சேமியா கிச்சடி

தேதி: November 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

 

சேமியா - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
முட்டை - 2
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சேமியாவை போட்டு வேக வைத்து வடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், உப்பு, கேரட் சேர்த்து கிளறி விடவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். வடித்து வைத்திருக்கும் சேமியாவை அதில் போட்டு கிளறி விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
முட்டையை கொத்தி அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும். மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 2 நிமிடம் வைக்கவும். பிறகு மூடியை திறந்து மல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான சேமியா கிச்சடி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
நல்லா செஞ்சு இருக்கிங்க...நானும் இப்படியே தான் செய்வேன் ஆனால் கோழி சேர்ப்பேன் :)

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா நீங்களும் இப்படிதான் செய்வீங்களா...ரொம்ப சந்தோஷம்மா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி அருட்செல்வி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா உங்கள் சேமியா கிச்சடியின் சுவை ரொம்ப நல்லா இருந்தது... செய்தும் பார்த்துட்டேன் :)

அன்புடன்,
லலிதா

ஹலிலா சூப்பரா இருக்குங்க உங்க டிஸ்.. நான் இதுவரை செய்தது இல்லை.. இன்னைக்கு நைட் இதை தான் செய்ய போறேன்.. குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பரா இருக்கு.ஹலிலா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹளிலா,
நானும் பாஸ்தாவில் இது போலே செய்வதுண்டு..
சேமியாவில் அழகா செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

செய்து பாத்தாச்சா. ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சொன்னதற்க்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி ரேவுதய். செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி கவிதா. அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)