help me

haiஎன் மகனுக்கு 1 வருடம் 2 மாதம் ஆகிரது. அவன் நடக்கும் போது ஒரு கால் விரல் நேரகாக வருகிரது ஆனால் ஒரு கால் விரல் வலைத்து நடக்கிரான். பார்பவர்கல் எல்லாம் என்ன கால் விரல் இப்படி இருக்கிரது என்ரு கேர்கிரார்கல்.

கால்கள் சற்று வெளிப்பக்கம் நோக்கி இருப்பதுதான் சாதாரணம். மற்றவர்கள் கவனத்தைக் கவரும் அளவுக்கு வளைந்து இருக்குமானால் ஒரு முறை உங்கள் வைத்தியரைக் கலந்தாலோசியுங்கள். நேராக்க ஏதாவது ஆலோசனைகள், பயிற்சிகள் சொல்வார்கள். பிள்ளைக்குச் சிரமமில்லாவிட்டால் விட்டுவிடவும் கூடும்.

என் சின்னவருக்கு நீங்கள் சொல்வது போல் (நான் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால்) இருந்தது. அதைக் கவனித்தது வீட்டார் மட்டும்தான். வேறு யார் கண்ணிலும் படவில்லை. அவருக்கு எந்தத் தொந்தரவும் இருக்கவில்லை. பிறகு நாங்களே மறந்து விட்டோம். க்ரிக்கட்டில் அபார ஈடுபாடு. மும்முரமாக விளையாட ஆரம்பித்ததும் குறைப்பட ஆரம்பித்தார். கால் விரலைத் தானே மிதித்துக் கொள்வார். ஒரு முறை விழுந்துவிட்டார். காலைச் சரியாக வைக்க முயன்று வேறு பிரச்சினைகளைத் தேடிக்கொள்கிறார். பெரிதாகவென்று இல்லாவிட்டாலும் பாதம் அவருக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கிறது இன்றுவரை. அடிக்கடி சிகிச்சைக்குப் போக வேண்டி வருகிறது. அவரால் கிரிக்கட்டை மட்டும் விட முடியவில்லை. :)

பயப்பட வேண்டியது இல்லை. ஆனாலும் கவனிக்காமல் விட வேண்டாம். எதையும் ஆரம்பத்திலேயே திருத்தி விடுவது சுலபம் அல்லவா?
`````````````
'help me' என்று இருக்கும் தலைப்பைக் கேள்விக்குப் பொருத்தமாக மாற்றி விட்டால் பிற்காலத்தில் இதே விடயம் தொடர்பாகத் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி சகோதரி

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்