காராமணி குழம்பு

தேதி: November 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

முளைக்கட்டிய வெள்ளை காராமணி - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
கத்தரி, வாழை, உருளை, முருங்கை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
வேக வைத்த துவரம் பருப்பு - கால் கப்
தாளிக்க:
எண்ணெய், கடுகு, சீரகம், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம்
கறிவேப்பிலை கொத்தமல்லி


 

காய்கள், வெங்காயம், காராமணி, தக்காளி, சாம்பார் பொடி, 2 பல் பூண்டு சேர்த்து வேக விடவும்.
பாதி வெந்ததும் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும்.
புளி சேர்த்து கொதி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
காய்கள் வெந்து வரும் போது, துவரம் பருப்பை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, நசுக்கிய மீதி பூண்டு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை குழம்பில் சேர்த்து, கொத்தமல்லி தூவி ஒரு கொதி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
மேலும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

சாம்பார் பொடி குறிப்பிற்கு இங்கு சொடுக்கவும் : <a href="/tamil/node/24050"> சாம்பார் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா.... பாத்திரமும் பதார்த்தமும் ஊரை ஞாபகப்படுத்துது. எங்க வீட்டு ஜோடி காராமணியும் கத்தரிக்காயும் தான்.மீதி உள்ளவங்களையும் சேர்த்து செய்துபார்க்கனும். நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

Jayanthi

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

Hai kavitha..nalla healthyana dish..kadal kadandhu vasithaalum mann sattiyai payan paduthi iruppadhu paaraatta thakkadhu !!! vazhthukkal kavi...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்,குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஜெயந்தி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷம்னாஸ்,

அது மண் சட்டியில்லை ..பைரெக்ஸ் தான்..
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் காராமணி குழம்பு ரொம்ப நல்லா இருக்கு. படங்களும் அழகு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருமையான படங்கள்... சத்தான குழம்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அசத்தல் குழம்பு..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹளிலா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹே ... ஹே.... மரக்கறி குழம்பு ....!!! யம்மி ... பாராட்டும் வாழ்த்துகளும் . ஒரு சிறு சந்தேகம்.
காராமணி என்பது எப்படி இருக்கும் என்று கூறுவீர்களா? நன்றி.

ஈஸ்வரன்

பதில் தரவில்லை

நல்ல ஆரோக்கியமான சமையல்.சாதமும் சேர்த்து தந்தாள் அப்படியே எடுத்து சாப்பிட்டுவிடுவேன்:)

SSaifudeen:)

ஈஸ்வரன்,

காராமணி ஒருவகை பருப்பு.இது இரண்டு நிறங்களில் கிடைக்கும்.ஒன்று ivory கலரில் நடுவே கண் போலே,கருப்பு நிறத்தில் இருக்கும்.
மற்றொன்று சிகப்பு நிறத்தில் இருக்கும்.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

shameeha,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா