பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

//பொண்ணு அம்மாட்ட தான் போய் அழும் ஆனால் அதுக்கு அம்மா என்ன செய்யனும் பொண்ணுக்கு பொருமைய சொல்லி கொடுக்கனும்
அதை விட்டுட்டு எப்படி மாமியாரோட சண்டை இடுவது என்று சொல்லி கொடுக்க கூடாது.///

//மாமியார் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போ //

எதிர் அணி தோழி ஒருத்தங்க உன் மாமியார் வீட்டுல என்ன பண்ணுனாலும் பொறுமையா போ னு சொல்லி கொடுக்கலை பிறந்த வீட்டுல னு சொல்றாங்க

இன்னொரு எதிர் அணி தோழி மாமியார் அப்படி இப்படினாலும் அனுசரிச்சு போ னு தேவையில்லாத அறிவுரையை வழங்குறாங்கனு சொல்றாங்க.. இது என்னங்க கூத்து... முதல்ல அவங்களை பேசி ஒரு முடிவுக்கு வர சொல்லுங்கப்ப...// எதிரணி மக்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் நடுவரா இருக்கும் பட்டியில நீங்க கலந்துக்கிறது ரொம்ப சந்தோஷம். மனைவி வீட்டினரே காரணம்னு சொல்றீங்களா சூப்பர்.

//இருதரப்பினரிடமிருந்தும் ப்ரச்சனை ஏற்படலாம் ஆனால் அதை ஊதி ஊதி பத்தவைக்க பெஸ்ட் ஆளுங்க பெண் வீட்டார் தான்..கல்யாணம் பண்ணி கொடுக்கும்போதே என்ன ப்ரச்சனைனாலும் அட்ஜஸ்ட் பண்ணும்மா ஒண்ணு ரெண்டு வருஷம் தான் ப்ரச்சனை பிறகு எல்லாம் சரியாகிடும்னு(பழகிடும்) எத்தனை பெத்தவங்க சொல்லி கொடுக்கறாங்க?பெரும்பாலும் அவங்க நல்லது சொல்லி அனுப்பினால் அட்ஜஸ்ட் பண்ணி போக கூடிய ப்ரச்சனைகள் தான்...//மனைவி வீட்டுக்காரங்க தான் பிரச்சனைய ஊதி பெருசாக்குறாங்கனு சொல்றீங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்திற்கு நன்றி... முதன் முறையா பட்டியில் கலந்து கொள்வதற்கு என் வாழ்த்துக்கள்..மணைவி வீட்டினரே காரண்ம்னு வாதட போறீங்களா கலக்குங்க.

//பெண் பார்க்க வந்து பேரம் பேசும்போதே என்னவோ ஆண் பிள்ளையை பெற்றவர்கள் பெரிய ஆட்கள் என்பது போல அவங்க சொல்வதுக்கு எல்லாம் தலை ஆட்டுறாங்க. பையன் பேசும் போது பதிலுக்கு எதுவும் பேசாதன்னு பொண்ணுக்கு அங்கையே அடிமைத்தனம் சொல்லி கொடுக்கறாங்க. அப்பவே மாப்பிள்ளைக்கு, மாப்பிள்ளை வீட்டு உறவுகளுக்கும் பெண், பெண் வீடு தகுதியில் கம்மியா தெரிய ஆரம்பிச்சுடுது. அவங்க பெரிய ஆளுன்னு மனசுல நினைப்பும் வந்துடுதுங்க.// பெண்வீட்டு காரங்க எல்லாத்துக்கும் சரி சரினு தலை ஆட்டுறதுனால தான் பிரச்சனைனு சொல்றாங்க.

//பொண்ணு பிரசவத்துக்கு வந்துச்சா 3 மாசம் வெச்சு பார்த்து அனுப்பினோமான்னு இருக்கணும். டெலிவெரிக்கு 3 மாசம் முன்ன, 3 மாசம் பின்னன்னு 6 மாசம் கூடவே வெச்சு பிள்ளை வளர்த்து அனுப்புறது. பொண்ணுக்கு பிறந்தது அப்பா வழி உறவுகளை விட இவங்க மேல அதிக அன்பை காட்ட துவங்கும். அது மாப்பிள்ளை வீட்டு மக்கள் வயிற்றில் ஒரு எரிச்சல் வரும் பாருங்க. ஹ்ம்... சொல்ல முடியாது. பெத்தாளா மாமியார் வீட்டுக்கு அனுப்பினோமா, அவங்களே இரவு பகலா தூக்கம் கெட்டு பேரப்பிள்ளையை மருமகளை பார்த்தாங்களா, மருத்துவமனை கூட்டிட்டு போனாங்களா, மருமகளுக்கு சமைச்சு போட்டாங்களான்னு விடணும். அவங்க செய்ய வேண்டிய கடமைங்க. அதை ஏன் பெண் வீட்டு மக்கள் தட்டிப்பரிக்கறாங்க? மாப்பிள்ளை வீட்டில் கோவம் வர தானே செய்யும்?//இதெல்லாம் பண்ணலைனா பிரசவத்துக்கு செய்யக்கூடிய கடமைய கூட பொண்ண பெத்தவங்க செய்ய மாட்டிங்கிறாங்கனு பிரச்சனை பண்ண மாட்டாங்களானு நான் கேக்கல எதிரணியில கேக்குறாங்க...

//இவங்க காட்டும் அன்பில் மாப்பிள்ளை கொஞ்சம் அன்பாக “அவர் பாவம், உடல் நலமில்லை”னு மாமனாருக்கோ மாமியாருக்கோ கொஞ்சம் சப்போர்ட் செய்து பேசினாருன்னு வைங்க.. அவ்வளவு தாங்க நடுவரே. “போச்சு போச்சு, என் பையனை மொத்தமா வசியம் வெச்சு அவஙக் வீட்டு பக்கம் கொண்டு போயிட்டாளே பாவி”னு அழுது புலம்பி, அதுக்கு பதில் என்ன பண்ணலாம்னு மாமியார் மனசு தவிச்சு போகுது. பாவம் பிள்ளையை பெற்ற மனசாச்சே. நியாயம் தானேங்க. பக்கவிலைவு... பொண்ணு இனி அம்மா வீட்டு பக்கம் தலை வைக்க கூடாது. யாரு காரணம் சொல்லுங்க??//பெண்கள் மட்டும் கல்யாணம் ஆனதும் மாமியார் மாமனார் மேல அன்பா மரியாதையா இருக்கணும் அதே ஆண்கள் இருந்தா தப்பா? இதையும் எதிரணி தான் கேக்குறாங்க..

//பொண்ணை கட்டி கொடுத்த கையோட விரட்டி விட்டுட வேணுமுங்க. அதன் பின்னும் அவள் மேல் வைக்கும் பாசம் தானுங்க எதிரியா போகுது.//என்னங்க இப்படி மாட்ட விரட்டி விடுற மாதிரி சொல்றீங்க.20-25 வருசமா பாத்து பாத்து ஆசையா பாசமா வளர்த்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அப்படியே விட்டுடணும் பாசமெ கூடாதுனா என்ன நியாயம். அப்போ இதே மாதிரி ஆம்பளை பிள்ளைகளையும் கல்யாணம் ஆன உடனே விரட்டி விட வேண்டியது தான ? இத எதிரணி கேக்கல நான் கேக்குறேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//நடுவரே அதான் எதிரணியே சொல்லிட்டாங்களே. அதெப்படி நடுவரே பிரச்சனைக்கு காரணம் கணவன் வீடாம் ஆனா பிரியரதுக்கு காரணம் மனைவி வீடா? ஒரு லாஜிக்கே இல்லியே.//அதானே லாஜிக்கே இல்லையே?

//இவ்வளவு ஏன் நடுவரே சரவணன் மீனாட்சி சீரியல அந்த மாமியார்(குயிலி) தன் மருமகளை(மீனாட்சி) மருமகள் மாதிரியா நடத்துது. வீட்டில வேலைகாரி மாதிரி தான நடத்துது. ஆனா தன் மகளை(சவுந்தரியா) மட்டும் வேலைக்கு அனுப்புது. என்ன கொடுமை நடுவரே. இது மாதிரி நிறைய வீட்டில நடக்குது நடுவரே.// என்னடா இந்த சீரியல் ஏரியாக்கு இன்னும் யாரும் நுழையலயேனு பாத்தேன். நீங்க ஆரம்பிச்சிட்டீங்களா? இன்னும் என்னென்ன சீரியல் எந்தெந்த மாமியார் எப்படி எப்படி கொடுமை பண்ணுறாங்க சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

மீண்டும் வாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//நடுவர் அவர்களே கொஞ்ச நேரம் கரண்ட் கம்பில தூணிய காயப்போட்டுட்டு,, அப்படியே ஊஞ்சலாடிட்டு வந்து பார்த்தா எதித்தாப்புல அம்மிணி ஒண்ணு பொளந்து கட்டிட்டு போயிருக்கு.// செம காமடி போங்க.சிரிப்பு தாங்க முடியல...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

/// அடுத்த நிமிஷம் அவங்க என்ன என்ன செய்யலன்னு சொன்னாங்களோ அத்தனையையும் கடன்பட்டாவது கொண்டு போய் அவங்க காலடியில் போடுவாங்க பெண்ணை பெற்றவங்கள். //

அப்போவது அடங்குதுகளா!! அப்பவும் எரிகிற வீட்டில் பிடிங்குன மட்டும் லாபம் னு தானா புடுங்குறாங்க இந்த ஆண் வீட்டார்//எதிரணியினரே உங்க கேள்விக்கி பதில் சொல்லிபுட்டாங்க இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

// பெண்ணுக்கு தலை பிரசவம் அம்மா வீட்டுல நடக்கணும் றது தாங்க நடை முறை... மாமியார் வீட்டுல இருந்தா கையில பிள்ளையை வச்சுக்கிட்டு இவங்க தான் வீட்டு வேலை அத்தனையும் பார்க்கணும். மாமியார் பிள்ளையை யாவது பாத்துப்பாங்கன்னு நினைக்கிறீங்க... எங்க டீ போன? பிள்ளை எப்புடி கத்துது பாரு.. னு ஒரு சத்தம் மட்டும் வரும்... ராத்திரி பகல் பிள்ளையையும் பாத்து, வீட்டு வேலையும் பார்க்க அவ பொண்ணா மெஷின் ஆ??

6. மாப்பிள்ளை மேல பாசம் காட்டுறது தப்பாங்க.. கணவன் வீட்டார் தான் மருமகளை மனுஷியா கூட நடத்துறது இல்லை.. இவங்களும் அப்படி இருக்கணுமோ??

மருமகள் மட்டும் இவங்க மேல அக்கறையா இருக்கணும்... மருமகன் அவங்க மாமனார் மேல பாசம் காட்ட கூடாதா!!! பொண்ணு அம்மா வீட்டுக்கு போக கூடாதுனா இவங்க பிள்ளையையும் இவங்க பாக்கவே கூடாது... அது தானே நடுவரே நியாயம்..//இது ஒரு நல்ல கேள்வி....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//இப்பிடி பாய்ண்ட்டபூரா பிட்டு பிட்டு வெச்சுட்டு எதித்தாப்புல போயி உக்காந்திருக்கிறதுலயே தெரியலயா நடுவரே விரிசலுக்கு யார் காரணமுன்னு. எந்த அளவு கணவன் வீட்டாரால் துன்பப்பட்டுப்போய் இருக்காங்கனு பாருங்க! எந்த வீட்லயாவது பொண்ண வெறுங்கையால அனுப்புவாங்களா நடுவரே! நீங்களும் ஒரு பெண்தானே யோசிச்சு பாருங்க!// நானும் 4 நாளா யோசிச்சிட்டு தான் இருக்கேன் 2 பக்கம் பேசுறதும் நியாயமா தான் இருக்கு ஒரு முடிவுக்கு வர முடியலயே...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//வரதட்சிணையே வேண்டாம்னு நல்ல மனசோட ஒரு வரன் வருதுன்னு வச்சுக்கோங்க. இந்த பொண்ணை பெத்தவங்களுக்கு அந்த வரன் மேல் நம்பிக்கையே வராது. என்ன வியாதியா இருக்குமோ ஏதோ வில்லங்கமா இருக்குமோன்னு அந்த வரனை ஒதுக்குவாங்க. இது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க// நூற்றுக்கு நூறு உண்மை தான்...

//அடுத்து மாமியார் பிரச்சினை. எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது நடுவரே. உலகத்துல உள்ள எல்லா மாமியாரும் கெட்டவங்க. எல்லா மருமகள்களும் ஒன்னுமே தெரியாத அப்பாவி... அப்படியா நடுவரே! // அதானேப்பா இந்த மருமகளுங்களுக்கு எல்லாம் ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுறாங்க நம்புற மாதிரியா இருக்கு...

//திருமணமாகும் முன் என் வீட்டினர் எனக்கு சொன்னது இதுதான். அங்கே நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை சந்தோஷங்களை எங்களோடு வந்து பகிர்ந்து கொள். அங்கு ஏற்படும் சிறு சிறு சலசலப்புகளை இங்கே வந்து சொல்லாதே. நாங்கள் காது கொடுத்து கேட்கவே மாட்டோம் அப்படீன்னாங்க. இதை கேட்ட போது எனக்கு கோபம்தான் வந்தது. ஆனால் இப்போது அதன் நல்ல பலனை நான் அனுபவிக்கிறேன்.

எங்க அப்பா அப்படி சொன்னதற்கான காரணம்... நீ அங்கே உள்ள பிரச்சினைகளை இங்கே வந்து சொன்னால் எங்களுக்கு உன் மீதுள்ள பாசத்தால் உன் பக்க நியாயங்கள் மட்டுமே கண்ணில் படும். உன் தவறுகள் பெரிதாகத் தெரியாது. அப்போது நாங்கள் உனக்கு சொல்லும் அறிவுரை நிச்சயம் பிரச்சினையை மேலும் பெரிதாக்கும். அதனால் சொல்லாதே.//உங்க அப்பா மாதிரியே எல்லாரும் சொல்லிட்ட பிரச்சனையே இல்ல போங்க...

//ஒரு பொண்ணுக்கு இதையெல்லாம் நடுநிலையா இருந்து யோசிக்கத் தெரிந்தாலே அந்த குடும்பத்தில் பிரச்சினைகள் வராது. வந்தாலும் அது விரிசல்களாகாமல் பாதுகாத்துக் கொள்ளும் பக்குவம் அவளிடம் இருக்கும். அந்த பக்குவத்தை பெண்ணிற்கு ஊட்ட வேண்டியது பிறந்த வீட்டினரின் கடமை. பிறந்த வீட்டினரால் அந்த பக்குவம் வளர்க்கப் படாத பெண்ணால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது. அதனால் குடும்பங்களில் விரிசல் விழக் காரணம் பெண்வீட்டினரே முதல் காரணம் என்று அடித்து சொல்கிறேன்...// பெண்வீட்டார் புகுந்த வீட்டுல வர பிரச்சனைய சமாளிக்கிற பக்குவத்த பொண்ணுக்கு சொல்லித்தராது தான் பிரச்சனைக்கு காரணம்னு சொல்றாங்க... இதுக்கு என்ன சொல்றீங்க?

உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள். நேரம் கிடைத்தால் மீண்டும் வாங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//நடுவர் அவர்களே, நம்மோட வாழ்க்கையை மட்டுமே பார்க்கக்கூடாது. ஏங்க நான் இந்த அணியில இருகிறதால என் மாமியார் கொடுமக்காரவுகளா என்ன? எங்கத்த பத்தறமாற்று தங்கமாக்கும். பெரும்பான்மை நிலையைத்தான் பேசணும் நடுவரே// எதிரணிகாரங்க வந்து பதில் சொல்லுங்க வாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//எதிரணியினர் சொல்லும் பொல்லாத மாமியார்களும் ஒரு பெண்ணுக்கு அம்மாதான். பெரும்பான்மையான மாமியாரும் பொல்லாதவங்க நடுநிலையா இருக்கத் தெரியாதவங்கன்னா அதே பெரும்பான்மையான அம்மாக்களும் நடுநிலைமை, நியாயம்னா என்னன்னு தெரியாவங்கதானே அப்போ அவங்களால் வளர்க்கப்பட்ட மகள்கள் எப்படி இருப்பாங்க? பிரச்சினைகளுக்கு காரணம் ஆவாங்கதானே?!// எதிரணியினரின் கேள்விக்கு சும்மா நச்சுனு பதில் சொல்லிட்டீங்க போங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்