட்பது நல்குணமா?இல்லை அதையும் அதிகாரமாக தன்கை ஓங்கியிருக்கனும்னு எண்ணி சண்டையிலுத்து நடத்துவது நல்குணமா நடுவரே?? இதையும் மனைவி பொறுத்துதான் வாழ்கிறாள்,மனைவி வீட்டாரோ நடந்தது தெரியாததுபோலவே பார்த்துக்கொள்கின்றனர்..........

எங்கேயோ ஒரு குடும்பத்தில் மனைவி இறந்துவிட்டால் குழந்தைகளை மனைவியின் தாய்வீட்டிற்கு அனுப்பிவிட்டு கணவனுக்கு வேரொறு திருமணம் நடக்கும் நடுவரே.......வந்த மருமகளை தன்குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டவர்கள்,குடும்பம் ஒற்றுமையாக இருக்கனுமேன்னு எண்ணுபவர்கள் அவள் இல்லாவிட்டாலும் குழந்தைகளை வைத்து பார்க்கனுமோன்னோ........??
கணவன் எவ்வகை தவறு செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் இருவீட்டாரும்கூட, மனைவியின் சிறிய தவறுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்கப்படுவது ஏன் நடுவரே???சரி படுத்திக்க வாய்ப்பு கொடுக்கமாட்டார்களா??உடனே அனுப்பிடுவர் தாய் வீட்டிற்கு.......

கணவனுக்கு ஆயிரம் இல்லாட்டியும் நுறு நண்பர்களாவது இருப்பர்,பிரச்சனைகளை பேசி தெளிவடைவான்.
ஆனால் மனைவி? தோழிகள் கிடையாது இருந்தும் குடும்ப விவகாரம் சொன்னால் அசிங்கம், கணவன் வீட்டாருடன் பேசவே முடியாது,தாய் வீட்டில் சொன்னால் வறுத்தப்படுவர்.........
ஆகவே தனக்குள்ளே பொங்கி குமுறி சில சமையங்களில் வெடிக்கலாம், நாளுக்கும் வெடிக்கும் இவர்கள் என்றாவது வெடிக்கும் இவளின் கோபத்தை பெரிசு படுத்துவர்.......

ஆம்பிளை பேச்ச தட்டி பேசரியா?நீ நல்ல குடும்ப பெண்ணா?இப்படிதா வளர்த்தாங்களா உன்னை?பிடிவாதக்காரி.இப்படி பல பட்டங்களை சுமந்து கொண்டு தயாராக வேண்டியதுதான் தாய்வீடு செல்ல..........:( என்ன கொடுமை நடுவரே...... பெண்ணிற்கு கோவப்பட உரிமையில்லையா???

நடுவரே எப்போ சொன்னாலும் ஒன்றை அழுத்தமாக சொல்கிறேன் நடுவரே,

"பெண்ணிற்கு இருவீட்டையும் தன்வீடுன்னும்,இருவீட்டாரையும் தன்வீட்டாருன்னும் எண்ணிடும் பெருங்குணம் உண்டு;ஆணிற்கு சுயநலம் அதிகம் தன்வீடுன்னு மட்டும் எண்ணுவான்,மனைவி வீட்டில் ஆண்(அண்ணன் தம்பி)வாரிசு இருக்கோ இல்லையோ அது மனைவி வீடுன்னு ஒரே நினைப்புதான்.....விருந்தாளியாகச் செல்லும்போது ஸ்வீட் காரம் வாங்கி செல்லலாம்,அதற்கு மீறி மூச்........."
" பெண் வீட்டார் பெண்ணின் சந்தோஷ வாழ்க்கைக்காக எதையும் தியாகம் செய்வர்,ஏன் பெண்ணையே பார்க்கவரக்கூடாதுன்னு ஆடர் போட்டாளும் இருந்துப்பர் மனதை கல்லாக்கி;ஆனால் ஆண்வீட்டார் பாசம் எனும் பேரில் அதிகரம் செலுத்துவர்,ஆணைப்பெற்றவங்கன்ற திமிரில் எல்லைகள்மீறி கட்டளைகள் இடுவர்....."
இதுதான் எங்கும் நடக்குறது நடுவரே,......... நீங்களே கூறுங்கள் இதில் எந்த மனப்போக்கு குடும்பத்தை பிரிக்கும்னு........???

//ஒரு புதிதாய் திருமணமான மனைவி முதல் முதலாய் ஒரு சின்ன பொருளை ஆசைப்பட்டு கேட்டால் எந்த கணவர்மாரும் வாங்கி கொடுப்பார்கள் தானே? அப்டி வாங்கி கொடுத்து அது நாத்தனாருக்கு தெரிய வந்தால் உடனே ஒரு ஏத்து ஏத்தி விடும் பாருங்க. நான் அன்னிக்கு கேட்டேன் என்க்கு வாங்கி கொடுக்கலை.உன் புது பொண்டாட்டி கேட்ட உடனே வாங்கி குடுக்குறனு. இத மனைவியிடம் கணவன் வந்து கூறும் போது மனைவியால் என்ன கூற முடியும். தன் மனதுக்குள் தான் சொல்லிக்கொல்ல முடியுமே தவிர, ஏன் என் மனைவிக்கு தான் வாங்கி கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லிவிட்டால் போதும் அங்கே சண்டை கன்ஃபார்ம்.//கணவன் மனைவிக்கு என்ன வாங்கி கொடுத்தாலும் அதே மாதிரி அதே விலை இல்லை அத விட அதிக விலைல தனக்கும் வேணும்னு கேட்டு இந்த நாத்தனார்ங்க தொல்லை பண்ணி பிரச்சனை பண்ணுறதா சொல்றாங்க? இத எதிரணிகாரங்க அப்படி எல்லாம் இல்லவே இல்லனு மறுக்கமுடியுமா ???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்