உளுந்து லட்டு

தேதி: October 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

 

உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 4 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - சிறிது
முந்திரி - சிறிது


 

தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உளுந்தை வெறும் கடாயில் சிறு தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்யவும்.
பொடி செய்த சர்க்கரை, ஏலக்காயை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்த உளுந்தை மிக்சியில் நைசாக அரைக்கவும்
அரைத்த உளுந்தை சர்க்கரை, ஏலக்காய் பெளலில் சேர்க்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு திராட்சை, முந்திரியை வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றை பெளலில் சேர்க்கவும்.
நெய்யை சூடு செய்து சிறிது சிறிதாக பெளலில் சேர்த்து நெய் சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
திராட்சை சேர்த்து சுவையான, சத்தான உளுந்து லட்டு தயார்.

இது ரவா லட்டு போன்று இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை செய்வதும் மிக எளிது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கும் பிடிச்சிருக்கு. செய்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் வருவேன்.

‍- இமா க்றிஸ்

எனது முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இமா அம்மா: கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

சுலபமா செய்ய கூடிய சுவையான லட்டு...அவசியம் செய்ய போறேன்...
பல நூறு குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...

சுவையான,சத்துள்ள குறிப்பு இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள். ரேவதி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஷமீலா: அவசியம் செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள். வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி...

ஹலீலா: வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரொம்ப நல்லா செய்து இருக்கிங்க,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரேவ்ஸ், இது உங்களோட முதல் குறிப்பா? இனிப்பான தொடக்கம் தான். லட்டு குறிப்பு எளிமையாகவும், நொடியில் செய்யக்கூடியதாகவும், சத்தானதாகவும் உள்ளது. இந்த வாரத்திலேயே செய்துடறேன் ;) வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்புள்ள ரேவதி அக்கா,
குறிப்பு கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்..............
என்னிடம் தோல் உளுந்துதான் உள்ளது அதில் செய்யலாமா????????

by,
AnuGopi,
Be happy and Make others happy........

ரேவதி,
சத்தான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பார்க்க ரொம்ப நல்லா இருக்கு

சத்தான குறிப்பு. குட்டீஸ்க்கு நல்ல ப்ரோட்டீன் கிடைக்கும், கூடவே உளுந்து எடை கூடும். டேஸ்டி ரெசிபி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

(தாமதமான ரிப்ளைக்கு மன்னிக்கவும். நேற்று நெட் கனக்சன் ப்ராப்ளம்.)

முசி: வாழ்த்திற்கு நன்றி தோழி முசி.

கல்பனா சரவணகுமார்: ஆமாம் தோழி. இது தான் எனது முதல் குறிப்பு. கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.

அனுகோபி: நன்றி அனு. தோல் உளுந்தில் செய்தால் கசப்பாக இருக்கும். அதனால் வெள்ளை உளுந்திலேயே ட்ரை பண்ணி பாருங்க. வாழ்த்திற்கு நன்றி தோழி.

கவிதா: வாழ்த்திற்கு நன்றி தோழி.

தர்ஷினி: ம் செஞ்சு சாபிட்டு பாருங்க இத விட சூப்பரா இருக்கும். நன்றி.

வனி டீச்சர்: ம் சத்தான டேஸ்டி & ஹெல்தி ரெசிபி தான். ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க டீச்சர்.. ஹி ஹி ஹி... வாழ்த்திற்கு நன்றி தோழி.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரேவதி இது உங்களோட முதல் குறிப்பா? ஆரம்பமே அசத்தலா சத்துள்ள குறிப்பா கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம் அருட்செல்வி. இது தான் என் முதல் குறிப்பு. வாழ்த்திற்கு நன்றி தோழி.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)