Almost 4 year old. Bed wetting everyday..

My daughter is almost 4. She was potty trained when she was 21/2 yrs age.. She used to wear pullups in the night until last month.. I need to take her to the bathtoom in the middle of the night.. If I don't do that She will wet the bed... She is a very deep sleeper.. Even with wet clothes she will be nicely sleeping. Till now she never woke me up for the bathroom.. Any suggestions???

இதில் தப்பு என்னங்க இருக்கு... 4 வயசு தானே :) இதுவரை போட்டே இருந்ததால் இரவிலும் போய் பழகிருப்பாங்க. நீங்க இப்ப தானே இரவில் போடுவதை நிறுத்தி இருக்கீங்க... கொஞ்ச நாளில் இந்த பழக்கம் போயிடும். பயப்படாதீங்க. அதுவரை நீங்க தான் த்னம் எழுப்பி விட்டு போக சொல்லணும். இந்த வயதில் எல்லா குழந்தையும் அப்படி தான். ஒரு சில குழந்தைகள் தான் கண்ட்ரோல்டா இருப்பாங்க. முடிஞ்சா குயிக் ட்ரை மாதிரி எதாவது மேட் போட்டு படுக்க வைங்க. ஈரம் உடனே காயும். பெட்டும் பாழாகாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

My other friends kids (same age) are waking up their mom at night.. My daughter never woke me up.. Thats y little worried.. I put rubber sheet for bed.. My only worry is because she was on diaper for long time, may be she will never wake me up in the night.. :)-
Unga answer konjam aaruthala iruku...

மைல் ஸ்டோன் என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு மாதிரி ,குழந்தைக்கு குழந்தை வேறு படும். தயவு செய்து மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு கவலைப் பட வேண்டாம். மேலும் Blader control என்பது ஒரு மாதத்திற்குள்ளும் வரும் ,சிலருக்கு ஒரு வருடத்திலோ , அதற்குள்ளேயோ வரலாம்.ஒரு மாதம் தானே ஆகிறது , மனம் தளராமல் தொடருங்கள்.

இங்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவு கொடுக்க வேண்டும், 7 மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும் ,7 மணிக்குப் பின் எந்த திரவவவும் கொடுப்பதில்லை , இரவு நாங்கள் தூங்கும் முன் 10 மணி அல்லது 11 மணிக்கு ஒரு முறை மட்டும் எழுப்பி இருக்க விடுவோம். என் குழந்தைக்கு 2 வயதில் பகல்toilet training ம் 3 வயதில் இரவு training ம் பழக்கப் படுத்தினேன், இரவில் முதல் 6 மாதம் வரை நாங்கள் இதை செய்தோம் ,அதன் பின் விட்டு விட்டோம் ,இப்போது இரவில் டாய்லேட் போக வெண்டுமென்றால் அவளாகவே எழும்பி விடுவாள்.

எனக்கு தெரிந்து ஏழு ,எட்டு வயது உள்ள எத்தனையோ பிள்ளைகள் இரவில் இன்னும் Pull ups போட்டுக் கொண்டுதான் படுக்கிறார்கள்.

6 மணிக்கு மேல் ஜுஸ் ,தண்ணீர் வேண்டாம் ,பால் கொடுக்கலாம்.சில நேரங்களில் இரவு பார்ட்டிகளுக்கு செல்லும் போது என் மகள் ஜுஸை குடித்து வயிற்றை நிரப்பி விடியற்காலையில் படுக்கையை நனைப்பதுண்டு.

மனம் தளர வேண்டாம்.

உங்கள் நட்பு வட்டாரத்தில் எதைப் பற்றியாவது ஆலோசனை கேட்கும் போது உங்களை தைரியப் படுத்தும் வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், Discourage செய்யும் விஷயங்களை விட்டு விடுங்கள்.நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் என் மகளுக்கு டாய்லெட் ட்ரைனிங் கொடுத்த பொழுது சிலர் ஏன் இவ்வளவு லேட்டாக கொடுக்கிறாய் என்றார்கள்,இன்னும் சிலர் இப்பவே என்ன அவசரம்?, நாங்கள் எல்லாம் 5 வயதில் தான் கொடுத்தோம் என்றார்கள்.

சிலர் நமக்கு எது ஒத்து வரவில்லையோ , எது நமக்கு பலவீனமோ அதை வைத்து அவர்கள் பெருமை பட்டுக் கொள்வார்கள்.தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மதிவதனி, வாணி சொல்வது போல உங்கள் பிள்ளை மற்ற பிள்ளைகள் போல இல்லையே என்று நினைப்பதை முதலில் விடுங்கள். எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. என் ஒன்றரை வயது மகள் இரவில் என்னிடம் எழுந்து பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்லுவாள் சில நேரம் பெட்டிலேயே போய்விடுவாள் அதற்காக நான் வருத்தப்படுவதா சந்தோஷப்படுவதா சொல்லுங்க? குழந்தைகள்னா அப்படி இப்படிதான் இருப்பாங்க. இருந்தாலும் முதலில் நீங்கள்தான் இரவில் எழுந்து போக வைக்க வேண்டும் அவள் எழுப்பட்டும் என்று நீங்கள் தூங்கிவிட்டால் அவள் எப்படி பழகுவது? முயற்சியை கை விடாதீங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Unga rendu perukum romba thanks.. I am not worried much.. I just wanted get opinion from different people.. Inimel naan kavalaiye pada maaten.. I got more confidence now:)- Even in daytime she drinks more water and goto bathroom more frequently. which is really a good habit.. So I will just give her some more time...

குழந்தைக்கு நீர் ரொம்ப முக்கியம். அதனால் நீங்க அதெல்லாம் கொடுப்பதை தொடருங்க. 2 - 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி விடுங்க. சரியான நேரம் பழகிக்கங்க. அப்போ அதே டைம் ரெகுலரா அவங்களுக்கே முழிப்பு வந்துடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai dear,
pls give 1spoon honey every day night before bed , its 100% true

manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்