பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

இப்பிடி பாய்ண்ட்டபூரா பிட்டு பிட்டு வெச்சுட்டு எதித்தாப்புல போயி உக்காந்திருக்கிறதுலயே தெரியலயா நடுவரே விரிசலுக்கு யார் காரணமுன்னு. எந்த அளவு கணவன் வீட்டாரால் துன்பப்பட்டுப்போய் இருக்காங்கனு பாருங்க! எந்த வீட்லயாவது பொண்ண வெறுங்கையால அனுப்புவாங்களா நடுவரே! நீங்களும் ஒரு பெண்தானே யோசிச்சு பாருங்க!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அட கொஞ்ச நேரம் காணாம போயிட்டா என்னவெல்லாம் சொல்றாங்கோ :)

நடுவரே எதிரணி சுத்தி சுத்தி வரது மாமியார் சண்டை, சீர் பிரச்சினை, வரதட்சிணை இம்பூட்டையும்தான்.

வரதட்சிணை கேட்பதும் குற்றம் கொடுப்பதும் குற்றம். அதுக்குத்தான் வரதட்சணை தடுப்புச் சட்டம்னு ஒன்னு இருக்கு. ஆனா இந்த சட்டத்தை பொண்ணை பெத்தவங்க தன்னோட சுய லாபத்துக்கு எப்படீல்லாம் பயன்படுத்தறாங்க அப்படீங்கறது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரியும். பிரபல நடிகர் ஒருவரின் மனைவி கொடுத்த பொய் கேஸ் தெரியும்தானே! இதுக்கு பின்னாடி தூண்டுதலா இருந்தது யார்? அந்த பெண்ணின் பெற்றோர். சும்மா பெண்ணை பெத்தவங்க எல்லாம் அப்பாவி பையனை பெத்தவங்கதான் பெரும்பாவின்னு எல்லாம் சொல்லப்படாது.

வரதட்சிணையே வேண்டாம்னு நல்ல மனசோட ஒரு வரன் வருதுன்னு வச்சுக்கோங்க. இந்த பொண்ணை பெத்தவங்களுக்கு அந்த வரன் மேல் நம்பிக்கையே வராது. என்ன வியாதியா இருக்குமோ ஏதோ வில்லங்கமா இருக்குமோன்னு அந்த வரனை ஒதுக்குவாங்க. இது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க. சரி வரதட்சிணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணணும்னு முடிவு செய்தாச்சு. அப்போ என்ன செய்யணும்? தன் பொருளாதார நிலைக்கு ஏற்ற மாதிரி வரதட்சிணை கொடுக்கும் படியான வரனை தேர்ந்தெடுக்கணும். ஆனால் பெண் மீதுள்ள பாசம் கண்ணை மறைக்கும். தன் பெண்ணாவது போற இடத்தில் வசதியா வாழட்டுமேன்னு தன் பொருளாதார நிலைக்கும் மீறி கடனை உடனை வாங்கியாவது கேட்ட வரதட்சிணை கொடுக்கறோம்னு ஒத்துகிட்டு திருமண ஏற்பாட்டை செய்வாங்க. ஆனால் பாவம் அவரால் அந்த தொகையை புரட்ட முடியாமல் ஒத்துக் கொண்ட வரதட்சிணையை கொடுக்க முடியாத நிலை வரும் போது என்னாகும்? பிரச்சினைதான். ஆரம்பத்திலேயே தனக்கு என்ன முடியுமோ அதற்கு ஏற்ற மாதிரிதான் செய்ய முடியும்னு பேசியிருந்தால் பிரச்சினை இல்லையே.

இப்போ எதிரணி வரிஞ்சு கட்டிகிட்டு வருவாங்க. பிள்ளையை பெத்தவங்க கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அதிகமா வரதட்சிணை கேட்பதால்தான் பெண்ணைப் பெற்றவர்கள் நிலை இப்படி ஆகுதுன்னு சொல்லுவாங்க. நடுவரே அதான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன் வரதட்சிணை வாங்குபவனும் குற்றவாளிதான் கொடுப்பவனும் குற்றவாளிதான். பையன் வீட்டார் கேட்பது அதிகம்னு தெரியும் போதே அந்த வரன் வேண்டாம்னு ஒதுக்கியிருந்தால் பிரச்சினையே இல்லையே. பெண்வீட்டார் முன் யோசனையுடன் நடக்காததுதானே பிரச்சினையில் போய் முடியுது.

அடுத்து மாமியார் பிரச்சினை. எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது நடுவரே. உலகத்துல உள்ள எல்லா மாமியாரும் கெட்டவங்க. எல்லா மருமகள்களும் ஒன்னுமே தெரியாத அப்பாவி... அப்படியா நடுவரே! ஒரு பொண்ணுக்கு தன்னோட அம்மா தன் மீது கோபப் பட்டு பேசினால் மறந்து விடும் மனம் இருக்கும் போது மாமியார் சொல்வதை மட்டும் ஏன் மனம் ஏத்துக்க மாட்டேங்குது? அப்போ இவங்களும் வித்தியாசம் பார்க்கறாங்கதானே. மாமியார் மட்டுமே மகள் மருமகள்னு வித்தியாசம் பார்க்கிறாங்கன்னு சொல்றது நியாயமா?

மாமியாரையும் தன் தாயாகப் பார்க்கும் பக்குவம் இளவயதிலிருந்தே ஊட்டப் பட்டால்தான் நடுவரே அது மனதில் பதியும். ஆனால் நம் ஊரில்தான் மாமியார் என்றாலே கொடுமைக்காரி என்றுதானே சொல்லி வளர்க்கப் படுகிறாள். அப்புறம் எப்படி மாமியாரை அம்மாவாக பார்ப்பாள். எனக்கும் மாமியார் இருக்காங்க நடுவரே. எங்களுக்குள்ளும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வரும். ஆனால் அதை மறந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எங்கள் இருவருக்குமே இருக்கிறது. அதனால் குடும்ப வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகிறது. இந்த பக்குவம் எனக்கு எங்கிருந்து கிடைத்தது? என் மாமியாருக்கு எங்கிருந்து கிடைத்தது? அவரவர் பிறந்த வீட்டில் இருந்துதான் நடுவரே.

திருமணமாகும் முன் என் வீட்டினர் எனக்கு சொன்னது இதுதான். அங்கே நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை சந்தோஷங்களை எங்களோடு வந்து பகிர்ந்து கொள். அங்கு ஏற்படும் சிறு சிறு சலசலப்புகளை இங்கே வந்து சொல்லாதே. நாங்கள் காது கொடுத்து கேட்கவே மாட்டோம் அப்படீன்னாங்க. இதை கேட்ட போது எனக்கு கோபம்தான் வந்தது. ஆனால் இப்போது அதன் நல்ல பலனை நான் அனுபவிக்கிறேன்.

எங்க அப்பா அப்படி சொன்னதற்கான காரணம்... நீ அங்கே உள்ள பிரச்சினைகளை இங்கே வந்து சொன்னால் எங்களுக்கு உன் மீதுள்ள பாசத்தால் உன் பக்க நியாயங்கள் மட்டுமே கண்ணில் படும். உன் தவறுகள் பெரிதாகத் தெரியாது. அப்போது நாங்கள் உனக்கு சொல்லும் அறிவுரை நிச்சயம் பிரச்சினையை மேலும் பெரிதாக்கும். அதனால் சொல்லாதே.

இதை எல்லாத்தையும் எங்க வீட்டுல என்னை உட்கார வச்சு க்ளாஸ் நடத்தி சொல்லவில்லை. எல்லாம் போகிற போக்கில் பிற வீடுகளில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசும் போது பொண்ணுன்னா இப்படி இருக்கணும் அப்படி இருந்திருந்தா பிரச்சினையே வந்திருக்காதுன்னு எங்களுக்குள் சும்மா உட்கார்ந்து பேசும் போது என்னையும் அறியாமல் என் மண்டைக்குள் சென்றது.

இப்பவும் எதிரணியினர் வருவாங்க ஏனுங்க அப்பா அம்மாவால் பிரச்சினை இல்லையே அப்புறம் ஏன் அந்த பக்கம் நிற்கறீங்க இந்தப்பக்கம் வரவேண்டியதுதானேன்னு என்னை அவங்க பக்கம் இழுப்பாங்க. ஆனால் நடுவரே நான் என்ன சொல்றேன்னா இப்படி எல்லார் வீட்டுலயுமே பொண்ணுங்க மனதில் நல்லதை விதைத்து வளர்த்தால் கணவன் வீடு செல்லும் போது பிரச்சினையே இருக்காது வந்தாலும் சமாளித்து விடுவாள். அப்படி இல்லாததுனாலதான் பிரச்சினைகள் பெரிதாகுதுன்னு சொல்றேன்.

அப்புறம் மாமியார் தன்னோட பையன் கிட்ட சகோதரிகளுக்கு நீதான் செய்யணும்னு சொல்றாங்க. அதே மகள்கிட்ட உன் குடும்பத்துக்குன்னு சேமிக்கற வழியை பாருன்னு சொல்றாங்க அப்படீங்கறாங்க. இப்போ மருமகளுக்கு என்ன பிரச்சினை? தன் கணவரின் காசு எல்லாம் நாத்தனாருக்கு செலவாகுதேன்னு எண்ணம். அதே நேரத்துல தன் நாத்தனார் மட்டும் அவ நாத்தனாருக்கு செய்ய வேணாம்னு சொல்றாங்களேங்கற எண்ணம். ஆனால் பாருங்க இந்த மருமகளுங்க எல்லாருக்கும் தன் சகோதர் தனக்கு செய்தால் சந்தோஷம் பிச்சுகிட்டு வரும். ஆனால் தன் கணவர் அவரோட சகோதரிக்கு செய்யணும்னா மட்டும் முகம் அஷ்ட கோணலாகி போகும். இதையே பிறந்த வீட்டுல அம்மாடி பொண்ணே உனக்கு உன் சகோதரன் செய்யணும்னு எதிர் பார்ப்பது போல நீயும் உன் கணவரின் சகோதரிக்கு செய்யணும் மூஞ்சியை தூக்கப்படாதுன்னு சொல்லிக் கொடுத்திருந்தாங்கன்னா இந்த பிரச்சினை வருமா? ஆனால் பிறந்த வீட்டுல என்ன சொல்றாங்க உன் அண்ணன் உனக்கு செய்வது அவனோட கடமைன்னு சொல்லிட்டு நீ உன் கணவன் அவன் சகோதரிக்கு செய்யறதை கொஞ்சம் நிப்பாட்டிட்டு உன் குடும்பத்துக்குன்னு சேமிச்சுக்கோ அப்படீங்கறாங்க. நடுவரே இங்கே யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு மாமியார் என்பவர் இன்னொரு பெண்ணுக்கு அம்மாவாகவும் இருக்கிறார். அம்மாவா இருந்து நல்ல அறிவுரையை பொண்ணுக்கு சொல்லியிருக்கணுமா வேண்டாமா?

ஒரு பொண்ணுக்கு இதையெல்லாம் நடுநிலையா இருந்து யோசிக்கத் தெரிந்தாலே அந்த குடும்பத்தில் பிரச்சினைகள் வராது. வந்தாலும் அது விரிசல்களாகாமல் பாதுகாத்துக் கொள்ளும் பக்குவம் அவளிடம் இருக்கும். அந்த பக்குவத்தை பெண்ணிற்கு ஊட்ட வேண்டியது பிறந்த வீட்டினரின் கடமை. பிறந்த வீட்டினரால் அந்த பக்குவம் வளர்க்கப் படாத பெண்ணால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது. அதனால் குடும்பங்களில் விரிசல் விழக் காரணம் பெண்வீட்டினரே முதல் காரணம் என்று அடித்து சொல்கிறேன்.

நடுவரே நாளை மீண்டும் சிங்கப்பூர் பயணம். முடிந்தால் மீண்டும் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//மாமியாரையும் தன் தாயாகப் பார்க்கும் பக்குவம் இளவயதிலிருந்தே ஊட்டப் பட்டால்தான் நடுவரே அது மனதில் பதியும். ஆனால் நம் ஊரில்தான் மாமியார் என்றாலே கொடுமைக்காரி என்றுதானே சொல்லி வளர்க்கப் படுகிறாள். அப்புறம் எப்படி மாமியாரை அம்மாவாக பார்ப்பாள். எனக்கும் மாமியார் இருக்காங்க நடுவரே. எங்களுக்குள்ளும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வரும். ஆனால் அதை மறந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எங்கள் இருவருக்குமே இருக்கிறது. அதனால் குடும்ப வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகிறது. இந்த பக்குவம் எனக்கு எங்கிருந்து கிடைத்தது? என் மாமியாருக்கு எங்கிருந்து கிடைத்தது? அவரவர் பிறந்த வீட்டில் இருந்துதான் நடுவரே.//
நடுவர் அவர்களே, நம்மோட வாழ்க்கையை மட்டுமே பார்க்கக்கூடாது. ஏங்க நான் இந்த அணியில இருகிறதால என் மாமியார் கொடுமக்காரவுகளா என்ன? எங்கத்த பத்தறமாற்று தங்கமாக்கும். பெரும்பான்மை நிலையைத்தான் பேசணும் நடுவரே!
இதே புரியாம இருக்கிற எதிரணியாளர்களை என்னனு கேளுங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நாங்களும் பெரும்பான்மை நிலையைதான் நடுவரே சொல்றோம். என் நிலைமை வச்சு பேசினால் பிறந்த வீட்டால் பிரச்சினையே இல்லைன்னுல்ல பேசணும். பிறந்த வீடு சரியா இருந்தா புகுந்த வீடும் சரியா இருக்கும் நடுவரே. இங்கே நான் சரியான்னு சொல்லியிருப்பது பிறந்த வீட்டில் தன் பெற்றோர் மகளுக்கும் மருமகளுக்கு வித்தியாசம் பாக்காமல் நடுநிலையாக இருந்தால் அந்த வீட்டில் பிறந்த மகளும் புகுந்த வீட்டில் நடுநிலையாக இருப்பாள்னுதான் சொல்றோம்.
எதிரணியினர் சொல்லும் பொல்லாத மாமியார்களும் ஒரு பெண்ணுக்கு அம்மாதான். பெரும்பான்மையான மாமியாரும் பொல்லாதவங்க நடுநிலையா இருக்கத் தெரியாதவங்கன்னா அதே பெரும்பான்மையான அம்மாக்களும் நடுநிலைமை, நியாயம்னா என்னன்னு தெரியாவங்கதானே அப்போ அவங்களால் வளர்க்கப்பட்ட மகள்கள் எப்படி இருப்பாங்க? பிரச்சினைகளுக்கு காரணம் ஆவாங்கதானே?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///நடுவரே நான் என்ன சொல்றேன்னா இப்படி எல்லார் வீட்டுலயுமே பொண்ணுங்க மனதில் நல்லதை விதைத்து வளர்த்தால் கணவன் வீடு செல்லும் போது பிரச்சினையே இருக்காது வந்தாலும் சமாளித்து விடுவாள். அப்படி இல்லாததுனாலதான் பிரச்சினைகள் பெரிதாகுதுன்னு சொல்றேன்.///
ஒரு வேளை கல்யாணத்துக்கு முன்னாடி குஸ்தி கிளாஸ் போறாங்கனு சொல்லவற்றாங்களோ!!!!!!!!!! நீங்கதான் கேட்டுச்சொல்லோணும் நடுவரே!

//தன் பெண்ணாவது போற இடத்தில் வசதியா வாழட்டுமேன்னு தன் பொருளாதார நிலைக்கும் மீறி கடனை உடனை வாங்கியாவது கேட்ட வரதட்சிணை கொடுக்கறோம்னு ஒத்துகிட்டு திருமண ஏற்பாட்டை செய்வாங்க. ஆனால் பாவம் அவரால் அந்த தொகையை புரட்ட முடியாமல் ஒத்துக் கொண்ட வரதட்சிணையை கொடுக்க முடியாத நிலை வரும் போது என்னாகும்? பிரச்சினைதான். ஆரம்பத்திலேயே தனக்கு என்ன முடியுமோ அதற்கு ஏற்ற மாதிரிதான் செய்ய முடியும்னு பேசியிருந்தால் பிரச்சினை இல்லையே.//
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவுங்களா இருக்கும் பட்சத்தில் கொடுக்கவேண்டிய தொகையை பத்தி நினைக்காமல் ஆக வேண்டியதை பார்க்கலாம்னு சொல்லி கல்யாணத்த நல்லபடியா முடிச்சு பொண்ணுவீட்டுக்காரங்க வயித்துல பால வார்க்கவேண்டாம் அட்லீஸ்ட் தண்ணீயாவது (நாட் தட் தண்ணி)வார்க்கலாமே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கு தெரிஞ்ச பொண்ணோட நிலைமை நடுவரே! பிரசவத்திற்காக அவளை ம்ருத்துவமனைல அனுமதிச்சிருந்தாங்க காலையிலிருந்தே ஒரே வேதனைல இருந்தா. தலைப்பிரசவம் கூட.
மருத்துவமனைல சேர்த்தவுடனே அவளோட மாமியார்க்கும் சொல்லி அனுப்பிட்டாங்க. அவுங்க சாயங்காலமா மெதுவா வந்து சேர்ந்தாங்க. அதுக்குள்ள குழந்த பிறந்திடுச்சு. அவங்க வரும்பொழுது கூட இருந்தவங்க எல்லாம் உங்க மருமகள் வெகுபாடு பட்டுட்டா பாவமா இருந்துச்சுனு சொன்னோம்.
உடனே அவங்க என்னசொன்னாங்கனா "அந்தக்காலத்தில எல்லாம் ஊட்லயே குழந்தபெத்துக்களையானு" கேட்குறாங்கனா பார்த்துக்கோங்க அவங்களோட கல்லு மனச.
அதகூட பொறுத்துக்களாம் நடுவரே! பேரக்குழந்தைய கொண்டுப்போய் ஆசையோட கொடுத்தாக்க "எனக்கு தீட்டு சேராது" அப்படினு குழ்ந்தைய கையால கூட தொடல நடுவரே! மருமககிட்ட போயி நாலஞ்சடி தள்ளி நின்னு "உடம்புக்கு எல்லாம் பரவாயில்லயா" இவ்வளவு தான் இவுங்க வேலை முடிஞ்சுது. இந்த மாதிரி இருக்கிறவங்கனால விரிசல் வராம இருக்குமா சொல்லுங்க நடுவரே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//கல்யாணம் பண்ணும்போதே தன் வசதிக்கு மீறி கல்யாணம் பண்றாங்க பெண் வீட்டார். போகும் இடத்தில் தன் பெண் கஷ்டப்படக்கூடாது என்ற அவங்க அன்பே பின் நாளில் “கல்யாணம் ஜோரா பண்ணாங்க, இன்னும் நிறைய பண்ணுவாங்க... விட கூடாது” என்ற எண்ணத்தை மாப்பிள்ளை வீட்டில் விதைக்குதுங்க. அப்பறம் கல்யாணத்துக்கு வாங்கின கடனை இவங்க அடைக்கும் முன் அடுத்தடுத்து சீர் செய்ய சொல்லி அங்க இருந்து லிஸ்ட் வந்துடுங்க.// கல்யாணத்தை அவங்க சக்திகி செஞ்சா கணவன் வீட்டுல என்ன சொல்லுவாங்க ஆமா கல்யாணத்துலியே ஒன்னும் பன்னல இனி மத்ததுக்குலாம் என்னதான் செய்வாங்கலோனு பொண்ணுகிட்ட வாழ் நாள் எல்லாம் சொல்லி காமிப்பாங்க.

//3. போன பிறகாது பெண் தன் வாழ்க்கையை முழுசா வாழ விடறாங்களாங்க? அப்பவும் “யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாத”னு வாயை தைய்து தான் அனுப்பறாங்க. பதில் பேச துடிக்கும் பெண் மனது கொஞ்ச காலம் அம்மா பேச்சை கேட்டு அமைதியா இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல வெடிச்சுடும். அப்போ கோவமும், பேச்சும் அதிகமா தாங்க இருக்கும்.

4. சரி பொண்ணை தான் வாயை திறக்க கூடாதுன்னு சொன்னோமே நாமும் பேசாம இருப்போம்னு நினைக்கணுமுங்க... பொண்ணு வந்து கண்ணை கசக்கி “உங்கள் மேல் குற்றப்பத்திரிக்கை வாசிக்கறாங்க மாமியார் வீட்டில்”னு சொன்னா... அடுத்த நிமிஷம் அவங்க என்ன என்ன செய்யலன்னு சொன்னாங்களோ அத்தனையையும் கடன்பட்டாவது கொண்டு போய் அவங்க காலடியில் போடுவாங்க பெண்ணை பெற்றவங்கள். அப்போ மாப்பிள்ளை வீட்டில் ஒரு சிரிப்பு... “இங்க அடிச்சா தானா வரும் போலிருக்கே” என்று. கற்றுக்கொடுப்பதே பெண் வீட்டு மக்கள் தாங்க.// என்ன நடுவரே எதிர் அணியில ஒருத்தர் என்னனா பொண்ண பொருமையா இருக்க சொல்லுராங்க இன்னொருத்தர் பொண்ணு பேசிதானாகனும்னு சொல்லுராங்க... அப்புறம் பெண் வீட்டார் எதுவும் கேட்க கூடாதுனு சொல்லுராங்க இன்னோருத்தர் பெண் வீட்டார் பெண்ணுக்காக பேசனம்னு சொல்லுராங்க முதல்ல அவங்க தரப்புல கடைசியா பொண்ணு என்னதான் செய்யனும்னு அவங்களுக்குள்ள பேசி ஒரு முடிவ சொல்ல சொல்லுங்க... ஏன்னா அவங்க அணிக்குள்ளவே வித்தியாசமான கருத்து இருக்கு நடுவரே.

//6. பெண் மட்டுமே பெற்றவங்க அதுக்கும் மேலே. மாப்பிள்ளை மேல பிள்ளை போல பாசம் பொங்கும். அடிக்கடி மாப்பிள்ளையை வீட்டுக்கு வர வைக்கிறது. பாவம் யாரும் இல்லாம இருக்கும் தனிக்கட்டைகள் தானே. ஆனா அதை பார்த்தா மாப்பிள்ளை வீட்டில் என்னாகும்? “அடடா... நம்ம பையனை அவங்க பக்கம் இழுக்கறாங்க”னு கோவம் வரும். தேவையா இது? சொல்லுங்க. மாப்பிள்ளையை மாப்பிள்ளையா தள்ளி தாங்க வைக்கணும்.
7. இவங்க காட்டும் அன்பில் மாப்பிள்ளை கொஞ்சம் அன்பாக “அவர் பாவம், உடல் நலமில்லை”னு மாமனாருக்கோ மாமியாருக்கோ கொஞ்சம் சப்போர்ட் செய்து பேசினாருன்னு வைங்க.. அவ்வளவு தாங்க நடுவரே. “போச்சு போச்சு, என் பையனை மொத்தமா வசியம் வெச்சு அவஙக் வீட்டு பக்கம் கொண்டு போயிட்டாளே பாவி”னு அழுது புலம்பி, அதுக்கு பதில் என்ன பண்ணலாம்னு மாமியார் மனசு தவிச்சு போகுது. பாவம் பிள்ளையை பெற்ற மனசாச்சே. நியாயம் தானேங்க. பக்கவிலைவு... பொண்ணு இனி அம்மா வீட்டு பக்கம் தலை வைக்க கூடாது. யாரு காரணம் சொல்லுங்க??// மாப்பிள்ளை மேல கன்டிப்பா பாசம் இருக்கதான் செய்யும் நடுவரே அதய்யே ஒரு குத்தமா பாக்குராங்க. ஆடு மாடு மரம் இலைனு எல்லாகிட்டையும் பாசம் காட்டுறோம் நம்ம நம்ம வீட்டு மாப்பிள்ளை கிட்ட காட்ட கூடாதுனா என்ன கொடுமடா.. அப்ப பொண்ண குடுத்தவங்க எல்லா உணர்ச்சியும் விட்டுட்டு இருக்கனுமா இது அடுக்குமா...

அன்புடன்,
லலிதா

//இப்போ நாம ஒரு ஆஃபிஸ்ல புதுசா போய் சேருரோம்ன்னு வச்சிகோங்க அங்க உள்ள மேலதிகாரிங்க நம்மல என்னா பேச்சி பேசுவாங்க மாத சம்பளம் வந்து ஆகனுமேன்னு அதையெல்லாம் நாம பொருத்து போகலை.
அந்த பொறுமை ஏன் நடுவரே! நம்ம கணவர் வீட்டு ஆளுங்க முண்ணாடி மட்டும் வர மாட்டேங்குது.
எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்னு ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.// ஆபிஸ்ல நமக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத மேலதிகாரிய அட்ஜஸ்ட் பண்ணு போற நாம ஏன் கண்வன் வீட்டு உறவுகள அட்ஜஸ்ட் செஞ்சி போறது இல்லனு கேக்குறாங்க...

//உங்க மகன் உங்களுக்கு இன்னும் சொந்தம் என்று நிரூபிக்க எந்த மருமகள்கள் எண்ணம் கொள்கிறார்கள்.!//யோசிக்க வேண்டிய விஷயம்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி.நீங்களும் கணவர் வீட்டு பக்கமா வாங்க வாங்க வந்து வெடிய கொளுத்துங்க...

//நடுவர் அவர்களே என்னுடைய வாதம் குடும்ப விரிசலுக்கு காரணம் நம்ம குடும்பம் தான் அதாங்க ( கணவனின் உறவுகள் ) ஏன் இப்படி சொல்லுறனா நம்ம கழுத்துல மூனு முடுச்சி போட்டவுடனே கணவனின் குடும்பம் நம்ம குடும்பம்மா ஆகுது நம்ம வீடு அப்பவே அம்மா வீடாக மாறிடுது.... அன்னைக்கே ஒரு கோட போட்டுடாங்க நடுவரே...//அதானே 20-25 வருசமா பொறந்து வளர்ந்து சந்தோஷமா வாழ்ந்த வீட என் வீடு சொல்லக்கூட முடியாம போகுது இது ரொம்ப பெரிய கொடுமை.
மீண்டும் வாங்க சரவெடியோட...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பவர் கட்டா சீக்கிரமா வந்து முழுகதையும் சொல்லுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்