கிட்ஸ் பாஸ்தா

தேதி: October 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

பாஸ்தா - 2 கப்
பட்டர் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 1/2
ஒரிகானோ - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
முட்டை - 1
அல்லது சீஸ் - துருவியது


 

முதலில் பாஸ்தாவை கொதிக்கவைத்து உப்பு எண்ணை சிறிது சேர்த்து வேகவைத்து வடிக்கவும்
பட்டர் காயவைத்து வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கவும்
பின்பு தக்காளி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
பின்பு தீயை அணைத்து விட்டு ஒரிகானோ சேர்த்து இறக்கவும்
சூடு ஆறியதும் இதனை மைய்யாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு பேனில் கொஞ்சமாக எண்ணை எடுத்து 1 முட்டையை கலக்கி ஊற்றி கலக்கி விட்டு வெந்ததும் பாஸ்தாவையும் அரைத்த வெங்கா கலவையும் சேர்த்து உப்பு சரிபார்த்து மசாலா பிரட்டியதும் தீயை அணைத்து பரிமாறவும்
முட்டை சேர்க்க விரும்பாவிட்டால் சூடாக கடைசியில் துருவியசீஸ் கலந்து பரிமாறவும்


ஒரிகானோ வின் சுவை இதற்கு சுவையாக இருக்கும்..விரும்பினால் சுவைக்கு சிக்கன்,சிக்கன் ஸ்டாக் சேர்க்கலாம்..பெரியவர்களுக்கு காய்கறிகள்,மிளகு தூள் சேர்த்து செய்து கடைசியாக மல்லி இலை தூவி இறக்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஒரிகானோ?