பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

//மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவுங்களா இருக்கும் பட்சத்தில் கொடுக்கவேண்டிய தொகையை பத்தி நினைக்காமல் ஆக வேண்டியதை பார்க்கலாம்னு சொல்லி கல்யாணத்த நல்லபடியா முடிச்சு பொண்ணுவீட்டுக்காரங்க வயித்துல பால வார்க்கவேண்டாம் அட்லீஸ்ட் தண்ணீயாவது (நாட் தட் தண்ணி)வார்க்கலாமே...அதானே பொண்ணு நல்ல இருக்கணும்னு நினச்சி தானே கஷ்டபட்டு எல்லாமே செய்றாங்க அதையும் குத்தம் சொன்னா எப்படினு கேக்குறாங்க..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//உடனே அவங்க என்னசொன்னாங்கனா "அந்தக்காலத்தில எல்லாம் ஊட்லயே குழந்தபெத்துக்களையானு" கேட்குறாங்கனா பார்த்துக்கோங்க அவங்களோட கல்லு மனச.
அதகூட பொறுத்துக்களாம் நடுவரே! பேரக்குழந்தைய கொண்டுப்போய் ஆசையோட கொடுத்தாக்க "எனக்கு தீட்டு சேராது" அப்படினு குழ்ந்தைய கையால கூட தொடல நடுவரே! மருமககிட்ட போயி நாலஞ்சடி தள்ளி நின்னு "உடம்புக்கு எல்லாம் பரவாயில்லயா" இவ்வளவு தான் இவுங்க வேலை முடிஞ்சுது. இந்த மாதிரி இருக்கிறவங்கனால விரிசல் வராம இருக்குமா சொல்லுங்க நடுவரே!// நானும் இது மாதிரி பல கொடுமைய நேராவே பாத்து இருக்கேன். நீங்க சொல்றது உண்மை தான்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//கல்யாணத்தை அவங்க சக்திகி செஞ்சா கணவன் வீட்டுல என்ன சொல்லுவாங்க ஆமா கல்யாணத்துலியே ஒன்னும் பன்னல இனி மத்ததுக்குலாம் என்னதான் செய்வாங்கலோனு பொண்ணுகிட்ட வாழ் நாள் எல்லாம் சொல்லி காமிப்பாங்க.// அதானே பெண் வீட்டு காரங்க செஞ்சாலும் குத்தம் செய்யலனாலும் குத்தம்னா அவங்க என்ன தான் ப்ண்ணுவாங்க

//என்ன நடுவரே எதிர் அணியில ஒருத்தர் என்னனா பொண்ண பொருமையா இருக்க சொல்லுராங்க இன்னொருத்தர் பொண்ணு பேசிதானாகனும்னு சொல்லுராங்க... அப்புறம் பெண் வீட்டார் எதுவும் கேட்க கூடாதுனு சொல்லுராங்க இன்னோருத்தர் பெண் வீட்டார் பெண்ணுக்காக பேசனம்னு சொல்லுராங்க முதல்ல அவங்க தரப்புல கடைசியா பொண்ணு என்னதான் செய்யனும்னு அவங்களுக்குள்ள பேசி ஒரு முடிவ சொல்ல சொல்லுங்க... ஏன்னா அவங்க அணிக்குள்ளவே வித்தியாசமான கருத்து இருக்கு நடுவரே.//எதிரணியில ஏன்ப்பா எல்லாரும் மாத்தி மாத்தி பேசுறீங்கனு கேக்குறாங்க சீக்கிரம் வந்து ஒரே மாதிரி பதிலா சொல்லுங்க பாப்போம்...

//மாப்பிள்ளை மேல கன்டிப்பா பாசம் இருக்கதான் செய்யும் நடுவரே அதய்யே ஒரு குத்தமா பாக்குராங்க. ஆடு மாடு மரம் இலைனு எல்லாகிட்டையும் பாசம் காட்டுறோம் நம்ம நம்ம வீட்டு மாப்பிள்ளை கிட்ட காட்ட கூடாதுனா என்ன கொடுமடா.. அப்ப பொண்ண குடுத்தவங்க எல்லா உணர்ச்சியும் விட்டுட்டு இருக்கனுமா இது அடுக்குமா...//நியாமான கேள்வி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவர் அவர்களே!
என் உயிர்த்தோழியோட கதை இது. திருமணம் ஆனவுடனே அவ தனிக்குடித்தன்ம் வந்துட்டா. ஒவ்வொருமுறை அவ மாமியார் வரும் போது எல்லாம் பொருமுவாங்க பாருங்க. அப்பப்பா எதாவது ஒரு பொருள் புதுசா வாங்கியிருந்தா போதும் எங்களுக்கெல்லாம் இது மாதிரி யார் வாங்கி குடுக்கறாங்க நா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவெச்சேன் தெரியுமா அவன் குழந்தையா இருக்கிறப்ப காய்ச்சல் வந்துச்சா டாக்கடர் கிட்ட கூட்டிட்டு போயி மருந்து மாத்திரை குடுத்துனு ஆரம்பிப்பாங்க பாருங்க என்னமோ இவிங்க பைய்யன இவிங்ககிட்ட இருந்து பிரிக்கிறதுக்குனே அந்தப்பொண்ணு பொறப்பெடுத்தமாதிரி.
பால்காரர் கேட்ல பைல பால் போட்டாருனா இங்கயெல்லாம் உனக்கு வீட்டுக்கே பால்வருது நானு நாளு வீடு தள்ளிப்போயி வாங்கணும்பாங்க. வாசப்படிக்கே வ்ந்து ஊத்துற பால்காரர்கிட்ட சண்டபோட்ருப்பாங்க அவரு எப்படி பால் ஊத்துவாறு. அவங்களோட பேரப்பசங்கள கைல கூட தொடாதவங்க கிட்ட குழந்தைக எப்படி நெருங்கி பழகுவாங்க நீங்களே சொல்லுங்க நடுவரே! அதுக்கும் அவதான் காரணமாம். எல்லா சொல்லிக்குடுத்து இப்படி செய்யுறாம்பாங்க.
சரி வீட்டுக்கு வந்தவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுகுடுக்கலாம்னு பண்ணிக்குடுத்தா எனக்கு சேராத பண்டத்த பண்ணிக்குடுத்து இடுப்பு வலி, முழங்கால் வலி, மேல்அரிப்பு எல்லாத்தையும் உண்டு பண்ணிட்டானு மகன் கிட்ட புலம்பி தள்ளிடுவாங்க. சரி அவ்ங்களெயே கேட்டு சமைக்கலாம்னு கேட்டாக்க என்னத்தையோ பண்ணு போ அப்படீம்பாங்களாம். அதோட விட்டா பரவாயில்லயே "நீ வீட்ல சும்மாவே இருக்கிற அவ வேலக்கி போறா, இவ வேலக்கி போறானு" ஊர்ல இருக்கிற அத்தணை பேரையும் வரிசைப்படுத்துறதே வேலையா இருக்கிறதாம்.
ஒரு முறை தோழி நினைத்தாளாம் நாமதான் சரியா புரிஞ்சுக்காம இவங்கள கண்டுக்கிறதிலன்னு நின்ச்சு எதாவது வேல குடுத்தம்னா(அவளோட அம்மா வேல குடுக்கலண்ணா கோவிச்சுக்குவாங்களாம் சரி நம்ம வீட்டுக்கு வந்துட்டு அம்மா ஓய்வு எடுக்கட்டுமேனு நினைச்சாலும் ஏதாவ்து வேல செஞ்சுட்டே இருப்பாங்களாம்) கொஞ்சம் ஒட்டுதலோட இருப்பாங்கனு நினச்சு கீரை ஒரு கட்டு கொடுத்து சுத்தம் பண்ணிக்கொடுங்கனு சொல்லி இருக்கா! அதுக்கு அவுங்க "நான் கிடக்கிறேன் கைவலியோடனுட்டாங்களாம்.”. மகன் வர்ற வரைக்கும் தூங்கிட்டே இருந்துட்டு வர்ற சமயம் பார்த்து எழுந்து குற்றப்பத்திரிக்கை வாசிப்பாங்களாம்.

நான் நினைக்கிறேன் நடுவரே! ஆண பெத்தவங்களாம் "வெள்ளரிக்காயை தின்னுபோட்டு வெவரமா பெத்துட்டாங்க பொண்ணப்பெத்தவங்க கெலாக்காய தின்னுபோட்டு கேனமாப் பெத்துட்டாங்கனு".

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//சரி வீட்டுக்கு வந்தவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுகுடுக்கலாம்னு பண்ணிக்குடுத்தா எனக்கு சேராத பண்டத்த பண்ணிக்குடுத்து இடுப்பு வலி, முழங்கால் வலி, மேல்அரிப்பு எல்லாத்தையும் உண்டு பண்ணிட்டானு மகன் கிட்ட புலம்பி தள்ளிடுவாங்க.//நாமலா எதாவது சமைச்சாலும் பிடிக்க மாட்டிங்குது, அவங்ககிட்ட கேட்டாலும் எதும் சொல்ல மாட்டிங்கிறாங்கனு சொல்றாங்க இதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க எதிரணி தோழிகளே....

//நான் நினைக்கிறேன் நடுவரே! ஆண பெத்தவங்களாம் "வெள்ளரிக்காயை தின்னுபோட்டு வெவரமா பெத்துட்டாங்க பொண்ணப்பெத்தவங்க கெலாக்காய தின்னுபோட்டு கேனமாப் பெத்துட்டாங்கனு".//எப்படி இப்படி எல்லாம். எங்க இருந்து பிடிக்கிறீங்க இந்த பழமொழிய எல்லாம்???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என்னப்பா என்ன ஆச்சி எல்லாரும் எங்க போயிட்டீங்க ? ஏன் 2 நாளா பட்டி மன்றம் தூங்குது? வந்து எல்லாரும் பதிவு போட்டு பட்டியை தூங்க விடாம பாத்துக்கோங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே இந்த கல்யாணம், குழந்தைய பாத்துகிறது எல்லாதையும் விட்டு நாம வேர பிரச்சணைய பாப்போமா இப்ப நமக்கு ஒரு பிரச்சணை வருதுனா அந்த நேரத்துல நம்ம கூட இருந்து ஆதரவா ஆறுதலா பேசுறது யாரா இருக்குமுனு நினைக்கிறிங்க அது நம்ம அம்மா வீடு உறவுகளாக தான் இருக்கும்.

அந்த நேரத்துல கணவன் வீட்டு உறவுகள் கொஞ்சம் தல்லி போய் நிப்பாங்க முடிந்த வரை நம்ம கண்ணுல படாத தூரத்துக்கு போயிடுவாங்க அப்புறம் நாம நல்ல நிலமையில இருக்குறத தெறிஞ்சுகிட்டு ஒரு நாள் பாசமா வருவாங்க அப்பதான் பாசம் பொங்கி குடம் குடமாய் வழியும்... ஆனா அப்பவும் ஒன்னு சொல்லுவாங்க பாருங்க என்னனா உங்க பசங்க எங்ககிட்ட எல்லாம் பேசவே மாடேங்கதுங்கனு வரும்பாருங்க ஒரு கோவம் ஆனா நாம அதையும் காட்டிக்க மாட்டோம் 10 - 15 வருடம் கழித்து இவங்க வருவாங்க அப்ப எப்படி நம்ம வீட்டு பசங்களுக்கு இவங்கள் தெறியும்முங்க. இதனாலும் விரிசல் ஏற்படுதுங்க.

நடுவரே கடைசியா ஒன்னு சொல்லுறேன் மீன் பிடிக்க கடலில் குதிக்கும் பொழுது கணவரின் இடுப்பில் கட்டி இருக்கும் கயிற்றை யார் கிட்ட குடுத்து இருப்பாங்க பெண்ணின் தம்பி கிட்டதான் குடுப்பாங்களாம் இதில் இருந்தே தெறியலையா ஏன் அவங்க அண்ணா, தம்பி, தங்கச்சி புருசன் கிட்ட குடுக்க வேண்டியதுதானே...?

அன்புடன்,
லலிதா

//நடுவரே இந்த கல்யாணம், குழந்தைய பாத்துகிறது எல்லாதையும் விட்டு நாம வேர பிரச்சணைய பாப்போமா இப்ப நமக்கு ஒரு பிரச்சணை வருதுனா அந்த நேரத்துல நம்ம கூட இருந்து ஆதரவா ஆறுதலா பேசுறது யாரா இருக்குமுனு நினைக்கிறிங்க அது நம்ம அம்மா வீடு உறவுகளாக தான் இருக்கும்.//வாஸ்தவமான பேச்சு...

//நடுவரே கடைசியா ஒன்னு சொல்லுறேன் மீன் பிடிக்க கடலில் குதிக்கும் பொழுது கணவரின் இடுப்பில் கட்டி இருக்கும் கயிற்றை யார் கிட்ட குடுத்து இருப்பாங்க பெண்ணின் தம்பி கிட்டதான் குடுப்பாங்களாம் இதில் இருந்தே தெறியலையா ஏன் அவங்க அண்ணா, தம்பி, தங்கச்சி புருசன் கிட்ட குடுக்க வேண்டியதுதானே...?//அதானே அவங்க அண்ணன் தம்பிக்கிட்ட கொடுக்க வேண்டியது தானே அவங்க மேல நம்பிக்கை இல்லாததுனால தான குடுக்க மாட்டிங்கிறாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

தோழிகளே தீர்ப்புக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. அதனால தோழிகள் அவங்க பக்கத்து வாதங்களை தந்து அவரவர் அணிக்கு பலம் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.......

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளும் கூட பெரிதாகி விரிசல் விழுகிறது என்றால் அங்கே மூன்றாம் மனிதரின் தலையீடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த மூன்றாம் மனிதர் யாரென்று மேலோட்டமாகப் பார்த்தால் எல்லோரும் சட்டென்று சொல்வது கணவரின் குடும்ப உறவுகளைத்தான். ஆனால் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இது தவறு என்பது நடுவருக்குப் புரியும்//

நடுவர் அவர்களே, மூன்றாம் மனிதர், 4ம்,5ம்,6ம் இப்படி மனிதர்களின் தலையீட்ட்டால் பிரச்சனை என்றால் அந்த அத்தனை மனிதர்களும் பெண் வீட்டார் பக்கம் இருந்து வருவதில்ல. மொத்தமாக குத்தகை எடுத்து மாப்பிள்ளையின் வீட்டில் இருப்பார்கள். முன்னாடி வாயில்லாத பூச்சா தான் இருந்திருப்பாங்க. ஆனா பாருங்க வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு நாத்தனாருங்கற பட்டம் கிடைச்சதும், மாமியாருங்கற பட்டம் கிடைச்சதும் எங்கிருந்து தான் அந்த வில்லத்தனமான எண்ணங்களும், ஐடியாக்களும் வருமோ தெரியாது? ரூம் போட்டு கூட இல்லை. முழு வீடு போட்டே ப்ளான் பண்ணி விரிசலை உண்டு பண்ணுவாங்கங்க.. அந்த விஷயத்தில் பையன் வீட்டு ஆளுங்களே ஆளுங்க தான். நான் சொல்வது அனைத்து பையனை பெற்றவர்களையும் அல்ல நடுவர் அவர்களே. உண்மையாகவே பிரச்சனை பண்ணும் சிலரை தான்.

//ஒரு குடும்பத்தை விரிசல்களின்றி நடத்திச் செல்லும் பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் இருக்கிறது என்றாலும் அதை சற்று கூடுதல் கவனத்துடன் செய்வது மனைவியாகத்தான் இருக்கும். //

கவனம் மட்டும் தாங்க செலுத்த முடியும். அதை நிவர்த்தி பண்ண மேலிடத்தில் விட மாட்டாங்க.. ஏன்னா, அவங்க தான் நம்ம மேலயே எப்பவும் கவனமா இருக்காங்களே..என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு. நம்ம தலையோட குடுமி அங்கே மாட்டியிருக்கும். அப்புறம் அவர் எப்படி அவங்களை விடுவிச்சுட்டு நம்மோட தனிக்குடித்தனம் வரப்போறார்.. போங்க நடுவரே.. எதிரணி ரொம்பதான் ஆசையை கிளப்பி விடுறாங்க..;(

//அங்கே அவள் கணவனுக்கு பின் தான் அவரது உறவுகள். அந்த உறவுகள் இல்லை என்றாலும் அது அவளைப் பெரிய அளவில் பாதிக்காது.//

நடுவர் அவர்களே ஒரு பூசணிக்காய் தோப்பையே தக்கனூண்டு கிளாஸ்ல மறைக்க பார்க்கிறாங்க பாருங்க. இங்கே பெரும்பாலும் பெண்களுக்கு அவளின் புகுந்த வீட்டினருக்கு அடுத்தபடியாக தான் கணவன் என்ற நிலையில் தான் வைத்துள்ளார்கள் புகுந்த வீட்டினர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன் தன் மனைவி மற்றும் குழந்தையை தன் தாயிடம் விட்டு விட்டு வந்துள்ளார். ஆனால் அந்த மனைவிக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ள மாமியாரிடம் கூட கேட்க முடியாது சம்பந்தமே இல்லாமல் அவரின் அக்காக்களிடம் தான் கேட்க வேண்டுமாம்.கதை எப்படி இருக்கு பாருங்க? மாமியாரிடம் கேட்டாலும் அதில் ஒரு அர்த்தமும், உரிமையும் உள்ளது. ஆனால் சிறிதும் சம்பந்தமில்லாத கணவரின் அக்கா விடம் கேட்க வேண்டும் என்றால் என்ன நியாயம் சொல்லுங்க. இன்னொரு கொடுமை இவர் சம்பாதிப்பது எவ்வளவு என்று கட்டிய மனைவிக்கு கூட தெரியாது. அவரின் அக்காவிற்கு தான் தெரியும். ஏனென்றால் இவரின் பேங்க் அக்கவுண்ட் மற்றும் ஏடிஎம் கார்டுகள் அத்தனையும் அக்காவின் கஸ்டடியில் தான் இருக்கின்றன. இதில் எங்கிருந்து அந்த உறவுகளால் பாதிப்பு வராது என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. பாதிப்பு குறைய குறைய பிரச்சனைகளை அள்ளி அள்ளி விடத்தான் நடமாடும் பிரச்சனை கூடங்களாக கணவன் வீட்டினர் உள்ளார்கள். கணவன் வீட்டு ஆட்களின்றி மனைவிக்கு ஒரு அணுவும் அசையாது. அசைக்கவும் முடியாது போங்க..

//தன் பிறந்த வீட்டு குடும்பத்தினரால் ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அவள் கணவனையும் விட முடியாமல் பிறந்த வீட்டு உறவுகளையும் முடியாமல் குழம்பி நிற்பாள்.//
பாருங்க.. இவங்க வாய்ல இருந்தே வந்துருச்சி. நம்ம பெண்கள் பிரச்சனை வந்தா ரெண்டு பேரையும் விட்டு தர முடியாம குழம்பி போய்டறாங்க. ஆனா ஆண்கள் அப்படி குழம்புவாங்களா? அவங்களுக்கு எப்பவும் ஒரே சாய்ஸ் தான். தான் மற்றும் தன்னை சார்ந்த உறவுகள் தான் எப்போதும் முக்கியம். ஆக விரிசலுக்கு அடித்தளம் எங்கேருந்து கிளம்புது பாருங்க..

//பிறந்த வீட்டுக்காக கணவரை விட்டுக் கொடுத்தாலும் கணவருக்கு மனைவியின் மீது கசப்பு ஏற்படும். இதுவே விரிசலுக்கு முதல் படியாக உருவெடுக்கும்.//

மனைவிக்கு முதலில் கணவன் மீது கசப்பிருந்தாலும், நாளாவட்டத்தில் வாழ்வின் நிதர்சனம் அறிந்து தன்னை தேற்றிக் கொண்டு அவனிடத்திலும், அவன் குடுத்தாரிடத்திலும் அன்பாக இருப்பாள். ஆனால் கணவன் அவ்வளவு சீக்கிரம் அதை மறக்க மாட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்தி காட்டி காட்டியே ரணமாக்கிவிடுவார்.

//ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் போதே மாமியார் பற்றிய பயத்தை உருவாக்குவதே பிறந்த வீட்டினர்தான். மாமியார் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போ அப்படீன்னு பல அறிவுரைகள் தன் மகளுக்கு புகட்டுவதோடு சீக்கிரமா உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கோ என்பது போன்ற அறிவுரைகளும் கொடுக்கப் படும். இது பெரும்பாலான வீடுகளில் நடக்கும் நிதர்சனமான உண்மை. இத தன் மகளின் மீதுள்ள அக்கறையால் கொடுக்கப் படும் அறிவுரைகளாகவே பெண் வீட்டினர் நினைக்கின்றனர். ஆனால் அது எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை உணராமல் இருக்கின்றனர் பெண்வீட்டார்//

நடுவர் அவர்களே, எந்த இடத்துக்கு எப்படி போகனும்? போற இடத்தில் எப்படி நடந்துக்கனும்னு தான் பொண்ணை பெத்தவங்க சொல்லி தர்றாங்க. சரி இவங்க பேச்சுப்படியே போவோம். பொண்ணு வீட்ல அவங்களால முடிஞ்ச 4 நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்புவாங்க. ஆனா பையனை பெத்தவங்க அப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்களா? வீட்டுக்கு வர்ற பொண்ணை கண்கலங்காம காப்பாத்தனும். அவ மனம் நோகாம நடந்துக்கனும். இருக்கற கெட்டபழக்கத்தை விடனும்னு இதெல்லாம் சொல்லி தருவாங்களா? கல்யாணம்ங்கற பந்தத்தில் பெண்ணுக்கு எத்தனை பொறுப்புகள் உள்ளனவோ அதை போன்றே சம அளவு பொறுப்புகள் ஆணுக்கும் உள்ளது. அப்படி இருக்கும் போது அட்வைஸ் பெண்களுக்கு மட்டும் தானா? வாழ்க்கைங்கற மாட்டு வண்டியில கணவன்,மனைவிங்கற ரெண்டு மாடுகளும் சுணக்கமில்லாம ஓடினால் தான் போய் சேர வேண்டிய இடத்தை தங்கு தடையில்லாம சேரமுடியும். இரண்டில் ஒன்று மக்கர் பண்ணாலும் வண்டியை ஓரம் தான் கட்டனும். இல்லைனா மாடுகளை ஓரம் கட்டிடுவாங்க. பையனை பெற்றவர்கள் ஒரு பெண்ணையும் பெற்றிருந்தால் அவர்கள் என்ன அறிவுரை சொல்லி அனுப்பி இருப்பார்களோ அதை தான் வீட்டிற்கு வரும் மருமகளுக்கும் அவளுடைய பெற்றோர்கள் சொல்லி இருக்க போகிறார்கள்.

பாம்பின் கால் பாம்பறியும். அப்படியிருக்கும் போது பையனை பெற்ற பெற்றோர்கள் அறிய மாட்டார்களா என்ன? வீட்டிற்கு வந்த மருமகளை நாம படுத்தும் பாட்டை போற இடத்தில் தன் பெண்ணும் படக்கூடாதென்று அதன் நெளிவுசுளிவுளை சூப்பரா சொல்லி தந்து தான் அனுப்புவார். என்ன மாயம் பண்ணுவாங்கன்னு தெரியாது. கொடுமைக்கார மாமியார்களுக்கெல்லாம் மருமகன்கள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருப்பார்கள். மருமகனையும் கொடுமைபடுத்தி இருப்பாங்களோ?

மாமியார், மாமனார் கொடுமைகளை கூட பொறுத்துக்கலாம். ஆனா, இந்த இலவச இணைப்புங்க நாத்தனாருங்க பண்ற ரவுசு இருக்கு பாருங்க. ஆ'ன்னா..ஊன்னா.. சொம்பு இல்லாமயே நாட்டமை பண்ண வந்துடுவாங்க. எண்ணெய் சட்டில போட்ட பணியாரம் மாதிரி சொய்ய்ங்க்..சொய்ங்க்னு... அவங்களும் ஒரு வீட்டுக்கு மருமகளுங்க தான்ங்கறதை மறந்துட்டு. ஆனா, அவங்க அதிர்ஷ்டம் அவங்களுக்கு வாய்ச்ச நாத்தனார்ங்க வாயில்லா பூச்சிகளா இருப்பாங்க. எப்படி அடிக்குது பாருங்க இவங்களுக்கெல்லாம் யோகம். நடுவர் அவர்களே.. இது அத்தனையும் திரித்து சொல்லப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல.. அனைத்தும் வாழும் உதாரணங்கள்.

நாம எங்கே இவங்க வீட்டு கதையை கொண்டு போய் அம்மா வீட்ல சொல்றது.. நாங்க சொல்றதுக்கு முன்னாடியே கதை ஊரெல்லாம் நாறிப்போயிருக்கும். அவங்களே தெரிஞ்சுப்பாங்க. அப்ப கேக்காம காதை தான் பொத்தி வச்சுக்க சொல்லனும். அவங்க நாலெட்ஜுக்கு போகாம இருக்க இது தான் வழி. எம்மணி தோழி சொன்னது போல, திருமணத்திற்கு பிறகு தலையாய பிரச்சனை குழந்தையின்மை பிரச்சனை தான்.அப்போது கூட எத்தனை வருடங்கள் ஆனாலும், குழந்தை இல்லாவிட்டால் பெண்ணை பெற்றவர்கள் ஒருபோதும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லவே மாட்டாங்க. பிரச்சனையை தீர்க்க வழியை தான் பார்ப்பார்கள். ஆனால் பையன் வீட்டில் அவன் ஆண்மகன் என்ற ஒரே காரணத்தை வைத்து மறுகல்யாணத்திற்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நடுவர் அவர்களே கடைசி நேரத்தில் வந்து வாதத்தை வைத்து தர்மசங்கடப்படுத்தியதற்கு மன்னிக்க வேண்டும். பட்டி தொடங்கினாலே எதாவது ஒரு வேலை வந்து விடுவது இப்போது என் வீட்டின் பேசனாகி போய் விட்டது ;)) அதனால் தொடர்ந்து பதிவுகளை தர முடியவில்லை. மேலும் முடிந்தால் இன்றிரவிற்குள் பதிவுகளை தர பார்க்கிறேன். இல்லையென்றால் உங்களின் பொன்னான தீர்ப்பிற்க்காக காத்திருப்பேன் :)

நடுவர் அவர்களே,இங்கேயும் நல்லா கவனிச்சு பாருங்க. மாப்பிள்ளையை கைக்குள்ள போட்டுக்கோன்னு சொல்லி தான் அனுப்புவாங்க. அவனை விட்டுட்டு வந்துடுன்னோ, நீ தனியா வந்துடுன்னோ, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னோ சொல்லி தர மாட்டாங்க. ஆனா பையனை பெற்ற மகராசிகள் இதையெல்லாம் செய்வாங்களா? வீட்டிற்கு வந்த மருமகள் கோலூன்றும் வயது வந்தாலும், அவளையும் வீட்டின் ஒரு அங்கமாக ஏற்கவே அவர்கள் மனது ஒப்புக்கொள்ளாது. குழந்தையில்லையா? அவளை கழட்டி விட்ரு. சண்டை போடுறாளா? அவளை அத்து விட்ரு. அடங்கலயா? டைவர்ஸ் பண்ணிடு. இப்படியெல்லாம் தான் செய்ய தோன்றும். செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதே இடத்தில் அவர்கள் பெற்ற பெண் இருந்தால் இப்படி நினைக்க தோன்றுமா? இல்லை பெண்ணை பட்டமரமாக நிறுத்தி பார்க்க தான் ஆசைப்படுவார்களா?

கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்குபவர்கள் என்பதற்கு என்னால் உள்ளங்கை நெல்லிக்கனி போல இப்போது நடந்து ஒரு நிகழ்ச்சியை கூற முடியும். அறுசுவையில் என் அன்பிற்கும், நட்பிற்கும் பாத்திரமான தோழி அவர். நான் அறுசுவைக்கு வந்த புதிதில் எனக்கு நட்பானவர்.இப்போதும் அப்படியே. அவருக்கு திருமணம் முடிந்து பலவருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர் அதற்குரிய ட்ரீட்மெண்டும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அவர் இந்தியாவில் இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் அவரின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து அந்த பெண்ணை தான் வேலை பார்க்கும் வெளிநாட்டில் தன்னோடு வைத்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டாவது மணத்திற்கு அவரை பெற்ற புண்ணியாத்மாக்களும் பக்க பலமாக இருந்துள்ளார்கள். என்ன கொடுமை பாருங்க.. என் தோழிகளுக்கு மிக தாமதமாக தான் அந்த உண்மை தெரிய வந்தது. இப்போது அவர் கணவரின் மேல் கேஸ் போட்டுள்ளார். இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே.. பெண்ணை பெத்தவங்க இதுபோல மாபாதக செயல்களுக்கு துணை போவாங்களா? ஆக விரிசலின் வேர் எங்கேருந்து படருது பாருங்க..

புகுந்த வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லியதெல்லாம் அந்தக்காலம் நடுவர் அவர்களே. இப்ப உள்ள பெண்கள் எல்லாம் உலகம் அறியாதவர்கால் அல்ல. சொல்லப்போனா சமயத்தில் பெற்றோருக்கே பெற்றோராக இருந்து அறிவுரை சொல்லும் மனப்பக்குவம் உள்ளவர்கள். அதனால் எப்படி டீல் பண்ணனும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். பெற்றோர் காதுக்கு கொண்டு போகவே மாட்டாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்