பாகற்காய் தொக்கு

தேதி: November 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பாகற்காய் - ஒன்று
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிது
தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடுகு, வெந்தயம், தனியா, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாகற்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் நீக்கி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்க்கவும்.
அதில் பாகற்காயை சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கவும்.
புளி தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு சுண்டி எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும்.
ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற வைக்கவும்.
சுவையான பாகற்காய் தொக்கு தயார். கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். ப்ரீஸ் செய்தால் ஒரு வருடம் கூட வைக்கலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். புது புளியில் செய்தால் நல்ல நிறம் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா பாகற்காய் தொக்கு நல்லா செய்து இருக்கிங்க, படங்களும் அழகு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவி, ஒரே தொக்கு மேளாவா இருக்கே.. அசத்துங்க.. தொக்கு எண்ணெய் மிதக்க சாப்பிட சொல்லி சுண்டி இழுக்குது. வீட்ல பாகற்காய் ப்ரோசன் ஸ்டாக் இருக்கு.. செய்து டேஸ்ட் பண்ணிட வேண்டியது தான். ஆரோக்கியமான, ருசியான குறிப்பு. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தொக்கு சூப்பரா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பருங்க... எல்லாம் சீசனுக்காக சேமிக்கவா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா எனக்கு ரொம்ப பிடிச்ச பாகற்காயில் தொக்கு செய்திருக்கீங்க. சூப்பர். படங்களும் ப்ரசென்டேஷனும் அழகு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கவி, ஆத்திர அவசரத்திற்கு உதவறமாதிரி ஒரு நல்ல குறிப்ப கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்,குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கல்பனா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி.
பிரெஷ் பாகற்காய் தான் இதற்கு சரியாக இருக்கும்.
முற்றல் காயில் போன முறை செய்து சரியாக வரவில்லை :(

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,
சரியாய் சொன்னீங்க!!!
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

பாகற்காய் தொக்கு ரொம்ப அருமையாக இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது .... படங்களும் அழகு !
வாழ்த்துக்கள் !!

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா