பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

//தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது சொல்லுவாங்க எங்களுக்கு எதுவும் வேண்டாம் உங்க பொண்ணு மட்டும் தந்தா போதுனு.இப்படி சொல்லுரவங்க கல்யாணத்திற்கு அப்பறம் சொல்லுவாங்கா பெண் பார்க்கும் போதே நகைய பேசிட்டு கல்யாணம் பண்ணனும் இல்லனா இப்படி தான் ஒன்னும் இல்லாம வருவீங்கனு.// அப்போ பிரச்சனை பெண் பார்க்குறப்பவே ஆரம்பிச்சிடுதுனு சொல்றீங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே!

////அம்மாக்கிட்ட சொல்லி அழ தான் முடியும்...////

பொண்ணு அம்மாட்ட தான் போய் அழும் ஆனால் அதுக்கு அம்மா என்ன செய்யனும் பொண்ணுக்கு பொருமைய சொல்லி கொடுக்கனும்
அதை விட்டுட்டு எப்படி மாமியாரோட சண்டை இடுவது என்று சொல்லி கொடுக்க கூடாது.

இப்போ நாம ஒரு ஆஃபிஸ்ல புதுசா போய் சேருரோம்ன்னு வச்சிகோங்க அங்க உள்ள மேலதிகாரிங்க நம்மல என்னா பேச்சி பேசுவாங்க மாத சம்பளம் வந்து ஆகனுமேன்னு அதையெல்லாம் நாம பொருத்து போகலை.
அந்த பொறுமை ஏன் நடுவரே! நம்ம கணவர் வீட்டு ஆளுங்க முண்ணாடி மட்டும் வர மாட்டேங்குது.
எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்னு ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.

பெண் பிள்லைகல் இயற்க்கையாகவே பெற்றோர்கள் மேல் பாசம் உள்ளவர்கள்.ஆனால் ஆண்களுக்கு அப்படி காட்ட தெரியாது.புதுசா வந்த மனைவி மேல பாசம் காட்ட தான் செய்வாங்க ஆனால் இதை பார்த்த அவங்க அம்மாக்கு பொசசிவ்னெஸ் வந்திடும்.
அதனால் கொஞ்சம் புதுசா வந்த மருமகள் மேல் சீண்டத்தான் செய்வாங்க.ஆனால் நமக்கு அது புரிய மாட்டேங்குது.

உங்க மகன் உங்களுக்கு இன்னும் சொந்தம் என்று நிரூபிக்க எந்த மருமகள்கள் எண்ணம் கொள்கிறார்கள்.!
எதற்கெடுத்தாலும் அம்மா,அக்காக்கு ஃபோன் போடுவது உடனே அந்த அக்காவோ அம்மாவோ என் மாமியாரும் இப்படி தான் இருந்தாங்க நான் இப்படி இப்படி செய்தேன்னு ஒரு முட்டாள் தனமான ஐடியாவை கொடுப்பாங்க இதை கேட்டு பொண்ணு நடக்க பாசமா இருந்த கணவனுக்கே கோபம் வந்திடும்.

பிரட்ச்சனைக்கு காரனம் கணவன் வீடாக இருந்தாலும் அந்த குடும்பம் பிரிய காரணம் மனைவி வீடு தான் நடுவரே! என்று நான் (கொஞ்சம் தலைய நகர்த்துங்க நடுவரே) அடித்து சொல்கிறேன்.....

இப்போ பவர் கட் ஆகப்போகுது சோ பின் மீண்டும் வருவேன்.....

SSaifudeen:)

நடுவர் அவர்களுக்கும் தலைப்பு தந்த தோழி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

சும்மா சற வெடி போல தலைப்பு சற மாறியா வெடிச்சுட்டு இருக்கு... நானும் என் பங்குக்கு வெடிய கொலுத்த போகிறேன் :)

நடுவர் அவர்களே என்னுடைய வாதம் குடும்ப விரிசலுக்கு காரணம் நம்ம குடும்பம் தான் அதாங்க ( கணவனின் உறவுகள் ) ஏன் இப்படி சொல்லுறனா நம்ம கழுத்துல மூனு முடுச்சி போட்டவுடனே கணவனின் குடும்பம் நம்ம குடும்பம்மா ஆகுது நம்ம வீடு அப்பவே அம்மா வீடாக மாறிடுது.... அன்னைக்கே ஒரு கோட போட்டுடாங்க நடுவரே...

கணவன் வீட்டுக்கு வந்தவுடனே அவர் வீட்டில் இருக்குரவங்கல எல்லாம் புரிஞ்சி நடந்துக்கனும், அவங்களுக்கு என்ன புடிக்கும் புடிக்காதுனு வேர தெறிஞ்சிக்கனும், அவங்க குடும்ப பழக்க வழக்கம் எல்லாம் சீக்கிரமா கத்துகனும் நாம கத்துகிட்ட மாதிறி செஞ்சா அத ஒரு பெறிய குற்றமாறி பேசுவாங்க. இத எல்லாதையும் பொருத்தும் போகனும் நடுவரே... இதுல வேர அவங்க மகனுக்கு ஒன்னுமே தெரியாதமாதிரியும் அவரு இன்னும் சின்ன பையனு சொல்லுவாங்க... ஆனா நாம மட்டும் வயதுக்கு ஏத்த மாதிறி எல்லாரையும் அனுசரிச்சி புறிஞ்சி பொறுப்பா நடந்துக்கனும் நடுவரே..

இன்னும் பட்டாசு இருக்கு பிறகு வந்து வாதாடுறேன் (வெடிக்கிறேன்) :)

அன்புடன்,
லலிதா

நடுவர் அவர்களே ஒரு மகளுக்கும் மருமகளுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.
எங்களுக்கு தெரிஞ்ச ஒரு குடும்பம் சொந்த்த்திலேடயே பெண் எடுத்தாங்க, ஆனா கருத்து வேறுபாடுகள் காரணமா தனிக்குடித்தனம் போய்ட்டாங்க.
இத்தனைக்கும் அந்த மாமியார்க்கு 2 பசங்க. மாமியார் மட்டும் தனிவீட்ல இருக்காங்க. தலைமுறை இடைவெளி காரணம்னு சொல்லாம்.
இன்னும் அந்தப் பொண்ணோட அம்மா வீட்ல நீ கொஞ்சம் பொறுத்து போயி இருக்கணும்னுத்தான் சொல்றாங்க.
கரண்ட் கட் பிறகு பார்போம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

///பொண்ணு அம்மாட்ட தான் போய் அழும் ஆனால் அதுக்கு அம்மா என்ன செய்யனும் பொண்ணுக்கு பொருமைய சொல்லி கொடுக்கனும்
அதை விட்டுட்டு எப்படி மாமியாரோட சண்டை இடுவது என்று சொல்லி கொடுக்க கூடாது.///

//மாமியார் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போ //

எதிர் அணி தோழி ஒருத்தங்க உன் மாமியார் வீட்டுல என்ன பண்ணுனாலும் பொறுமையா போ னு சொல்லி கொடுக்கலை பிறந்த வீட்டுல னு சொல்றாங்க

இன்னொரு எதிர் அணி தோழி மாமியார் அப்படி இப்படினாலும் அனுசரிச்சு போ னு தேவையில்லாத அறிவுரையை வழங்குறாங்கனு சொல்றாங்க.. இது என்னங்க கூத்து... முதல்ல அவங்களை பேசி ஒரு முடிவுக்கு வர சொல்லுங்கப்ப...

//புதுசா வந்த மனைவி மேல பாசம் காட்ட தான் செய்வாங்க ஆனால் இதை பார்த்த அவங்க அம்மாக்கு பொசசிவ்னெஸ் வந்திடும்.
அதனால் கொஞ்சம் புதுசா வந்த மருமகள் மேல் சீண்டத்தான் செய்வாங்க///

பாத்து கோங்க நடுவரே... நாங்க எதுவுமே சொல்லலை... எதிர் அணியே சொல்லிட்டாங்க... பையனும் மருமகளும் சந்தோஷமா இருக்குறதை பாத்து இந்த மாமியார் தான் சண்டையை ஆரம்பிக்கிறாங்க. ஆனா இதையே மனைவியோட அப்பாவோ அம்மாவோ பார்த்தா மனசு எல்லாம் சந்தோஷம் பொங்கும்.

//எதற்கெடுத்தாலும் அம்மா,அக்காக்கு ஃபோன் போடுவது //

ஆமாங்க எங்க கஷ்டத்தை மட்டும் தான் நாங்க ஃபோன் ல சொல்றோமா?? மாமியார்கள் தங்கள் மகள்களுக்கு போன் போட்டு உன் அண்ணன் பொண்டாட்டி இப்படி பண்ற.. அப்படி பண்றா.. நின்னா குத்தம், நடந்த குத்தம் னு சொல்றதே இல்லையா!!! அப்படி சொல்லும் போது நீ விட்டுட்ட அம்மா... என் மாமியார் என்னை என்ன பாடுபடுத்துது தெரியுமா னு சொல்ற நாத்தனார்கள் ஏராளம்.

//பிரட்ச்சனைக்கு காரனம் கணவன் வீடாக இருந்தாலும்//

ஜோரா ஒரு முறை கை தட்டுங்க.. நடுவருக்கு முன்னாடி நம்ம எதிர் அணியே தீர்ப்பை கொடுத்துட்டாங்க... இதுக்கு மேல என்ன வேணும் நடுவரே

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இருதரப்பினரிடமிருந்தும் ப்ரச்சனை ஏற்படலாம் ஆனால் அதை ஊதி ஊதி பத்தவைக்க பெஸ்ட் ஆளுங்க பெண் வீட்டார் தான்..கல்யாணம் பண்ணி கொடுக்கும்போதே என்ன ப்ரச்சனைனாலும் அட்ஜஸ்ட் பண்ணும்மா ஒண்ணு ரெண்டு வருஷம் தான் ப்ரச்சனை பிறகு எல்லாம் சரியாகிடும்னு(பழகிடும்) எத்தனை பெத்தவங்க சொல்லி கொடுக்கறாங்க?பெரும்பாலும் அவங்க நல்லது சொல்லி அனுப்பினால் அட்ஜஸ்ட் பண்ணி போக கூடிய ப்ரச்சனைகள் தான்...

நடுவர் அவர்களே, நான் வாதிடும் முதல் பட்டிமன்றம் என்பதால் குற்றங்கள் இருப்பின் “வெரி சாரி”.

நல்ல தலைப்பை தந்த தோழிக்கும், அதை தேர்வு செய்து நடத்தும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.

சந்தேகம் இல்லாமல் பெண் வீட்டு உறவுகள் தாங்க பின் வரும் பிரெச்சனைகளுக்கு காரணமாகறாங்க.

1. பெண் பார்க்க வந்து பேரம் பேசும்போதே என்னவோ ஆண் பிள்ளையை பெற்றவர்கள் பெரிய ஆட்கள் என்பது போல அவங்க சொல்வதுக்கு எல்லாம் தலை ஆட்டுறாங்க. பையன் பேசும் போது பதிலுக்கு எதுவும் பேசாதன்னு பொண்ணுக்கு அங்கையே அடிமைத்தனம் சொல்லி கொடுக்கறாங்க. அப்பவே மாப்பிள்ளைக்கு, மாப்பிள்ளை வீட்டு உறவுகளுக்கும் பெண், பெண் வீடு தகுதியில் கம்மியா தெரிய ஆரம்பிச்சுடுது. அவங்க பெரிய ஆளுன்னு மனசுல நினைப்பும் வந்துடுதுங்க.

2. கல்யாணம் பண்ணும்போதே தன் வசதிக்கு மீறி கல்யாணம் பண்றாங்க பெண் வீட்டார். போகும் இடத்தில் தன் பெண் கஷ்டப்படக்கூடாது என்ற அவங்க அன்பே பின் நாளில் “கல்யாணம் ஜோரா பண்ணாங்க, இன்னும் நிறைய பண்ணுவாங்க... விட கூடாது” என்ற எண்ணத்தை மாப்பிள்ளை வீட்டில் விதைக்குதுங்க. அப்பறம் கல்யாணத்துக்கு வாங்கின கடனை இவங்க அடைக்கும் முன் அடுத்தடுத்து சீர் செய்ய சொல்லி அங்க இருந்து லிஸ்ட் வந்துடுங்க.

3. போன பிறகாது பெண் தன் வாழ்க்கையை முழுசா வாழ விடறாங்களாங்க? அப்பவும் “யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாத”னு வாயை தைய்து தான் அனுப்பறாங்க. பதில் பேச துடிக்கும் பெண் மனது கொஞ்ச காலம் அம்மா பேச்சை கேட்டு அமைதியா இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல வெடிச்சுடும். அப்போ கோவமும், பேச்சும் அதிகமா தாங்க இருக்கும்.

4. சரி பொண்ணை தான் வாயை திறக்க கூடாதுன்னு சொன்னோமே நாமும் பேசாம இருப்போம்னு நினைக்கணுமுங்க... பொண்ணு வந்து கண்ணை கசக்கி “உங்கள் மேல் குற்றப்பத்திரிக்கை வாசிக்கறாங்க மாமியார் வீட்டில்”னு சொன்னா... அடுத்த நிமிஷம் அவங்க என்ன என்ன செய்யலன்னு சொன்னாங்களோ அத்தனையையும் கடன்பட்டாவது கொண்டு போய் அவங்க காலடியில் போடுவாங்க பெண்ணை பெற்றவங்கள். அப்போ மாப்பிள்ளை வீட்டில் ஒரு சிரிப்பு... “இங்க அடிச்சா தானா வரும் போலிருக்கே” என்று. கற்றுக்கொடுப்பதே பெண் வீட்டு மக்கள் தாங்க.

5. பொண்ணு பிரசவத்துக்கு வந்துச்சா 3 மாசம் வெச்சு பார்த்து அனுப்பினோமான்னு இருக்கணும். டெலிவெரிக்கு 3 மாசம் முன்ன, 3 மாசம் பின்னன்னு 6 மாசம் கூடவே வெச்சு பிள்ளை வளர்த்து அனுப்புறது. பொண்ணுக்கு பிறந்தது அப்பா வழி உறவுகளை விட இவங்க மேல அதிக அன்பை காட்ட துவங்கும். அது மாப்பிள்ளை வீட்டு மக்கள் வயிற்றில் ஒரு எரிச்சல் வரும் பாருங்க. ஹ்ம்... சொல்ல முடியாது. பெத்தாளா மாமியார் வீட்டுக்கு அனுப்பினோமா, அவங்களே இரவு பகலா தூக்கம் கெட்டு பேரப்பிள்ளையை மருமகளை பார்த்தாங்களா, மருத்துவமனை கூட்டிட்டு போனாங்களா, மருமகளுக்கு சமைச்சு போட்டாங்களான்னு விடணும். அவங்க செய்ய வேண்டிய கடமைங்க. அதை ஏன் பெண் வீட்டு மக்கள் தட்டிப்பரிக்கறாங்க? மாப்பிள்ளை வீட்டில் கோவம் வர தானே செய்யும்?

6. பெண் மட்டுமே பெற்றவங்க அதுக்கும் மேலே. மாப்பிள்ளை மேல பிள்ளை போல பாசம் பொங்கும். அடிக்கடி மாப்பிள்ளையை வீட்டுக்கு வர வைக்கிறது. பாவம் யாரும் இல்லாம இருக்கும் தனிக்கட்டைகள் தானே. ஆனா அதை பார்த்தா மாப்பிள்ளை வீட்டில் என்னாகும்? “அடடா... நம்ம பையனை அவங்க பக்கம் இழுக்கறாங்க”னு கோவம் வரும். தேவையா இது? சொல்லுங்க. மாப்பிள்ளையை மாப்பிள்ளையா தள்ளி தாங்க வைக்கணும்.

7. இவங்க காட்டும் அன்பில் மாப்பிள்ளை கொஞ்சம் அன்பாக “அவர் பாவம், உடல் நலமில்லை”னு மாமனாருக்கோ மாமியாருக்கோ கொஞ்சம் சப்போர்ட் செய்து பேசினாருன்னு வைங்க.. அவ்வளவு தாங்க நடுவரே. “போச்சு போச்சு, என் பையனை மொத்தமா வசியம் வெச்சு அவஙக் வீட்டு பக்கம் கொண்டு போயிட்டாளே பாவி”னு அழுது புலம்பி, அதுக்கு பதில் என்ன பண்ணலாம்னு மாமியார் மனசு தவிச்சு போகுது. பாவம் பிள்ளையை பெற்ற மனசாச்சே. நியாயம் தானேங்க. பக்கவிலைவு... பொண்ணு இனி அம்மா வீட்டு பக்கம் தலை வைக்க கூடாது. யாரு காரணம் சொல்லுங்க??

அன்பு நடுவர் அவர்களே, பெண் வீட்டு மக்களின் அதீத அன்பு பண்ணும் வம்பு தானுங்க இதெல்லாம். பொண்ணை கட்டி கொடுத்த கையோட விரட்டி விட்டுட வேணுமுங்க. அதன் பின்னும் அவள் மேல் வைக்கும் பாசம் தானுங்க எதிரியா போகுது.

//******பிரச்சனைக்கு காரனம் கணவன் வீடாக இருந்தாலும் அந்த குடும்பம் பிரிய காரணம் மனைவி வீடு தான்****//

நடுவரே அதான் எதிரணியே சொல்லிட்டாங்களே. அதெப்படி நடுவரே பிரச்சனைக்கு காரணம் கணவன் வீடாம் ஆனா பிரியரதுக்கு காரணம் மனைவி வீடா? ஒரு லாஜிக்கே இல்லியே. எந்த ஒரு பெண்ணை பெற்ற பெற்றோரும் தன் மகள் விவாகரத்து வாங்க வேண்டும் என்று எண்ணி திருமணம் செய்து வைப்பதில்லை. நல்லா வாழ வேண்டும் என்று தான் ஆசைபடுவார்கள். அதனால் எவ்ளோ கஷ்டம்னாலும் பெண்ணை தான் அனுசரிச்சு போகணும்னு சொல்லுவாங்க நடுவரே.

இவ்வளவு ஏன் நடுவரே சரவணன் மீனாட்சி சீரியல அந்த மாமியார்(குயிலி) தன் மருமகளை(மீனாட்சி) மருமகள் மாதிரியா நடத்துது. வீட்டில வேலைகாரி மாதிரி தான நடத்துது. ஆனா தன் மகளை(சவுந்தரியா) மட்டும் வேலைக்கு அனுப்புது. என்ன கொடுமை நடுவரே. இது மாதிரி நிறைய வீட்டில நடக்குது நடுவரே.

இப்படி இருக்க மீனாட்சியின் பெற்றோர் பிரச்சனை பன்னுரவங்களா இருந்தா இன்னேரம் வீடே ரெண்டாகி மீனாட்சிய அவங்க அவங்க வீட்டிற்கே கூட்டிட்டு போயிருப்பாங்கல்ல. ஆனால் அப்படி ஏதும் செஞ்சாங்களா? இல்லியே. மாமியார் குணம் தெரிஞ்சது தானேன்னு மீனாட்சியை தானே பொறுத்து போக சொல்றாங்க.

இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க யாரால பிரச்சனை வரும், யாரால குடும்பம் பிரியும்னு.... நடுவரே.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

நடுவர் அவர்களே கொஞ்ச நேரம் கரண்ட் கம்பில தூணிய காயப்போட்டுட்டு,, அப்படியே ஊஞ்சலாடிட்டு வந்து பார்த்தா எதித்தாப்புல அம்மிணி ஒண்ணு பொளந்து கட்டிட்டு போயிருக்கு.
சந்தேகம் இல்லாமல் பெண் வீட்டு உறவுகள் தாங்க பின் வரும் பிரெச்சனைகளுக்கு காரணமாகறாங்க.

1. பெண் பார்க்க வந்து பேரம் பேசும்போதே என்னவோ ஆண் பிள்ளையை பெற்றவர்கள் பெரிய ஆட்கள் என்பது போல அவங்க சொல்வதுக்கு எல்லாம் தலை ஆட்டுறாங்க. பையன் பேசும் போது பதிலுக்கு எதுவும் பேசாதன்னு பொண்ணுக்கு அங்கையே அடிமைத்தனம் சொல்லி கொடுக்கறாங்க. அப்பவே மாப்பிள்ளைக்கு, மாப்பிள்ளை வீட்டு உறவுகளுக்கும் பெண், பெண் வீடு தகுதியில் கம்மியா தெரிய ஆரம்பிச்சுடுது. அவங்க பெரிய ஆளுன்னு மனசுல நினைப்பும் வந்துடுதுங்க.

2. கல்யாணம் பண்ணும்போதே தன் வசதிக்கு மீறி கல்யாணம் பண்றாங்க பெண் வீட்டார். போகும் இடத்தில் தன் பெண் கஷ்டப்படக்கூடாது என்ற அவங்க அன்பே பின் நாளில் “கல்யாணம் ஜோரா பண்ணாங்க, இன்னும் நிறைய பண்ணுவாங்க... விட கூடாது” என்ற எண்ணத்தை மாப்பிள்ளை வீட்டில் விதைக்குதுங்க. அப்பறம் கல்யாணத்துக்கு வாங்கின கடனை இவங்க அடைக்கும் முன் அடுத்தடுத்து சீர் செய்ய சொல்லி அங்க இருந்து லிஸ்ட் வந்துடுங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எதிர் அணி காரங்க எங்க அணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுற மாதிரி தான் எனக்கு தோணுது... தீர்ப்பை சீக்கிரம் கொடுங்கப்பா..

1. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை மரியாதையா நடுத்துறது தப்புனு சொல்றாங்க... என்ன கொடுமை இது!!! இதே மரியாதையோட நாளைக்கு நம்ம பொண்ணையும், நம்மலையும் நடத்துவாங்கன்னு நம்பி தான் இவங்க மரியாதையா நடத்துராங்க... ஆனா இந்த கணவர் வீட்டார் ஆண் பிள்ளையை பெத்ததால ஏதோ தனக்கு 2 கொம்பு தனியா முளைச்சு இருக்குனு நினைப்பு

2. கல்யாணத்துக்கு தான் இவ்வளோ சீர் செய்துட்டாங்களே னு விடணும்... அதை விட்டு புட்டு அவங்க வீட்டு கோழி முட்டை போட்டா கூட சீர் கேட்டா அவங்க அல்ப்ப தனத்தை என்ன னு சொல்ல!!!

3.// யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாத”னு வாயை தைய்து தான் அனுப்பறாங்க.// என்ன நடுவரே.. கூட கூட பேசுனா தானா சண்டை வரும்... அந்த பொண்ணு வாயை தான் தைச்சு புட்டாங்களே... பாவம் அந்த பொண்ணு வாய் தான் வலிக்கும்

4. // அடுத்த நிமிஷம் அவங்க என்ன என்ன செய்யலன்னு சொன்னாங்களோ அத்தனையையும் கடன்பட்டாவது கொண்டு போய் அவங்க காலடியில் போடுவாங்க பெண்ணை பெற்றவங்கள். //

அப்போவது அடங்குதுகளா!! அப்பவும் எரிகிற வீட்டில் பிடிங்குன மட்டும் லாபம் னு தானா புடுங்குறாங்க இந்த ஆண் வீட்டார்

5. பெண்ணுக்கு தலை பிரசவம் அம்மா வீட்டுல நடக்கணும் றது தாங்க நடை முறை... மாமியார் வீட்டுல இருந்தா கையில பிள்ளையை வச்சுக்கிட்டு இவங்க தான் வீட்டு வேலை அத்தனையும் பார்க்கணும். மாமியார் பிள்ளையை யாவது பாத்துப்பாங்கன்னு நினைக்கிறீங்க... எங்க டீ போன? பிள்ளை எப்புடி கத்துது பாரு.. னு ஒரு சத்தம் மட்டும் வரும்... ராத்திரி பகல் பிள்ளையையும் பாத்து, வீட்டு வேலையும் பார்க்க அவ பொண்ணா மெஷின் ஆ??

6. மாப்பிள்ளை மேல பாசம் காட்டுறது தப்பாங்க.. கணவன் வீட்டார் தான் மருமகளை மனுஷியா கூட நடத்துறது இல்லை.. இவங்களும் அப்படி இருக்கணுமோ??

மருமகள் மட்டும் இவங்க மேல அக்கறையா இருக்கணும்... மருமகன் அவங்க மாமனார் மேல பாசம் காட்ட கூடாதா!!! பொண்ணு அம்மா வீட்டுக்கு போக கூடாதுனா இவங்க பிள்ளையையும் இவங்க பாக்கவே கூடாது... அது தானே நடுவரே நியாயம்

நடுவரே மாப்பிள்ளை வீட்டாரின் ஆண் ஆதிக்க நடவடிக்கையும், பெற்ற பிள்ளை தங்களை விட்டு மருமகள் மேல் பாசம் காட்ட கூடாது என்ற நினைப்புமே பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்