தக்காளி தால்

தேதி: September 11, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மசூர் பருப்பு - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/4 கப்
பொடியாக அரிந்த தக்காளி - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 3 பல்
பச்சைமிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - சிறிதளவு


 

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின் தக்காளியை போட்டு வதக்கவும்.
பின் மசூர் பருப்பு, போதிய தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள்தூள், சிறிதளவு சாம்பார்பொடி, சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
மூடியைத் திறந்ததும் உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
பின் சிறிது நேரம் கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்.


மசூர் பருப்பிற்கு பதில் துவரம் பருப்பு உபயோகப் படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்க குறிப்பில் இருந்து தக்காளி தால் செய்தேன்.வித்தியாசமான சுவையுடன் நல்லா இருந்தது.குறிப்புக்கு நன்றி.