tube test & laproscope

tube test laproscope இரண்டும் ஒன்றுதானா? வெவ்வேறா? விளக்கம் தருக தோழிகளே
தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் கூறுங்கள்.

லேப்ராஸ்கோப்பி என்பது ஒரு , ஸ்கோப்(Scope) போன்ற ஒரு கருவியில் சிறிய கேமராவை பொருத்தி கருப்பை உறுப்புகளையோ ,அல்லது உடலுக்குள் உள்ள வேறு எந்த உறுப்புக்களையோ சோதனை செய்யும் ஒரு செய்முறை (Procedure )

டியுப் டெஸ்டிங் என்றால் ,லெப்ராஸ்கோப்பி மூலம் கருப்பையின் குழாய்களை (Fallopian tubes ) பார்வையிட்டு ,அடைப்பு இருப்பின் அதை சுத்தம் செய்வது.

எப்படி இருக்கீங்க?நான் டியுப் டெஸ்ட் பண்ணி இருக்கேன்ப்பா.ஆனால் லேப்ராஸ்கோப் பண்ணினது கிடையாது.ஏன் டாக்டர் உங்களை டியுப் டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்களா gowri.

SSaifudeen:)

Hi Gowri,
Tube testing என்பது falopian tubeல் அடைப்புகள் இருக்கிறதா என்பதையும்,அடைப்புகள் இருந்தால் சில நேரங்களில் சரியாகவும் செய்யும்.

வாணி உங்க விளக்கத்திற்கு நன்றிபா நல்லா புரிந்தது

நலம் ஷமிஹா நீங்க எப்டி இருக்கிங்க ஆமாம்பா டாக்டர் எனக்கு இந்த மாதம் கன்சீவ் ஆகலனா ட்யூப் டெஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க, அப்படியா நீங்க ப்ண்ணிருக்கிங்களா வலி இருக்குமா எவ்ளோ நேரம் பண்ணுவாங்க சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குபா

விளக்கம் தந்ததுக்கு நன்றி முத்து

டியுப் டெஸ்ட் செய்யும் போது பொருக்கக் கூடிய வலி தான் இருக்கும்.பயப்பட தேவை இல்லை.

எல்லாம் நன்மைக்கே

Gowri பயப்பட தேவை இல்லை நானும் பன்னி இருக்கிறேன்.வலி ரோம்ப இருக்காது தாங்க கூடியது தான்.20 நிமிடத்திற்குள் முடிந்துவிடும்.முதலில் ஊசி போடுவாங்க அதனால் வலி ரோம்ப இருக்காது.ரீலக்சா இருக்கனும் பன்னும் போது.

கௌரி நான் நல்லா இருக்கேன்.ஒன்னும் பயப்படாதீங்க?அது செய்ய சும்மா கொஞ்ச நேரம் தான் ஆகும்.நான் பயத்தில் இடுப்பை தூக்கி தூக்கிகிட்டு இருந்தேன் டாக்டர் ஃப்ரியா விட சொன்னாங்க அப்பத்தான் சரியா தெரியும்ன்னு.அதற்க்கப்புறம் கொஞ்ச நேரம் படுத்து கிடக்க சொன்னாங்க.

அல்ஹம்துலில்லாஹ் நார்மலா தான் இருக்குன்னு சொன்னாங்க.ஆனால் எனக்கு பண்ணின டாக்டர் சொன்னாங்க டியுப் டெஸ்ட் செய்த உடனே கை கொஞ்சம் கடுக்கும்ன்னு சொன்னாங்க எனக்கு சரியான கடுப்பா இருந்தது அப்படியே வெட்டி போடலாம் போல் இருந்தது.காலைல எப்போதும் போல் நார்மல் ஆயிட்டேன்.

ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி சோ நீங்க பயப்படாம போக கண்டிப்பா நல்ல ரிசல்ட் வரும்:)

SSaifudeen:)

என்னை விட உங்க அண்ணா தான் ரொம்ப பயந்துட்டாங்க.அந்த டாக்டர் என்னை ஆபரேசன் தியேட்டர் உள்ள வச்சி தான் டியுப் டெஸ்ட் பண்ணுனாங்க.நான் உள்ளே போகும் போது எங்க தலைவருக்கு கண்ணுலாம் கலங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள்.நமக்கு குழந்தை இல்லைன்னாலும் பரவா இல்லை உனக்கு இந்த வேதனை எல்லாம் வேண்டாம் வ போயிடலாம்ன்னு நிக்குறாங்க.இவங்க குழந்தை தனத்தை நினைத்து சிரிக்குறதா...இவங்க பாசத்தை பார்த்து அழுரதான்னே தெரியலை அப்போ.

ஒரு வழியா அவங்கலை உட்கார வச்சிட்டு நான் உள்ளே போயிட்டேன்.இப்படி உயிரே வச்சிருக்கும் இவருக்காக எப்படி கஷ்ட்டபட்டாவது ஒரு உயிரை கொடுக்கணும் என்ற மனநிலையோடு அப்படியே அமைதியா படுத்து கிடந்தேன்:)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்