ப்ரோக்கோலி ரோஸ்ட்

தேதி: November 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரோக்கோலி - ஒன்று
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ட்ரைட் தக்காளி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
ட்ரைட் அரிகானோ ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
ட்ரைட் கார்லிக் ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ப்ரோக்கோலியின் தண்டு சற்று நீளமாக இருந்தால் நல்லது.
தண்டோடு சேர்த்து ப்ரோக்கோலியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
வெண்ணெயை உருக்கி அதில் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை கலக்கிக் கொள்ளவும். ஃப்ளேக்ஸ் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.
ப்ரோக்கோலியை நன்றாக கலவையில் பிரட்டி, அவன் ட்ரேயில் அடுக்கவும்.
400 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 8 நிமிடம் வைத்து மீண்டும் ப்ரோக்கோலியை திருப்பி போடவும். ப்ராயிலில் 3 நிமிடம் வைக்கவும்.
மிகவும் சுவையான, சத்தான ப்ரோக்கோலி ரோஸ்ட் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ramya akka superb ah vandhirukku. brokollila fry lam pani asathirukinga. idhula fry pannlamnu unga kurippa pathu dhan therinjukiten. vazthukal...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரொம்ப வித்தியாசமான குறிப்பு. ஹெல்தியும் கூட. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரோஸ்ட் நல்லா செய்து இருக்கீங்க,ரம்யா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்ஸ் ரொம்ப அழகா செய்து ப்ரெசெண்ட் பண்ணி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு நன்றி ;)

ரேவதி
ரொம்ப நன்றி ;)

வனி
ரொம்ப நன்றி :)

முசி
;) நன்றிங்க

நித்யா
மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹெல்தி+வித்தியாசமான குறிப்பு.
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா