பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

//சரி எதிர் அணி சொல்ற மாதிரியே வச்சுக்கோங்க... கணவர் வீட்டால பிரச்சனை வந்து தனி குடித்தனம் போறாங்கன்னு வச்சுக்கோங்க... அங்க கண்டிப்பா விரிசல் விழும்... கணவர்கள் மனசுல ஏதும் தோனாட்டி கூட அப்பப்பா போயி அம்மா அப்பாவை பார்த்துட்டு வர்ராங்களே... அப்போ நல்லா திரியை பத்த வச்சு தான் அனுப்புவாங்க... வீட்டுக்கு வந்ததும் வெடிக்கிற மாதிரி... தனி குடி தனம் வந்தாலும் வெடிக்கிறது வெடிக்க தான் செய்யும்...//தனி குடித்தனம் போனாலும் மகன்கிட்ட இல்லாததையும் பொல்லாதையும் போட்டு கொடுத்து பிரச்சனை உண்டாக்குறது கணவர் குடும்பத்தினர் தானாம். நான் சொல்லல எதிரணி சொல்றாங்க.வந்து என்னனு கேளுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//தற்போது நடந்துகொண்டிருக்கும் நிஜத்தை சொல்கிறேன்......இங்கே வீட்டு பக்கத்தில் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர்......மகளின் பெண்ணும்,மகனின் பெண்ணும் ஒரே வயது,பள்ளி செல்கின்றனர்.காலையில் மாமி மகளின் பெண்ணிற்கு மட்டும் தோசைவார்த்து ஊட்டிவிட்டுவிட்டு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மகனின் பெண்ணை கணாமல் விட்டது ஏன் நடுவரே??அந்த பிஞ்சு அம்மாவிடமு அப்பாவிடமும் சொல்லும்போது ஒன்றும் செய்யமுடியாமல் இருவரும் முழிப்பது ஏன் நடுவரே??மனைவி பிரச்சனை பண்ணுபவரா இருந்தா கிளம்புங்க தனிகுடுத்தனம்னு சொல்லியிருப்பா.......//உண்மை தான் மகள் வயித்து பிள்ளைங்ககிட்ட ஒரு மாதிரியும் மகன் வயித்து பிள்ளைங்ககிட்ட ஒரு மாதிரியும் நடந்துக்கிறவங்க நிறைய பேர நானே பார்த்து இருக்கேன்.

//கணவன் எவ்வகை தவறு செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் இருவீட்டாரும்கூட, மனைவியின் சிறிய தவறுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்கப்படுவது ஏன் நடுவரே???சரி படுத்திக்க வாய்ப்பு கொடுக்கமாட்டார்களா??உடனே அனுப்பிடுவர் தாய் வீட்டிற்கு.......// நியாயமான கேள்வி

//"பெண்ணிற்கு இருவீட்டையும் தன்வீடுன்னும்,இருவீட்டாரையும் தன்வீட்டாருன்னும் எண்ணிடும் பெருங்குணம் உண்டு;ஆணிற்கு சுயநலம் அதிகம் தன்வீடுன்னு மட்டும் எண்ணுவான்,மனைவி வீட்டில் ஆண்(அண்ணன் தம்பி)வாரிசு இருக்கோ இல்லையோ அது மனைவி வீடுன்னு ஒரே நினைப்புதான்.....விருந்தாளியாகச் செல்லும்போது ஸ்வீட் காரம் வாங்கி செல்லலாம்,அதற்கு மீறி மூச்........."
" பெண் வீட்டார் பெண்ணின் சந்தோஷ வாழ்க்கைக்காக எதையும் தியாகம் செய்வர்,ஏன் பெண்ணையே பார்க்கவரக்கூடாதுன்னு ஆடர் போட்டாளும் இருந்துப்பர் மனதை கல்லாக்கி;ஆனால் ஆண்வீட்டார் பாசம் எனும் பேரில் அதிகரம் செலுத்துவர்,ஆணைப்பெற்றவங்கன்ற திமிரில் எல்லைகள்மீறி கட்டளைகள் இடுவர்....."// எதிரணியில இதுக்கு என்னப்பா பதில் சொல்ல போறீங்க சீக்கிரமா வாங்க. கணவர் குடும்பத்தாரே கை ஓங்கிட்டே போகுது..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மனைவி குடும்பத்தினரே காரணம் அணியினர் எங்கப்பா போயிட்டீங்க. உங்க அணி பலவீன்மாகிட்டே போகுது.சீக்கிரம் வாங்க வந்து எதிரணியினர உண்டு இல்லைனு பண்ணுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பிறந்த சில தினங்களே ஆன நம்ம நடுவர் இந்திராவுக்கும்,எங்கள் சண்டையை பார்க்க ஆசை பட்டு இப்படி ஒரு தலைப்பை சொன்ன பாரதிக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆஹா! இனி பட்டில கரண்டி,உருட்டு கட்டை எல்லாம் பறக்கும்ன்னு சொல்லுங்க.(பின்னெ கணவன் ,மனைவி சண்டையாச்சே பறக்காமலா)

நடுவரே சந்தேகமே இல்லை குடும்ப விரிசல்களுக்கு காரணம் முழுக்க முழுக்க பெண் வீட்டார் தான்...இதை நான் யார் தலையில் அடித்து வேனும்ன்னாலும் சொல்லுவேன்.

நடுவரே!முதலில் யாருக்குமே யாரையுமே முழுசா ஏற்று கொள்ள கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கும்.நான் கணவன் வீடு,மருமகளை சொல்கிறேன்.இந்த நேரத்தில் சின்ன சின்ன பூசல்கள் வருவது சகஜம் தான் அந்த நேரத்தில் நம்ம அம்மனி என்ன செய்வாங்க தெரியுமா உடனே அம்மா வீட்டுக்கு கண்ணீரும் கம்பளியுமா ஃபோன் போடுரது.உடனே அம்மாக்கு இரத்தமெல்லாம் கொதிக்க ஆரம்பித்து விடும்.

உடனே இதை உன் கணவரிடம் சொன்னியா முதல்ல அவங்களிடம் சொல்லி அவங்க அம்மாவை அல்லது சம்பந்தப்பட்ட அந்த நபரை திட்ட சொல்வது.
அதன் பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பல்லை கடித்து கொள் உங்க அப்பாவிடம் சொல்லி சீக்கிரமே உன்னை தனி குடித்தனம் வைக்க ஏர்ப்பாடு செய்ய சொல்லுரேன்னு ஆறுதல் சொல்லுவாங்களாம்.

இது அந்த பெணோட மனதிl ஆழமா பதிய ஆரம்பித்து விடுகிறது.அந்த பொண்ணு என்னா செய்யும்.... மாமியார் எது சொன்னாலும் அவங்களை பார்த்து பல்லை கடிக்க ஆரம்பித்து விடும்.அப்போ அந்த மாமிக்கு கோவம் வர தானே செய்யும்.
உன்மையா அந்த அம்மா என்னா சொல்லி இருக்கனும் இதையே நான் சொன்னதா நினைத்துக்கொள்மா.அவங்க நல்ல குணத்தில் இருக்கும் போது நல்ல விதமா எடுத்து சொல்லு என்று தானே நடுவரே சொல்லனும்.

ஆனால் பெரும்பாலான அம்மாக்கல் இப்படி சொல்வதில்லை நடுவரே!

தன் மகளுக்கு சப்போர்ட் பண்ணுரோம் என்ற அர்த்தத்தில் அவர்களை தூண்டி விட்டு தான் கொண்டு இருக்கிறார்கள்.

பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே மாமியார்,நார்த்த்னார் என்றாலே கெட்டவர்கள் போலவே காட்டி வளர்த்துவிட்டார்கள்.எனவே அவங்க போன இடத்தில் பயத்தால் முகத்தை உர்ருன்னு வச்சி இருப்பாங்க காலப்போக்கில் பயம் கோபமாக மாறிவிடும்...

இதற்கெல்லாம் யார் காரணம்? யார் ஆரம்பம்?
நடுவரே!பெண் வீட்டார் தான் முழு காரணம்

SSaifudeen:)

//சின்ன சின்ன பூசல்கள் வருவது சகஜம் தான் அந்த நேரத்தில் நம்ம அம்மனி என்ன செய்வாங்க தெரியுமா உடனே அம்மா வீட்டுக்கு கண்ணீரும் கம்பளியுமா ஃபோன் போடுரது.///

அம்மாக்கிட்ட சொல்லி அழ தான் முடியும்... இந்த மாமியார் சும்மா வா இருப்பாங்க... அதே நேரத்துல அக்கம் பக்கத்து வீட்டுல எல்லாம் போயி "

"சீமையில இல்லாத ராசாத்தி னு ஊர் பூராம் பாத்து இவளை கட்டி வச்சேன் பாரு னு" கரிச்சு கொட்டிடுவாங்க...

பூசலுக்கு முதல் காரணம் அவங்களா தான் இருப்பாங்க... அது வேற விஷயம்.. அவங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் எவ்வளவு தன்மையா நடந்துக்கணும் னு யோசிக்க மாட்டாங்க...

//மாமியார் எது சொன்னாலும் அவங்களை பார்த்து பல்லை கடிக்க ஆரம்பித்து விடும்.அப்போ அந்த மாமிக்கு கோவம் வர தானே செய்யும்.//

அந்த பொண்ணவது பல்லை கடிக்கிறதோட நிறுத்திடுது... ஆனா அந்த மாமியார்( கணவர் வீட்டு ஆளுக) அந்த பொண்ணையே ல கடிச்சு துப்புறாங்க.

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவர் அவர்களுக்கு எனது அன்பு வணக்கங்கள் ,எனது தலைப்பினை தேர்ந்தெடுத்தமைக்கும் மிக்க நன்றி .

நேரமின்மையால் அனைத்தையும் ஒரே பதிவில் இட்டுள்ளேன் ,கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படிக்கவும் நடுவரே .

தற்போது பெரும்பாலும் குடும்பவாழ்வில் விரிசல்கள் ஏற்பட்ட வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றன ,அந்த விரிசல்கள் இறுதியில் விவாகரத்தாக முடியும் நிலையிலேயே பெரும்பாலும் தற்போது சூழலில் தள்ளப்படுகின்றன நடுவர் அவர்களே .இத்தகைய பிரச்சனையின் ஆணி வேர் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் நடுவரே , அப்படி ஆராய்ந்து பார்க்கும் போது முதலும் மூலகாரணமும் கணவன் மனைவி தான் என்றாலும் அவர்களுக்குள் பிரச்சனை எப்படி உருவானது என்று சற்றே யோசித்துப் பார்த்தால் ஒன்று பிரச்சனைக்கு காரணமானவர்கள் கணவனின் குடும்பத்தினரோ அல்லது மனைவியின் குடும்பத்தினரோ தான் இருப்பர் .

நடுவர் அவர்களே தனது புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் எந்த ஒரு பெண்ணிடமும் அந்த பெண்ணின் கணவனானவர் திருமணமான முதல் நாளில் , தனது மனைவியிடம் அழுத்திக் கூறும் வார்த்தை பொதுவாக என்னவாக இருக்குமென்றால் ,நீ என்னை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை ,மாறாக கணவன்மார்கள் மனைவியிடம் எனது குடும்ப உறவுகளை நீ பொறுத்து (அட்ஜஸ்) செய்து போக வேண்டும் என்றும் ,அவர்கள் உன்னை ஏதேனும் பேசினாலும் நீயே தாழ்ந்து போக வேண்டும் என்றே கூறுவார்கள் .இது முழுக்க முழுக்க அப்பட்டமான உண்மை நடுவர் அவர்களே ,உங்களுக்கும் இது உண்மை என்று தெரியும் .
இதிலிருந்தே தெரியவில்லையா நடுவரே ,தனது குடும்பத்தினர் என்ன செய்தாலும் நீ அதனை பொருத்து அடங்கி போக வேண்டும் என்றும் ,எனது குடும்பத்தவர்கள் என்ன செய்தாலும் நீ அவர்களுக்கு தாழ்ந்து தான் போக வேண்டும் என்றும் ஒரு கணவன் கூறுவதனால் ,அந்த பெண்ணுக்கு தன் புகுந்த வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பற்றியும் லேசான பயம் ஆரம்பம் முதலே தலை தூக்க ஆரம்பித்து விடுகிறது ,அந்த பயமே அன்றைய முதல் நாளிலேயே கணவன் மனைவிக்கு இடையே ஒரு லேசான பிளவு வர அஸ்திவாரமாக ஆகி விடுகிறது .
நடுவரே காதல் திருமணமாக இருந்தாலும் சரி ,அல்லது பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும் சரி ,கணவன் மனைவி இருவரும் குடும்ப உறவு (உறவினர்கள்) என்னும் பந்தத்தில் நுழையும் போது கண்டிப்பாக கணவனின் இத்தகைய பேச்சு மனைவிக்கு மட்டுமல்லாமல்,கணவனுக்கும் சேர்த்து தங்களின் இல்லற வாழ்க்கைக்கு ஒரு ஆரம்ப கால இடி தான் .
இதனால் பெரும்பாலான பெண்கள் நாம் நம் கணவர் சொல்வது போல் கேட்டு தனது புகுந்த வீட்டில் ஒரு மகளாக அனைவர்க்கும் பணிவிடை செய்ய வேண்டும் என்றும் ,யார் மனதும் கோணாமல் நடக்க வேண்டும் என்றும் ஆரம்பம் முதலே நினைத்திருப்பாள் ,இதன் பொருட்டு அந்த பெண் எதையும் வெளிப்படயாக பேச முடியாத ,செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப் படுவாள் .சுய மரியாதையை விட்டு கொடுத்து வாழ்ந்து கொண்டிருப்பாள் , எதை செய்வதிலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கும் ,ஐயோ இதை செய்தால் குற்றமா ?அதை செய்தால் குற்றமா ?என அவள் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கும் நடுவரே .மொத்தத்தில் அவள் ஒரு அடிமையை போல் தன்னை எண்ணிக் கொள்வாள் .மேலும் இப்படி இருக்கும் பெண் எப்போதாவது எதற்காகவாவது கொஞ்சம் வாயை திறந்தாலும் உடனே அங்கே குடும்ப உறவுகளால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் .இவ்வளவு நாள் ஊமை மாதிரி இருந்துட்டு எப்படி பேசுறா பாருன்னு தன் பிள்ளை கிட்ட இல்லாதது பொல்லாததும் சொல்லி ஆணின் பெற்றோர் அதிலும் பெண்ணின் மாமியார் கொஞ்சம் கண்ணை கசக்கி கூறியதும் ,அந்த பெண்ணுக்கு அடி உதை தான் ,இது ஆரம்பம் தான்.பின்னர் ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே எழுப்பி அதையே தொடர்கதை ஆக்கி விடுவார்கள் ஆணின் வீட்டார் ,அவர்களால்(ஆணின் உறவுகளால் ) நிம்மதி நிலவாத சூழ்நிலையில் ஒரு பெண் தனி குடித்தனம் போகலாம் என்று ஒரு நிலையில் முடிவெடுத்தால் அவ்வளவு தான் ,ஆணின் பெற்றோர் உறவினர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்து விட்டு நாங்கள் செத்து விடுகிறோம் ,அப்புறம் என் பிள்ளை தனியாக இங்கேயே இருக்கட்டும் என்று நயவஞ்சகமாக பேசி அவர்கள் தனியே போகாத படி தடுத்து அந்த பெண்ணை தினமும் ஒவ்வொரு விதமாக வறுத்து எடுப்பார்கள் .இதனால் அந்த பெண்ணுக்கு நிம்மதி இருக்காது ,அந்த பெண்ணின் குடும்பத்தில் வந்து ஏதேனும் கேட்டால் உடனே குடும்பத்தில் விரிசல் ஏற்படும் .எனவே பெண் குடும்பத்தினரும் தன் பெண்ணின் வாழ்கையை நினைத்து கைகட்டி வாய்பொத்தி நிற்க வேண்டிய நிலை .இப்படி தான் இன்று நிறைய குடும்பங்கள் போய்க் கொண்டு இருக்கின்றன நடுவர் அவர்களே ,

இன்னும் ஒரு சில பெண்கள் ஆரம்பம் முதலே நாம் ஏன் அடங்கி போக வேண்டும் என்று தனது போக்கில் நடந்து கொண்டு இருப்பார்கள் ,ஆனால் கணவனுக்கும் அவர்களுக்கும் இடையில் நல்ல விதமாக தான் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்திருக்கும் ,
இதில் அந்த பெண்ணின் மனதை பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் கணவனின் உறவினர்கள் உள்ள குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைவாக இருக்கும் ,இதற்க்கு நேர்மாறாக எடுத்ததெர்க்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் உறவுகள் இருந்தால் கணவனின் பெற்றோரோ உறவினரோ ,சம்பத்தப்பட்ட ஆணிடம்(கணவனிடம் ) நீ அவளை ஆரம்பத்திலேயே விட்டுட்டே டா ,அதான் அவளோட இஷ்டத்துக்கு ஆடுறா ,எங்களை மதித்து நடக்கலனாலும் பரவாயில்லை ,அவ உன்னை மதிக்க மாட்டுறாலேனு நல்லா ஏத்தி ஏத்தி சொல்லி, அந்த பெண்ணுக்கு அடங்கா பிடாரி பட்டம் கொடுத்து தனது பிள்ளையின் கோபத்தை தூண்டும் வண்ணம் ஆக்கிவிட்டு ,இறுதியில் அந்த கணவனே மனைவியை சந்தேகம் பிடிக்கும் வண்ணம் கூட ஆக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு சில உறவினர்கள் ,சரி கணவன் சொல்படி கேட்டு நடப்போம் என்று அந்த பெண் இல்லாமல் தன்னை சந்தேகபட்டதற்காக வாழ்வே வேண்டாமென வாழ்வை உதறித் தள்ளி போகும் பெண்கள் வாழ்வே அதனால் சுழியம் ஆகி விடுமே நடுவரே ,
மேற்கண்டதிலிருந்து நீங்களே பாருங்கள் நடுவரே ,
எல்லா பிரச்சனைக்கும் காரண கர்த்தா யார் தான் ?என்று.
உங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன் நடுவரே .நன்றி வணக்கம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வாழ்த்திற்கு நன்றி. மனைவி குடும்பத்தாருக்கு தோ குடுக்க வந்துட்டீங்களா சூப்பர்.அப்போ எதிரணியினர துவம்சம் பன்னிடுங்க....

//நடுவரே சந்தேகமே இல்லை குடும்ப விரிசல்களுக்கு காரணம் முழுக்க முழுக்க பெண் வீட்டார் தான்...இதை நான் யார் தலையில் அடித்து வேனும்ன்னாலும் சொல்லுவேன்.// ஒரு நிமிஷம் இருங்க நான் குனிஞ்சிக்கிறேன் அப்புறமா யாரு தலைல வேணும்னாலும் அடிங்க. அப்பாடி என் தலை தப்பிச்சது;)

//இது அந்த பெணோட மனதிl ஆழமா பதிய ஆரம்பித்து விடுகிறது.அந்த பொண்ணு என்னா செய்யும்.... மாமியார் எது சொன்னாலும் அவங்களை பார்த்து பல்லை கடிக்க ஆரம்பித்து விடும்.அப்போ அந்த மாமிக்கு கோவம் வர தானே செய்யும்.
உன்மையா அந்த அம்மா என்னா சொல்லி இருக்கனும் இதையே நான் சொன்னதா நினைத்துக்கொள்மா.அவங்க நல்ல குணத்தில் இருக்கும் போது நல்ல விதமா எடுத்து சொல்லு என்று தானே நடுவரே சொல்லனும்.

ஆனால் பெரும்பாலான அம்மாக்கல் இப்படி சொல்வதில்லை நடுவரே!// பென்களோட அம்மா சொல்ற அற்வுரைதான் குடும்பத்துல குழப்பத்துக்கு காரணம்னு சொல்றீங்க அப்படித்தான? எதிரணி என்ன சொல்றாங்கனு பாப்போம்

//பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே மாமியார்,நார்த்த்னார் என்றாலே கெட்டவர்கள் போலவே காட்டி வளர்த்துவிட்டார்கள்.எனவே அவங்க போன இடத்தில் பயத்தால் முகத்தை உர்ருன்னு வச்சி இருப்பாங்க காலப்போக்கில் பயம் கோபமாக மாறிவிடும்...// ஒத்துக்க கூடிய விஷயம் தான்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//அம்மாக்கிட்ட சொல்லி அழ தான் முடியும்... இந்த மாமியார் சும்மா வா இருப்பாங்க... அதே நேரத்துல அக்கம் பக்கத்து வீட்டுல எல்லாம் போயி "

"சீமையில இல்லாத ராசாத்தி னு ஊர் பூராம் பாத்து இவளை கட்டி வச்சேன் பாரு னு" கரிச்சு கொட்டிடுவாங்க...

பூசலுக்கு முதல் காரணம் அவங்களா தான் இருப்பாங்க... அது வேற விஷயம்.. அவங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் எவ்வளவு தன்மையா நடந்துக்கணும் னு யோசிக்க மாட்டாங்க...

அந்த பொண்ணவது பல்லை கடிக்கிறதோட நிறுத்திடுது... ஆனா அந்த மாமியார்( கணவர் வீட்டு ஆளுக) அந்த பொண்ணையே ல கடிச்சு துப்புறாங்க.//சரியான பதிலடி... எதிரணியினரே இதுக்கு என்ன சொல்ல போறீங்க???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாங்க வாங்க தலைப்பை கொடுத்தவங்கள இன்னும் காணோமேனு பாத்துட்டு இருந்தேன். நல்ல வேளை வந்துட்டீங்க.அருமையான தலைப்பை குடுத்ததற்கு என் நன்றி...

// ,நீ என்னை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை ,மாறாக கணவன்மார்கள் மனைவியிடம் எனது குடும்ப உறவுகளை நீ பொறுத்து (அட்ஜஸ்) செய்து போக வேண்டும் என்றும் ,அவர்கள் உன்னை ஏதேனும் பேசினாலும் நீயே தாழ்ந்து போக வேண்டும் என்றே கூறுவார்கள் .இது முழுக்க முழுக்க அப்பட்டமான உண்மை நடுவர் அவர்களே ,உங்களுக்கும் இது உண்மை என்று தெரியும் .//உண்மை தான் எல்லாரும் சொல்ற வார்த்தை தான்.

//இதிலிருந்தே தெரியவில்லையா நடுவரே ,தனது குடும்பத்தினர் என்ன செய்தாலும் நீ அதனை பொருத்து அடங்கி போக வேண்டும் என்றும் ,எனது குடும்பத்தவர்கள் என்ன செய்தாலும் நீ அவர்களுக்கு தாழ்ந்து தான் போக வேண்டும் என்றும் ஒரு கணவன் கூறுவதனால் ,அந்த பெண்ணுக்கு தன் புகுந்த வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பற்றியும் லேசான பயம் ஆரம்பம் முதலே தலை தூக்க ஆரம்பித்து விடுகிறது ,அந்த பயமே அன்றைய முதல் நாளிலேயே கணவன் மனைவிக்கு இடையே ஒரு லேசான பிளவு வர அஸ்திவாரமாக ஆகி விடுகிறது .//அடங்கி போகனும் அடங்கி போகனும்னு சொல்லியே பெண்கள் மனசுல பயத்த உருவாக்கி அதுவே வெறுப்பா மாறி சண்டைக்கி காரணமாகுதுனு சொல்றாங்க.

//மொத்தத்தில் அவள் ஒரு அடிமையை போல் தன்னை எண்ணிக் கொள்வாள் .மேலும் இப்படி இருக்கும் பெண் எப்போதாவது எதற்காகவாவது கொஞ்சம் வாயை திறந்தாலும் உடனே அங்கே குடும்ப உறவுகளால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் .இவ்வளவு நாள் ஊமை மாதிரி இருந்துட்டு எப்படி பேசுறா பாருன்னு தன் பிள்ளை கிட்ட இல்லாதது பொல்லாததும் சொல்லி ஆணின் பெற்றோர் அதிலும் பெண்ணின் மாமியார் கொஞ்சம் கண்ணை கசக்கி கூறியதும் ,அந்த பெண்ணுக்கு அடி உதை தான் ,இது ஆரம்பம் தான்.பின்னர் ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே எழுப்பி அதையே தொடர்கதை ஆக்கி விடுவார்கள் ஆணின் வீட்டார் ,அவர்களால்(ஆணின் உறவுகளால் ) நிம்மதி நிலவாத சூழ்நிலையில் ஒரு பெண் தனி குடித்தனம் போகலாம் என்று ஒரு நிலையில் முடிவெடுத்தால் அவ்வளவு தான் ,ஆணின் பெற்றோர் உறவினர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்து விட்டு நாங்கள் செத்து விடுகிறோம் ,அப்புறம் என் பிள்ளை தனியாக இங்கேயே இருக்கட்டும் என்று நயவஞ்சகமாக பேசி அவர்கள் தனியே போகாத படி தடுத்து அந்த பெண்ணை தினமும் ஒவ்வொரு விதமாக வறுத்து எடுப்பார்கள்// இந்த மாதிரி மாமியார்கள் நிறைய பேரு இரூக்கதான் செய்கிறார்கள் என்ன செய்ய?

//இன்னும் ஒரு சில பெண்கள் ஆரம்பம் முதலே நாம் ஏன் அடங்கி போக வேண்டும் என்று தனது போக்கில் நடந்து கொண்டு இருப்பார்கள் ,ஆனால் கணவனுக்கும் அவர்களுக்கும் இடையில் நல்ல விதமாக தான் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்திருக்கும் ,
இதில் அந்த பெண்ணின் மனதை பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் கணவனின் உறவினர்கள் உள்ள குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைவாக இருக்கும் ,இதற்க்கு நேர்மாறாக எடுத்ததெர்க்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் உறவுகள் இருந்தால் கணவனின் பெற்றோரோ உறவினரோ ,சம்பத்தப்பட்ட ஆணிடம்(கணவனிடம் ) நீ அவளை ஆரம்பத்திலேயே விட்டுட்டே டா ,அதான் அவளோட இஷ்டத்துக்கு ஆடுறா ,எங்களை மதித்து நடக்கலனாலும் பரவாயில்லை ,அவ உன்னை மதிக்க மாட்டுறாலேனு நல்லா ஏத்தி ஏத்தி சொல்லி, அந்த பெண்ணுக்கு அடங்கா பிடாரி பட்டம் கொடுத்து // இது என்னப்பா வம்பா போச்சி மருமகள் அமைதியா இருந்தாலும் குத்தம், பேசுனாலும் குத்தமா? அப்போ என்ன தான் செய்றது ?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே!!!

தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது சொல்லுவாங்க எங்களுக்கு எதுவும் வேண்டாம் உங்க பொண்ணு மட்டும் தந்தா போதுனு.இப்படி சொல்லுரவங்க கல்யாணத்திற்கு அப்பறம் சொல்லுவாங்கா பெண் பார்க்கும் போதே நகைய பேசிட்டு கல்யாணம் பண்ணனும் இல்லனா இப்படி தான் ஒன்னும் இல்லாம வருவீங்கனு.

மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும் போது பெண் பார்க்கும் போது ஏன் அந்த வார்த்தைய சொல்லனும்.அப்ப இவங்க தன் மகன் சந்தோஷத்திற்காக கல்யானம் பண்ணலயா? வெறும் நகைக்காகவும்,பணத்திற்க்காகவும் தான் கல்யானம் பண்ணுராங்களா?

இதுல வேற என் அடுத்த மகனுக்காவது இப்படி தப்பு நடக்காம பார்த்துக்கனும் சொல்லுராங்க.....

மேலும் சில பதிவுகள்