பீட்ரூட் அல்வா

தேதி: October 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

பீட்ரூட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
சீனி - ஒரு கப்
பால் - 3 கப்
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 8
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - கால் கப்

பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து கட்டியில்லாமல் அரைத்து கொள்ளவும். ஒரு தவாவில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும். ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும்.
அதனுடன் சீனி மற்றும் உப்பு சேர்த்து இடைவிடாது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.
கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார். சூடாக பரிமாறவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினற்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

wow beet root alva semaya colourfull ah irukku. beet root alva la potato serthu seivaangala. pudhusa ippo dhan kelvi paduren. nice vazhthukkal.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வண்ணமயமான குறிப்பு கொடுத்து அசத்தி இருக்கீங்க(:- வாழ்த்துக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முஹ்சினா பீட்ரூட் அல்வா அருமை செய்துபார்த்து விட்டு சொல்கிறேன். இன்னும் அருமையான குறிப்புகள் வர வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஆமாம் ரேவதி உருளைகிழங்கு சேர்த்து செய்து பாருங்கள் ருசி அபாரம்.செய்த அப்பவே எல்லாம் காலி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.அருட்செல்வி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி ஹலிலா,இதில் கலர் எதும் சேர்க்கவில்லை,பீட்ரூட் கலரெ போதுமானது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

brighta superaa eruku,sekerame seithu parthu pinnotam poduren, navarathiriki receipe ready, thanks

மிக்க நன்றி;அவசியம் செய்துபாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Musi... Beatroot halva super pa... Unga muraiyil try pannittu solren:) vazhthukkal musi...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப நன்றி,நித்யா செய்துபார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசினா,
கண்கவரும் ஹல்வா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலரே தூக்குது :) அருமையான குறிப்பு. படம் ஷைனிங்கா... சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.