வெந்தய பர்ஃபி

தேதி: November 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயம் - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 பின்ச்
வெல்லப் பாகு - 2 கப்
அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 தேங்காயின் பால்


 

வெந்தயத்தை முந்தின நாள் இரவே ஊறவைத்து குக்கரில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நாலைந்து விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்
தேங்காயில் 4 கப் தண்ணீர் சேர்த்து பாலெடுத்துக் கொள்ளவும்
வேக வைத்த வெந்தயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு பெரிய உருளி அல்லது வாயகன்ற நான் ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த வெந்தயம் மற்றும் இதற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
இது கொதித்து திக்காகி வற்றி ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது இறக்கி நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சூடு ஆறியதும் துண்டங்கள் போடலாம்


இதனை பிள்ளை பெற்றவர்களுக்கு நாட்பது நாள் கொடுப்பார்கள்..சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா!வெந்தயத்தில் பர்பிகூடவா செய்யலாம்!வர வர உங்க திறமைக்கு அளவே இல்லாமல் போகுது:)கசப்பு தன்மை தெரியுமாக்கா....?

SSaifudeen:)