ஓரியண்டல் ரைஸ்

தேதி: November 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பாஸ்மதி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கலங்கல் இஞ்சி (அ) இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 7 பல்
கார்ன், பச்சை பட்டாணி கலவை - கால் கப்
லைட் சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
ஸ்டிர் ப்ரை சாஸ் - கால் தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - 3 தேக்கரண்டி
வெங்காய தாள் - சிறிது
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
மட்டன் கீமா - 50 கிராம்
உப்பு, மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், நெய் - தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி நறுக்கவும். காய்களை நீளமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி கலவை சூடானதும் புதினா, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காரட், பீன்ஸ், பட்டாணி, மட்டன் கீமா, கார்ன் சேர்த்து வதக்கவும்.
பின்பு சோயா சாஸ், ஸ்டிர் ப்ரை சாஸ், கெட்டி தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அடுப்பை சிறுதீயில் வைத்து பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.
பின்பு மிளகு தூள், தேவைக்கு ஏற்ப உப்பு, தண்ணீர், கொத்தமல்லி தூவி கிளறி வேக வைக்கவும்.
வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி சேர்த்து சூடாக பரிமாறவும்.

இந்தியச் சுவை வேண்டுமெனில் கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா சேர்க்கலாம். தண்ணீருக்கு பதில் காய்கறி அல்லது மாமிச ஸ்டாக் சேர்த்து செய்யலாம். சிக்கன், உடைத்த சோயா சன்க் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ஓரியண்டல் ரைஸ்,.கண்கவர் ரைஸ்,அருமையாக செய்து இருக்கீங்க.கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஈசியான கலர்புல் குறிப்பு.படங்கள் அழகா வந்திருக்கு வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

ரேவதி,
வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி

முசி,
பதிவிற்கும்,வருகைக்கும் நன்றி..

ஹளிலா,
வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, எப்படி இருக்கீங்க? ரொம்பவே நாளாச்சு.. உங்க குறிப்புகள் பக்கம் வந்து ;(

கலர்புல்லான காய்கறிகளின் கூட்டணியில் அசத்தலான குறிப்பு. காய்கறிகளை நீள நீளமாக வெட்டியிருப்பது மிகவும் நன்றாக உள்ளது. கலங்கல் இஞ்சி என்றால் என்ன பா? நார்மல் இஞ்சி தானோ? நிறைய அயிட்டங்கள் இருப்பது போன்று தோன்றினாலும், கடைசியாக அந்த பவுலை பார்த்ததும் எல்லாம் மறந்து பசி தான் பறக்குது. கலரும், சுவையும் போட்டி போடும்னு நினைக்கறேன். ஒருநாள் செய்துட்டு சொல்றேன் பா :) வாழ்த்துக்கள் கவி.. ஓரியண்டல் பெயர்க்காரணம் முடிந்தால் சொல்லுங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆரோக்கியமான அழகான உணவு :) கடைசி படம் ப்ரெசண்ட் பண்ணிருக்க விதம்... சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப கலர்புல்லா இருக்கு.... பார்த்தாலே சாப்பிடன்னு தோணுது... :)
நிறைய காய்கறிகள் போட்டு ரொம்ப சத்தா செய்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

கவி வண்ணமயமா இருக்குப்பா, பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது.
மிக அருமையான குறிப்பை கொடுத்த உங்களுக்கு நன்றி+வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Hai kavitha!..beautiful presentation..paarkradhuku colourfula iruku..healthyum kuda! Vazhthukkal...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கல்பனா,

1.கலங்கல் இஞ்சி என்பது இஞ்சி rhizome family Zingiberaceae குடும்பத்தை சேர்ந்தது.

தாய்,வியெட்நாம் மற்றும் southeastern உணவுகளில் இஞ்சிக்கு பதில் இதை பயன்படுத்துவாங்க.இஞ்சி போலவே தான் சுவை தரும்.இன்னும் அதிக காரம்,நெடி இருக்கும்

2.சரியான அகராதி பொருள்:

adjective form:
கிழக்கிந்திய கலாச்சாரத்தை ஒட்டியது..

கிழக்கிந்திய நாடுகள்

விலைமதிப்பு இல்லாத..

noun:
கிழக்கிந்தியன்(இப்படி சொல்வது இங்கே offensive)

லத்தின் மொழியில் உள்ள oriens (பொருள்:கிழக்கு)என்ற வார்த்தையில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்
இங்கு உள்ள வியட்நாம் மற்றும் தாய் உணவகங்களில் கிடைக்கும் உணவு இது.

என்னால் முடிந்தவரை பதில் கூறி இருக்கிறேன்.மேலும் கூகிள் செய்து எனக்கு தெரிவிக்கவும்.

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தீபா,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருட்செல்வி,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சம்னாஸ்,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி .

என்றும் அன்புடன்,
கவிதா

ஓரியண்டல் ரைஸ் செய்தேன்.சிக்கனில் செய்தேன்.நல்ல சுவை.வாழ்த்துக்கள் :)

Kalai