ப்ரைட் ரைஸ்

தேதி: September 8, 2006

பரிமாறும் அளவு: 2 - 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பாஸ்மதி ரைஸ் - 2 கப்
காய்கறி:
கோஸ் - ஒரு சிறிய கப்
வெங்காயம் - ஒன்று
பீன்ஸ், காரட் - ஒன்று
பச்சை பட்டாணி - ஒரு கப்,
வெங்காயத்தாள் - 3
குடை மிளகாய் நறுக்கியது - ஒரு கப்
அஜினமோட்டோ - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் வெட்டியது)
உப்பு - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
கிராம்பு - ஒன்று
வெண்ணெய்/நெய் - 3 தேக்கரண்டி


 

இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி, சாதம் வைக்கவும்.
ஒரு கடாயில், வெண்ணெய்/நெய் ஊற்றி, கடுகு வெடித்ததும், கிராம்பு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கின பிறகு, கோஸை தவிர மற்ற காய்களை போட்டு வதக்கவும், காய் சிறிது வெந்த பிறகு கோஸ் போட்டு சிறிது வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
காய் அனைத்தும் அரைப் பதமாக வெந்தால் தான் நன்றாக இருக்கும். இறுதியில், அஜினமோட்டோ, சோயா சாஸ் ஊற்றி கலந்து, சாதத்துடன் கலக்கவும்.


துணை பதார்த்தம் - இதற்கு தக்காளி கெட்சப் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தியா
உங்க ஃபிரைட்ரைஸ் பண்ணினேன். ரொம்ப நல்லா
வந்தது. ஆனால் நீங்க அஜினமோட்டோ 1 டீஸ்பூன் கொடுத்திருக்கீங்க.
அவ்வளவு போடலாமா?
நான் அதை மட்டும் 4 பின்ச் அளவு மட்டுமே போட்டேன்.
சூப்பரா இருந்தது.
நன்றி!