மட்டன் பிரியாணி 2

தேதி: October 27, 2012

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

பாஸ்மதி ரைஸ் - 2 கப்(1/2 மணி நேரம் ஊறவைக்கவும்)
மட்டன் - 1/2 கிலோ
நெய் - 50 கிராம்
வெங்காயம் - 1/4 கிலோ (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1/4 கிலோ (நீளமாக நறுக்கியது)
வத்தல் தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கருவா, கிராம்பு, ஏலம் - தேவைக்கு
இஞ்சி,பூண்டு - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
ரம்பை இலை - சிறிது
கொத்தமல்லி, புதினா - தேவைக்கு
கசகசா - சிறிது
பாதம் - 10
முந்திரி - 10(பாதாம்,முந்திரி, கசகசா அரைத்தது)
வெங்காயம் - சிறிது(நீளமாக நறுக்கி பொரித்தது)
முந்திரி, கிஸ்மிஸ் (பொரித்தது)தேவைக்கு
ரோஸ் எசன்ஸ் - சிறிது


 

முதலில் கறியை கழுவி அதில் 2 மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு, 1 மேசைக்கரண்டி வத்தல் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தேவைக்கு ஊற்றி வேகவைத்து தனியாக வைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து நெய்யை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை வாசனை போனதும்,கருவா,ஏலம்,கிராம்பு போட்டு வதக்கி,ரம்பை இலை சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வத்தல் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் வேகவைத்த கறியில் உள்ள தண்ணீரை ஊற்றி நன்கு வதக்கிய பின்பு கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த கறியை சேர்த்து கிளறி, தீயை குறைத்து வைத்து அரைத்து வைத்த பாதாம், முந்திரி,கசகசா பேஸ்ட் சேர்த்து கிளறவும்.

பின் அரிசியை கழுவி ஊறவைத்த 2 கப் தண்ணீரை அரிசியில் இருந்து எடுத்து கிரேவியில் ஊற்றி,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

அரிசி வெந்து தண்ணீர் வற்றியதும், சிறிது எசன்ஸ் சுற்றி வர ஊற்றி நெய்யில் பொரித்த முந்திரி, கிஸ்மிஸ்,பொரித்த வெங்காயத்தை மேலே தூவி மூடி போட்டு தீயை குறைத்து வைத்து தம் போடவும்.

ஒரு பேனை அடுப்பில் வைத்து அதில் பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி மேல் ஒரு உரலை வைத்து விடவும். பிரியாணி நன்கு தம் ஆன பின் மூடியை திறந்து லேசாக கிளறி பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றிவிடவும் கம கமக்கும் பிரியாணி தயார்.


அரிசியை சேர்த்த பின் அடிக்கடி கிளறினால் அரிசி உடைந்து பிரியாணி குழைந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா மேடம்,

அருமையான குறிப்பு.

உங்களுடைய சுவைமிகு கறிகஞ்சியும், மஞ்சள் வாடாவும் செய்துபார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.அந்தக் குறிப்புகளின் கீழ் சில சந்தேகங்கள் கேட்டுள்ளோம்.
உங்களின் விளக்கங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

மிகுந்த நன்றி.