adhirchi

unga ellarukkum teriyuma aaha enna rusinu cookery show nadathina brilliant jacob heart attack la irandhutaru romba adhirchiya irundathu enakku

Eppanga jacob sir irandharu..ungaluku epdi teriyum nisha madam!

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

naan dinakaran online news la parten ppa news terichona rombavum kastama irundhuchi inda kalathula onnum solla mudilappa yarukku enna eppo nadakumnu 37 vayasuthanapa

Ennala namba kuda mudiyala pa!..nalla program nadathuvaru! Ivlo chinna vayasu vera

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

தோழிகளே எனக்கும் இந்த செய்தி கேள்வி பட்டதுலிருந்து மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருந்தது.சின்ன பசங்கள்ட்ட ரொம்ப தன்மையா நடந்துப்பாரு.

உலகத்தை நினைத்தால் ரொம்ப பயங்கரமா இருக்கு.யாருக்கு எப்போ என்னா நடகும்ன்னு சொல்ல முடியலை.

SSaifudeen:)

Indha kaalathla eppa enna disease varum nae terila..evlo sinna vayasula kuda heart attack lam varudhu

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

நல்ல மனுஷங்களுக்கு தான் இப்படி ஆகும்.போய் தொலையட்டும்னு சாபம் வாங்கி கட்டுறவ்ங்க பாருங்க திடகாத்ரமா இருப்பாங்க.வருத்தமாக இருந்தது

என்னாலும் நம்பவே முடியல.வருத்தமா போச்சு

ஆமாம்... நானும்கூட படிச்சேன். 38 வயதில் இப்படி??! ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. பாவம், நல்ல தன்மையான‌ மனிதர். அவர் நடத்திய சமையல் நிகழ்ச்சி, புதுமையாக, குழந்தைகளையும் சமையலில் ஈடுபாடு கொள்ளும் வகையில் இருந்த‌து. போன வருஷம்னு நினைக்கிறேன், அவர் ஒரு கின்னஸ் சாதனைகூட நடத்தினார் என்று படிச்சிருக்கேன்.

அன்புடன்
சுஸ்ரீ

என்னால் இந்த நிமிஷம் வரை இவரின் இறப்பை நம்ப முடியவில்லை. நேற்று பேஸ்புக்கில் தான் இந்த செய்தியை படித்து உறைந்தே போனேன். போன அவள் விகடன் புத்தகத்தில் இவரின் புதிய தொடர் கிச்சன் கிளீனிக் தொடங்கியது. அந்த பக்கத்தை கூட பேவரட்ஸில் சேவ் பண்ணி வைத்திருந்தேன். ஆஹா.. பரவாயில்லை இனி அவள் விகடன் புக்கில் புது புது சமையல் குறிப்புகளை பார்க்கலாம் என்று சந்தோஷமாக இருந்த வேலையில் நேற்று படித்த இவரின் மரண செய்தி பெரும் அதிர்ச்சியை தந்தது ;( சன் டிவியில் இவர் தந்த சமையல் புரோக்ராமை விடாமல் பார்ப்பேன். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று அந்த இடத்தோடு ஒன்றி இவர் தரும் அந்த சமையல் புரோக்ராம் மிக மிக அருமையாகவும், சமையல் புதுமையோடு வித்தியாசத்தை கலந்ததாகவும் இருக்கும்.

நன்கு ஆண்டு அனுபவித்து வாழ்ந்து பேர,பேத்திகளை பார்த்த வயதானவர்களுக்கே இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் போது, இன்னும் வாழவே தொடங்காத இவரின் இளவயது மரணம் ஜீரணிக்க முடியாத ஒன்று.

நல்ல மனிதரையும், அற்புதமான ஒரு சமையல் கலைஞரையும் இழந்தது நமக்கு ஒரு பேரிழப்பே.. அவரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திப்போம். இவரை இழந்து மீளா துயரில் இருக்கும் அவர் குடும்பத்தார்க்கு மன உறுதியை கடவுள் அருளட்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜேக்கப் அவர்களின் மரணம் பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய சமையல் நிகழ்ச்சிகள் மிக அருமையாக இருக்கும். நினைத்தே பார்க்க முடியாத மரணம் என்பது இதுதானோ.

திருமதி ஹேமாகருணாகரன் அவர்கள் கோவையின் அஸிடெண்ட் கமிஷனர் அவருடைய மரணம் கோவை மக்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும். 2குழந்தைகளுக்கு தாயாகவும் கோவை மக்களின் பாதுகாவலராகவும் இருந்த வீரப்பெண்மணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

இந்த இரண்டு உள்ளங்களின் குடும்பத்தினருக்கும் மனதிடத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்