சிக்கன் ஃப்ரை

தேதி: October 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (10 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கையால் பொடித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் கலர் மாறியதும் சோயா சாஸ், கெட்சப், இஞ்சி பூண்டு விழுது, தூள் (மிளகு தவிர) வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
மூடி வேக விடவும். நீர் சேர்க்க தேவை இல்லை. சிக்கன் வெந்ததும் மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
நன்றாக பிரட்டி, எடுக்கும் முன் எலுமிச்சை சாறு விட்டு எடுக்கவும். சுவையான சுலபமான சிக்கன் ஃப்ரை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி! நாளக்கி சமைக்கிறதுக்கு இன்னைக்கே குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி+வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Vanitha akka... Romba simple and easy chicken fry... Superb ah iruku akka... Vazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நல்லா செய்துருக்கீங்க.வனி,நானும் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி, சிக்கன் ப்ரை வழக்கம் போல சுவையான குறிப்பாக இருக்கும்னு நினைக்கறேன் :) சோயா சாஸ், கெட்சப் சேர்த்து பண்ணியிருக்கீங்க. மாறுபட்ட சுவைல இருக்கும். திங்கள் செய்து டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் வனி :)நீங்க சிக்கன் ப்ரியையா? மட்டன் குறிப்பு அவ்வளவா வர்றதில்லையே அதுக்கு கேட்டேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா அருமையா செய்துருக்கீங்க... அவசியம் செய்து பார்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஐயோ வனி அக்கா ரொம்ப சூப்பரா இருக்கு. பட் நான் சிக்கன் சாப்பிடமாட்டேன். இத மட்டன் ல ட்ரை பன்னலாமா?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வனி,

indo chinese குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டீங்களா? எப்படி இருந்ததுன்னு அவசியம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்தும் பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பார்த்து அவசியம் சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நேற்று திங்கள்... செய்தீங்களா ;) செய்துட்டு சொல்லுங்க பிடிச்சுதான்னு. நான் சிக்கன் தான் அதிகம் விரும்புவேன். அதுக்காக மட்டன் சாப்பிடாம இல்லை... அசைவம் ரொம்ப விருப்பம்.. முதல்ல சிக்கன், அடுத்து மீன், அப்பறம் தான் மட்டன் ;) மட்டன் அவருக்கு பிடிக்காது, அதனால் அங்க இருக்கும் போது வாங்கி சமைக்க மாட்டேன். அதனால் தான் குறிப்பு வருவதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. மட்டன் இதுக்கு ஒத்து வராது ரேவதி :( கறியில் சுவை வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பார்த்து மறக்காம சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba nalla irukku akka. thanks ippdi oru nalla samiyal sonnethuku.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா