கேசரி

கேசரி செய்யும் போது ஜீனி போட்டு கிண்டும் போது கட்டி கட்டியாக ஆகிவிடுகிறது என்ன செய்ய?

ரவையை நன்றாக நெய்யில் வறுக்க வேண்டும் ,சீனி போடும் போது கை விடாமல் கிளர வேண்டும்.

நஸீம் வறுத்த ரவையை போடும் முன் தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். தண்ணீர் தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் தீயை நன்றாக குறைத்து சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே கை விடாமல் கிளறினால் கண்டிப்பாக கட்டிப்படாது. அப்பறம் ஒரு விஷயம் இது போன்ற சந்தேகங்களைக்கேட்க என்றே சின்ன சின்ன சந்தேகங்கள் என்ற இழை உள்ளது இனி அதிலேயே கேளுங்கள். தனி இழை துவங்க வேண்டாம் தோழி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thanx vani and nithya நான் ரவையை நன்றாக வருக்கவில்லை என்று நினைகிறேன்.அடுத்தமுறை நன்கு வறுத்து செய்துபார்கிறேன்.

Hai nithya //பொதுவாய் இனிப்பகங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வகை இனிப்பு, காரங்கள் செய்முறைப் பற்றி உங்களுக்கு எழும் சந்தேகங்களை இங்கே கேட்கலாம். அவை சம்பந்தமான, ஆரோக்கியமான விவாதங்களும் இங்கே நடத்தலாம். கேள்விகள் மட்டும்தான் கேட்க வேண்டும் என்று இல்லை. மற்றவர்களின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால், அதனைத் தெரிவிக்கலாம்.//
இதை பார்த்தபின் தான் இந்த பகுதில் நான் கேள்வி கேட்டேன்.கேசரியும் இனிப்பு வகை தானே.

ரவா கேசரி சிம்பிளான ரெசிபி, ஆனாலும் எனக்கும் பல முறை சொதப்பல் ஆகியிருக்கு.

இப்பல்லாம் சூப்பராக செய்து விடுகிறேன்.

பக்குவத்துக்கான சில குறிப்புகள்:

ரவையை சூடான நெய்யில் வறுக்க வேண்டும். நன்றாக சலசலவென்று வறுபட வேண்டும். மிதமான தணலில் வறுக்கணும்.

1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர், அதே போல 1 பங்கு ரவைக்கு 2 பங்கு சீனி.

தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ரவையை அதில் கொட்டி(தீ மிதமாக இருக்கணும், இது முக்கியம்) உப்புமாவுக்குக் கிளறுவது போல கிளறி, பதமாக வேக விடணும்.

ரவை ஒட்டாமல் வெந்த பிறகு, சீனியை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, கிளறணும். மொத்தமாக சீனியைக் கொட்டினால், கட்டிகள் ஆகி விடும். அதனால், சீனியை சீராக, பரவலாக, தூவி, கிளற வேண்டும்.

சீனி சேர்த்த பிறகு, கொஞ்ச நேரம் கிண்டினால் போதும். அதிக நேரம் கிளறினால், கேசரி முறுகி விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

எனக்கு கேசரிக்கு ஆர்டர் கிடைச்சிருக்கு. :-) முன்பு பல முறை செய்து இருக்கிறேன். சின்னவர்கள் பெரியவர்களான பின் (நாங்களும் வளர்ந்துட்டோம்ல!) கேசரி செய்யாமலே விட்டாச்சு. :-) இப்போ திரும்ப ஆசை வந்திருக்கு எல்லோருக்கும். உங்க குறிப்பை ட்ரை பண்ணப் போறேன்.

‍- இமா க்றிஸ்

தேன்குல்கந்து (HONEY ROSE JAM) எப்படி செய்வதுனு சொல்லுங்க‌ friends கடையில‌ வாங்குவது ஒவ்வோர் நேரம் ஒவ்வோர் test ல் இருக்கு

எல்லாம் நன்மைக்கே

http://www.arusuvai.com/tamil/node/30515

//கடையில‌ வாங்குவது ஒவ்வோர் நேரம் ஒவ்வோர் test ல் இருக்கு// நீங்கள் செய்தாலும் சுவை ரோஜாக்களைப் பொறுத்தும் கிடைக்கும் தேனைப் பொறுத்தும் மாறும்.

‍- இமா க்றிஸ்

எனக்கு எப்படி செய்யனும்னு சொல்லுங்க‌ தோழி

எல்லாம் நன்மைக்கே

http://www.arusuvai.com/tamil/node/30515 பாருங்க. ரோஜா குல்கந்து குறிப்பு லிங்க்தான் அது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்