Help Me sisters

Ennaku 20 vathu varam conceive, doctor enaku thairaid irukunu sollirukanga & hemoglobin point 6.level a irukunu sollirukanga, enna panna thairaid problem theerum, please sisters ennaku help pannunga, please advice me sisters

அகர் அகர் (கடல் பாசி ) உணவில் அடிக்கடி சேத்துக்கொள்ளுங்க. அது குளிர்ச்சி பாத்து சாப்பிடுங்க தைராய்டுக்கு நல்லது.
பீட்ருட் பச்சையா அரைச்சி அதுக்குட சிறிது எலுமிச்சைப்பழம் சேர்த்து வடிகட்டிக்குடிங்க. தினமும் குடிங்க கண்டிப்பா ஹீமோக்லோபின் ஏறும்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

THANKS SISTER

தோழி சொன்னவற்றை பின் பற்றுங்கள் ,அத்துடன் உங்கள் டாக்டரின் ஆலோசனைப் படி ஹீமோகுளோபின் அதிகரிக்க இரும்பு சத்துள்ள ஊசி போட்டுக் கொள்ளூங்கள் ,ஏனென்றால் ஹீமோகுளோபின் 6 அளவு என்பது மிகக் குறைவு. இரத்த சோகை வராமல் பார்த்துக் கொள்ளவும்.

கீரை வகைகள் ,கோழி ஈரல் , பேரிச்சம் பழம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்,

ஹிமோகுளோபின் அதிகரிக்க

வாரம் முன்று நாட்கள் மட்டனில் கிடைக்கும் மன்பத்தையை வாங்கி மிளகு சேர்த்து சுட்டு சாபிடுங்கள்

ஒரே மாதததில் கண்டிப்பாக உங்கள் ஹிமோகுளோபின் அளவு 6 லிருந்து 8 வரை வரும்.

இது என் தங்கைக்கு நான் செய்து கொடுத்தேன்

அதே போல் கீரை சூப், பருப்பு கீரை, மட்டன் கீரை போன்றவையும் வாரம் முன்று நாட்கள் சாப்பிடவும்

பேரித்தம் பழம் ஹல்வா போல் கிளறிவைத்து பிரட், சப்பாத்தியில் வைத்து சாப்பிடுங்கள்

( கோழி ஈரல் சாப்பிடலாமான்னு தெரியல அது சூடு அதிகம்) மட்டன் ஈரல் மற்றும் மன்பத்தை சாப்பிட்டலாம்.

Jaleelakamal

தோழி... இப்போ உங்க நிலையில் தான் நானும் இருக்கேன். கர்ப்பம் இல்லை, ஆனா அனீமிக். எனக்கு டாக்டர் சொன்னதை சொல்றேன்...

1. பேரீட்சம் பழம் சாப்பிடனும், அதை சாப்பிடும் போது அதில் உள்ள அயன் உடனடியாக உடலில் அப்சர்ப் ஆக ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் ஆசிட் உள்ள பழ ஜூஸ் குடிக்கணும்.

2. பெரிய நெல்லிகாய் சாப்பிடனும்.

3. தினம் கட்டாயம் ஒரு மாதுளை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடனும்.

4. கீரை தினசரி உணவில் கட்டாயம் இருக்கணும்.

5. சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கனும். கடலை மிட்டாய் சாப்பிடலாம்.

எல்லாமே அளவோடு மருத்துவ ஆலோசனைபடி எடுங்க, ஏன்னா நீங்க கர்ப்பம். ஒன்னும் கவலை வேண்டாம், மாதுளம் பழம் நல்ல வித்தியாசம் காட்டும்.

எனக்கு 6 அயன் ஊசி போட சொல்லி இருக்காங்க. உங்களுக்கு போடலாமான்னு தெரியல, டாக்டரை கேட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுதா தோழிகள் சொல்வது போல சாப்டுங்க அதோடு டீ காபி குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்க ஏனென்றால் அதில் உள்ள நச்சுப்பொருள் இரும்புசத்து உடம்பில் சேர விடாமல் தடுத்துவிடும் இது எனக்கு டாக்டர் சொன்ன அட்வைஸ்.

மேலும் சில பதிவுகள்