கொள்ளுப்பால்

தேதி: November 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

முளைகட்டிய - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1/2 கைப்பிடி


 

முளைகட்டிய கொள்ளும் தேங்காய் துருவலும் சேர்த்து 1/4 கப் தண்ணீர் விட்டு கட்டியாக அரைத்து எடுக்கவும்
இதனை வடிகட்டி பாலெடுத்து பருகவும்


இதஒரு நபருக்கு இந்த அளவில் மட்டும் செய்து தினமும் பருகவும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது.உடல் இளைக்க அருமருந்து,கைகால் மரத்து போதல்,வாதத்தினால் உண்டாகும் கை கால் தளர்ச்சி,முக வாதம் வந்தவர்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து பலன் தரும் இது அனுபவத்தில் கண்ட உண்மை.விளையாடுகளில் ஈடுபடும் குழந்தைகளுக்கு குடிக்க வைத்து அனுப்பினால் சளைக்காமல் மணிக்கணக்கில் ஓடியாடலாம்.குழந்தை எதிர்பார்த்திருப்பவர்கள் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நலம்.இது உடம்புக்கு சூடு அதனால் நிறைய மோர் குடிக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்காய் பால் சேர்ப்பதால் மந்தமாக இருக்காதா..? அதாவது தூக்கம் அதிகம் வருமே ..!! :-) . தேங்காய் பால் குழம்பு சாப்பிட்டால் எனக்கு ஓவர் தூக்கமா வரும் அதுக்காக கேட்டேன் :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

கொள்ளுப்பால் இவ்வளவு பயன்களா? நல்ல மருந்து, பகிர்வுக்கு நன்றிங்க :-)

நட்புடன்
குணா

தேங்காய்க்கே உங்களுக்கு மந்தமா ஜெய்லானி ஹைய்யோ ஹைய்யோ.நாங்கல்லாம் தூக்கமாத்திரைக்கே தூங்காத பரம்பரை அதனால நீங்க கொள்ளுபாலே சாப்பிடாதீங்கன்னு தான் அட்வைஸ் பண்ணுவேன்.

குணா ஆமாம்..எங்கள் வீட்டில் முகவாதம் வந்தவங்களுக்கு நர்ஸ் சொல்லி தந்த மருந்து அப்போ தான் இதன் பலன் புரிந்தது

UK யில் கடுமையான குளிர்,எனக்கு கால் அடிக்கடி மறத்து போய் விடுகிறது, உங்களின் கொள்ளுப் பால் குடித்தேன்,நல்ல பலன் தெரிந்தது, பயனுள்ள குறிப்பிற்க்கு மிக்க நன்றி.

வனி ரொம்ப ரொம்ப சந்தோஷம்...நிச்சயமா அது மாதிரி ப்ரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்..உடம்பு சூடு ஆகிடாம பாத்துக்குங்க